பதிவு செய்த நாள்
02 ஏப்2017
04:25

புதுடில்லி;உள்நாட்டைச் சேர்ந்த மைக்ரோமேக்ஸ், ‘மொபைல் போன், டேப்லெட்’ சாதனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, இந்நிறுவனம், பிரீமியம் வகை ஸ்மார்ட் போன் விற்பனையில் களமிறங்கி உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் உயரதிகாரி ராகுல் சர்மா கூறியதாவது:நிறுவனம், அடுத்தகட்டமாக, பிரீமியம் வகை ஸ்மார்ட் போன் சந்தையில், முக்கிய பங்கு வகிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, ‘4ஜி’ தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடிய, ‘டுயல் 5’ என்ற புதிய பிரீமியம் போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை, 24 ஆயிரத்து, 999 ரூபாய். இந்த போனில், கேமரா, மொபைல் பயன்பாடு என, அனைத்தும் நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு உள்ளன. வரும் நிதியாண்டில், நிறுவனம், 25 சதவீதம் வளர்ச்சி காண திட்டமிட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|