பதிவு செய்த நாள்
23 ஏப்2017
06:36

புதுடில்லி : யோகா குரு பாபா ராம்தேவுக்கு சொந்தமான, பதஞ்சலி நிறுவனம், உணவுப் பொருட்கள், மூலிகை, ஆயுர்வேத பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், உணவு பதப்படுத்துதல் தொழிலில், தன் சந்தை பங்களிப்பை அதிகரிக்க, விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா கூறியதாவது:பதஞ்சலி நிறுவனம், விரிவாக்க திட்டங்களுக்காக, 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இந்த நிதியில், புதிய ஆலைகள் அமைப்பதுடன், புதிய தயாரிப்புகளும் அறிமுகம் செய்யப்படும். உள்நாட்டில், உணவு பதப்படுத்துதல் துறையின் சந்தை மதிப்பு, 85 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. அதில், எங்கள் நிறுவனத்தின் பங்கு, 10 சதவீதம் என்றளவில் உள்ளது. இது, 20 சதவீதமாக அதிகரிக்கப்படும். கடந்த ஆண்டில், பதஞ்சலியின் விற்பனை, 10 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|