ஏ.சி.சி., – அம்புஜா சிமென்ட்ஸ் இணைப்பு முயற்சி துவக்கம்ஏ.சி.சி., – அம்புஜா சிமென்ட்ஸ் இணைப்பு முயற்சி துவக்கம் ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.25 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.25 ...
சிறிய, நடுத்தர தொழில்களில் ‘ரோபோ’ உலகளவில் சூடு பிடிக்கும் விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2017
04:09

புதுடில்லி : இந்­தியா உட்­பட, உல­க­ள­வில், சிறிய, நடுத்­தர தொழில் நிறு­வ­னங்­களில், ‘ரோபோ’ இயந்­தி­ரங்­கள் பயன்­பாடு பெருகி வரு­கிறது. தயா­ரிப்­புத் துறை சார்ந்த நிறு­வ­னங்­கள், அதி­க­ள­வில் இத்­த­கைய இயந்­தி­ரங்­களை பயன்­ப­டுத்தி, உற்­பத்­தியை அதி­க­ரித்து, செலவை குறைத்து வரு­கின்றன. இத­னால், ரோபோ தயா­ரிப்­பில், பல நிறு­வ­னங்­கள் கள­மி­றங்கி உள்ளன.டென்­மார்க்­கைச் சேர்ந்த, யுனி­வர்­சல் ரோபோட்ஸ் நிறு­வ­னம், இந்­தி­யா­வில் இது­வரை, 250 ரோபோக்­களை விற்­பனை செய்­துள்­ளது. இந்­நி­று­வ­னம், உண­வ­கங்­களில், முட்டை தோசை சுட்டு தரு­வது முதல், கண்­க­ளுக்­கான கேட்­ட­ராக்ட் லென்ஸ் தயா­ரிப்பு வரை, பல்­வேறு பணி­க­ளுக்கு தேவை­யான ரோபோக்­களை தயா­ரிக்­கிறது.வளர்ச்சிஉள்­நாட்­டில், பஜாஜ் ஆட்டோ, டி.வி.எஸ்., ஆப்­பிள் ஐபோன்­களை தயா­ரிக்­கும், விஸ்ட்­ரான் உள்­ளிட்ட நிறு­வ­னங்­கள், இதன் வாடிக்­கை­யா­ளர்­க­ளாக உள்­ள­னர்.இது குறித்து, யுனி­வர்­சல் ரோபோட்ஸ் நிறு­வ­னத்­தின், இந்­திய – இலங்கை பிரி­வின் தலை­வர் பிர­தீப் டேவிட் கூறி­ய­தா­வது:ரோபோக்­க­ளுக்­கான தேவை, பிர­மிக்­கத்­தக்க வகை­யில் அதி­க­ரித்து வரு­கிறது. கடந்த ஆண்டு, 75 ரோபோக்­களை விற்­பனை செய்­தோம். இந்­தாண்டு, 200 ரோபோக்­களை விற்­பனை செய்­வ­தற்­கான, ‘ஆர்­டர்’ கிடைத்­துள்­ளது. ஆண்­டு­தோ­றும், எங்­கள் விற்­பனை இரு மடங்கு உயர்ந்து வரு­கிறது.தற்­போது, சிறிய, நடுத்­தர தொழில்­க­ளுக்­கான ரோபோக்­களை தயா­ரிப்­ப­தற்கு, அதிக முக்­கி­யத்­து­வம் அளித்து வரு­கி­றோம்.பெரும் வரவேற்புஇவற்றை ரோபோ என்­பதை விட, அனைத்து வேலை­க­ளை­யும் ஒருங்­கி­ணைந்து செய்­யும் ஆற்­றல் கொண்ட, ‘கோபோட்ஸ்’ என, அழைப்­பது தான் பொருத்­த­மாக இருக்­கும்.நரம்­பி­யல் நிபு­ணர், பிசி­யோ­தெ­ர­பிஸ்ட், தலைமை சமை­யல் கலை­ஞர், மது பார் சேவை­யா­ளர் ஆகி­யோ­ருக்கு, இந்த கோபோட்ஸ் பெரி­தும் உத­வக் கூடி­ய­தாக உள்­ளது.இவற்­றின் விலை­யும் குறைவு என்­ப­தால், சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­களில், பெரும் வர­வேற்பு கிடைத்து வரு­கிறது. இந்த இயந்­தி­ரங்­கள், மேம்­பட்ட தரத்­தில், உற்­பத்தி மற்­றும் சேவை­களை வழங்­கு­வ­தும், இதற்கு கார­ணம்.நிறு­வ­னத்­தின் மொத்த விற்­ப­னை­யில், பெரிய நிறு­வ­னங்­கள், 70 சத­வீத பங்­க­ளிப்­பை­யும், சிறிய நிறு­வ­னங்­கள், 30 சத­வீத பங்­கை­யும் கொண்­டுள்ளன.இது, அடுத்த 2 – -3 ஆண்­டு­களில், தலை­கீ­ழாக மாறும். அந்த அள­விற்கு, சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­களில், கோபோட்ஸ்­களின் ஆதிக்­கம் பெருகி வரு­கிறது.மது­ரை­யில், கேட்­ட­ராக்ட் லென்ஸ் தயா­ரிப்பு நிறு­வ­னம், கோவை­யில், பம்பு செட் தயா­ரிக்­கும் நிறு­வ­னம், குஜ­ராத்­தில், ராணுவ தள­வா­டங்­களை தயா­ரிக்­கும் நிறு­வ­னம் ஆகி­யவை, எங்­கள் வாடிக்­கை­யா­ளர்­க­ளாக உள்ளன. ஜார்க்­கண்­டில், டிரக் உதிரி பாகங்­கள் தயா­ரிப்­பி­லும், எங்­கள் ரோபோ பங்­கெ­டுத்து வரு­கிறது.வாக­னம், நுகர்­பொ­ருள், மின்­னணு உள்­ளிட்ட துறை­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­கள், அதி­க­ள­வில் ஆர்­டர்­களை வழங்கி வரு­கின்றன.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)