பதிவு செய்த நாள்
21 ஏப்2017
23:51

மும்பை : ரிலையன்ஸ் – டி.சி.எஸ்., நிறுவனங்கள் இடையே, சந்தை மூலதனத்தில் முதலிடம் பிடிக்க, கடும் போட்டா போட்டி நிலவுகிறது.
நேற்று மதியம், பங்கு வர்த்தகத்தின் இடையே, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் விலை, 3.43 சதவீதம் உயர்ந்து, 1,416.40 ரூபாய்க்கு கைமாறியது. அப்போது, நிறுவனத்தின் சந்தை மூலதனம், 4,60,291 கோடி ரூபாயாக அதிகரித்தது. இதை விட, டி.சி.எஸ்., நிறுவனத்தின் சந்தை மூலதனம், 3,152 கோடி ரூபாய் குறைந்து, 4,57,139 கோடி ரூபாயாக இருந்தது.அதனால், ரிலையன்ஸ், சந்தை மூலதனத்தில், நான்கு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் முதலிடத்தை பிடித்தது. ஆனால், பங்கு வர்த்தகத்தின் முடிவில், டி.சி.எஸ்., சந்தை மூலதனம், 4,55,405 கோடி ரூபாயாகவும், அதை விட, ரிலையன்சின் சந்தை மூலதனம், 4,55,105 கோடி ரூபாயாகவும் குறைந்தன. இதன் காரணமாக, சந்தை மூலதனத்தில், டி.சி.எஸ்., மீண்டும் முதலிடத்தை பிடித்தது. எனினும், வரும் வாரத்தில், இந்த போட்டி முடிவுக்கு வந்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடம் பிடிக்கும் என, சந்தையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|