பதிவு செய்த நாள்
14 மே2017
02:18

மும்பை : பின்கேர் குழுமத்தின் ஓர் அங்கமான டிஷா மைக்ரோபின் நிறுவனம், கிராமப்புறங்களில் நுண்கடன், குறுந்தொழில் கடன், தங்க நகை கடன், சிறிய வீடுகளுக்கு கடன் உள்ளிட்ட நிதிச் சேவைகளில் ஈடுபட்டுள்ளது.இந்நிறுவனம், ஸ்மால் பைனான்ஸ் பேங்க் துவங்க, ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இது குறித்து, பின்கேர் தலைமை செயல் அதிகாரி ராஜீவ் யாதவ் கூறியதாவது:பின்கேர் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் என்ற பெயரில், சிறிய வங்கிச் சேவை, வரும், ஜூலையில் துவங்கப்படும். ஏற்கனவே வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மாநிலங்களில், வங்கிக் கிளைகள் துவக்கப்படும். முன்னுரிமை துறைக்கு கடன் கொடுப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அத்துடன், தங்க நகை கடன், குறைந்த விலையுள்ள வீடுகளுக்கு கடன் வசதி வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.அடுத்த ஐந்து ஆண்டுகளில், பல்வேறு பிரிவுகளின் கீழ், 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|