பதிவு செய்த நாள்
11 ஏப்2017
23:51

புதுடில்லி : இந்தாண்டு, ஜன., – மார்ச் வரையிலான காலாண்டில், இ.எம்.இ.ஐ.ஏ., பிராந்தியம் மேற்கொண்ட பங்கு வெளியீடுகளில், இந்தியா, முதலிடம் பிடித்துள்ளது.
இ.எம்.இ.ஐ.ஏ., எனப்படும், ஐரோப்பா, மத்திய கிழக்கு, இந்தியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளின், புதிய பங்கு வெளியீடுகள் குறித்து, யர்னஸ்ட் யங் குளோபல் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அதில், இந்தியாவின் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், கடந்த மார்ச் வரையிலான காலாண்டில், 26 புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொண்டு, 61.90 கோடி டாலர் திரட்டி, முதலிடத்தை பிடித்திருப்பது தெரியவந்துள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், நான்கு நிறுவனங்கள், பங்குகளை வெளியிட்டு, 57.30 கோடி டாலர் திரட்டியுள்ளன; சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான சந்தையில், 24 நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 4.60 கோடி டாலர் திரட்டிக் கொண்டன. சர்வதேச அளவில், 369 புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 3,370 கோடி டாலர் திரட்டப்பட்டுள்ளது. அதில், அமெரிக்கா மட்டும், 34 பங்கு வெளியீடுகள் மூலம், 1,250 கோடி டாலர் திரட்டி, முதலிடத்தை பிடித்துள்ளது. இ.எம்.இ.ஐ.ஏ., 77 புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 520 கோடி டாலர் திரட்டியுள்ளது. இதில், இந்தியாவை அடுத்து, பிரிட்டன், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் உள்ளன. இவை, முறையே, 12 மற்றும் 7 புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொண்டுள்ளன.
புதிய பங்கு விற்பனையில், அதிக தொகை திரட்டிய நாடுகளில், ஸ்பெயின் முதலிடத்தில் உள்ளது. லண்டனில், பிரதான மற்றும் சிறிய நிறுவனங்களுக்கான, பங்குச் சந்தைகள், 12 புதிய பங்கு வெளியீடுகளில், 1,100 கோடி டாலர் திரட்டியுள்ளன; மும்பையில், 14 பங்கு வெளியீடுகளில், 40.70 கோடி டாலர் திரட்டப்பட்டுள்ளது. இந்தாண்டின் துவக்கத்தில், இ.எம்.இ.ஐ.ஏ., பிராந்தியத்தில், புதிய பங்கு வெளியீடுகளில் காணப்பட்ட எழுச்சி, இரண்டாவது காலாண்டிலும் தொடரும். சர்வதேச நிகழ்வுகள், ஆசிய – பசிபிக் பிராந்திய நிதிச் சந்தைகளில் எதிர்பார்த்ததை விட, சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதனால், சர்வதேச அளவிலும், இந்தாண்டு, புதிய பங்கு விற்பனையில் விறுவிறுப்பு கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புத்தாண்டு எழுச்சிசர்வதேச அரசியல், தெளிவின்றி காணப்படுகிறது. இந்த நிலையிலும், வெற்றிகரமான புதிய பங்கு வெளியீடுகள் மூலம், இந்தியா, இந்தாண்டை எழுச்சியுடன் துவக்கியுள்ளது. மத்திய அரசின் சிறப்பான நிர்வாகம், வரி சீர்திருத்தம், தொழில் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் ஆகியவை, முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோரின் நம்பிக்கையை சம்பாதித்துள்ளன. அதனால், இந்தாண்டு முழுவதும், புதிய பங்கு வெளியீடுகளுக்கு சிறந்த வரவேற்பு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.-விஷ் திங்ரா, செயல் இயக்குனர்,யர்னஸ்ட் யங் குளோபல்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|