பதிவு செய்த நாள்
10 மே2017
16:22

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டன. வர்த்தகம் துவங்கிய சிறிது நேரத்திலேயே சென்செக்ஸ் மீண்டும் 30,000 புள்ளிகளை கடந்தது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 314.92 புள்ளிகள் உயர்ந்து 30,248.17 புள்ளிகளாகவும், நிப்டி 90.45 புள்ளிகள் உயர்ந்து 9407.30 புள்ளிகளாகவும் இருந்தன. காலை நேர வர்த்தகத்தின் போது சரிவுடன் காணப்பட்ட பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகள் பிற்பகலில் உயர துவங்கின.
இந்த ஆண்டு சராரிக்கும் அதிகமாக மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டின் வேளாண் உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்பதால் ஏற்பட்ட நம்பிக்கையே இந்திய பங்குச்சந்தைகளின் உயர்விற்கு காரணம் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|