முக்கிய துறைகள் வளர்ச்சி மார்ச் மாதத்தில் அதிகரிப்புமுக்கிய துறைகள் வளர்ச்சி மார்ச் மாதத்தில் அதிகரிப்பு ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.11 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.11 ...
10 ஆயிரம் அமெரிக்கர்களுக்கு வேலை இன்போசிஸ் நிறுவனம் புதிய திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2017
07:45

புதுடில்லி : இன்­போ­சிஸ் நிறு­வ­னம், அமெ­ரிக்­கா­வில், நான்கு தொழில்­நுட்ப மையங்­களை அமைத்து, உள்­நாட்­டைச் சேர்ந்த, 10 ஆயி­ரம் பேரை பணி­ய­மர்த்த திட்­ட­மிட்டு உள்­ளது.அமெ­ரிக்க அரசு, வெளி­நாட்­டி­னரை பணிக்கு அமர்த்­தும், ‘எச் – 1பி’ விசா விதி­மு­றை­களை கடு­மை­யாக்கி உள்­ளது. இத­னால், அங்­குள்ள, இன்­போ­சிஸ், டி.சி.எஸ்., போன்ற நிறு­வ­னங்­க­ளுக்கு, இந்­தி­யா­வில் இருந்து சாப்ட்­வேர் வல்­லு­னர்­களை பணி­ய­மர்த்­து­வ­தற்­கான செல­வி­னம் அதி­க­ரித்­துள்­ளது. இதன் கார­ண­மாக, அந்­நி­று­வ­னங்­கள், உள்­நாட்­டைச் சேர்ந்த வல்­லு­னர்­க­ளுக்கு பயிற்சி அளித்து, பணி­ய­மர்த்த திட்­ட­மிட்டு உள்ளன. இந்த வகை­யில், இன்­போ­சிஸ் நிறு­வ­னம், அமெ­ரிக்­கா­வில், நான்கு தொழில்­நுட்­பம் மற்­றும் கண்­டு­பி­டிப்பு மையங்­களை அமைக்­க­வும், அதன் மூலம், 10 ஆயி­ரம் பேரை பணிக்கு அமர்த்­த­வும் திட்­ட­மிட்டு உள்­ளது.இதை தெரி­வித்த, இன்­போ­சிஸ் நிறு­வ­னத்­தின் தலைமை செயல் அதி­காரி விஷால் சிக்கா, ‘‘அமெ­ரிக்­கா­வின், ‘எச் – 1பி’ விசா கட்­டுப்­பா­டு­க­ளால், இத்­த­கைய முடி­விற்கு நிறு­வ­னம் வர­வில்லை,’’ என்­றார்.அவர், மேலும் கூறி­ய­தா­வது:கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக, செயற்கை நுண்­ண­றிவு, மெய்­நி­கர் செயல்­பாடு போன்ற புதிய தொழில்­நுட்­பங்­களின் பயன்­பாடு அதி­க­ரித்­துள்­ளது. பணி­யா­ளர்­கள் செய்­யும், சில பாரம்­ப­ரிய பணி­கள் கூட, தன்­னிச்­சை­யான செயல்­பா­டு­க­ளுக்கு மாறி வரு­கின்றன. அடுத்த தலை­மு­றைக்­கான இத்­த­கைய மாற்­றங்­களை சந்­திக்க, நாம் தயா­ராக வேண்­டும். வெளி­நாட்டு வல்­லு­னர்­க­ளு­டன், உள்­நாட்­டி­ன­ரும் இணைந்து செயல்­ப­டு­வது, ஆரோக்­கி­ய­மான வளர்ச்­சிக்கு வழி­வ­குக்­கும்.அதன்­படி, இன்­போ­சிஸ், அமெ­ரிக்­கா­வின் இன்­டி­யானா மாகா­ணத்­தில், அதன் முதல் தொழில்­நுட்­பம் மற்­றும் கண்­டு­பி­டிப்பு மையத்தை, ஆகஸ்­டில் துவக்க உள்­ளது. இம்­மை­யம், அமெ­ரிக்­கர்­க­ளுக்­காக, 2021ல், 2,000 வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கும். இது போல, மேலும் மூன்று மையங்­கள் அமைப்­பது குறித்து, அடுத்த சில மாதங்­களில் முடிவு செய்­யப்­படும்.இந்த மையங்­கள், தொழில்­நுட்­பம் மற்­றும் கண்­டு­பி­டிப்பு சார்ந்­த­வற்­றில் பயிற்சி அளிப்­ப­து­டன், நிதிச் சேவை­கள், தயா­ரிப்பு, ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு, சில்­லரை வணி­கம், எரி­சக்தி உள்­ளிட்ட துறை­க­ளைச் சேர்ந்த வாடிக்­கை­யா­ளர்­க­ளு­டன் இணைந்து செயல்­ப­ட­வும் துணை நிற்­கும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.
வருவாயில் பெரும் பங்கு• கடந்த, 2016 – 17ம் நிதி­யாண்­டில், இன்­போ­சிஸ் நிறு­வ­னம், 1,020 கோடி டாலர் வரு­வாய் ஈட்­டி­யது. அதில், 60 சத­வீத வரு­வாய், வட அமெ­ரிக்க சந்­தை­யில் இருந்து கிடைத்­துள்­ளது• இன்­போ­சிஸ் நிறு­வ­னத்­தில், 2 லட்­சத்­திற்­கும் அதி­க­மா­னோர் பணி­யாற்­று­கின்­ற­னர். கடந்த சில ஆண்­டு­களில், அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த, 2,000 பேர் பணி­ய­மர்த்­தப்­பட்டு உள்­ள­னர்• அமெ­ரிக்­கா­வில், அனு­ப­வம் உள்ள தொழில்­நுட்ப வல்­லு­னர்­கள், புதிய பட்­ட­தா­ரி­கள், உள்­ளூர் சமூக கல்­லுா­ரி­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் உள்­ளிட்ட, 10 ஆயி­ரம் பேரை, இன்­போ­சிஸ் பணி­ய­மர்த்த உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)