பதிவு செய்த நாள்
10 மே2017
06:59

புதுடில்லி : உள்நாட்டில், கடந்த ஏப்., மாதம், பயணியர் வாகன விற்பனை, 2.77 லட்சமாக அதிகரித்துள்ளதாக, இந்திய மோட்டார் வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், 2.42 லட்சமாக குறைந்திருந்தது.
இதே மாதங்களின் ஒப்பீட்டில், கார்கள் விற்பனை, 17.36 சதவீதம் உயர்ந்து, 1.62 லட்சத்தில் இருந்து, 1.90 லட்சமாக அதிகரித்துள்ளது. இருசக்கர வாகன விற்பனை, 15.60 லட்சத்தில் இருந்து, 16.74 லட்சமாக உயர்ந்துள்ளது. அதில், மோட்டார் சைக்கிள் விற்பனை, 10.24 லட்சத்தில் இருந்து, 10.29 லட்சமாக அதிகரித்துள்ளது. அதே சமயம், வர்த்தக வாகனங்கள் விற்பனை, 22.93 சதவீதம் குறைந்து, 41,490 ஆக சரிவடைந்துள்ளது.கடந்த ஏப்ரலில், ஒட்டுமொத்த வாகனங்கள் விற்பனை, 20.30 லட்சமாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 19 லட்சமாக குறைந்திருந்ததாக, வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|