பதிவு செய்த நாள்
18 மே2017
10:14
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்ப கடுமையாக சரிவடைந்துள்ளது. இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகள் இடையே டாலரின் தேவை அதிகரித்ததன் காரணமாகவும், இந்திய பங்குச்சந்தைகள் கடுமையான சரிவுடன் துவங்கியதாலும் ரூபாய் மதிப்பு சரிவடைந்ததற்கான காரணம் என கூறப்படுகிறது.இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (மே 18, காலை 9 மணி நிலவரம்) டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து 64.42 ஆக உள்ளது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாயின் மதிப்பு 64.15 ஆக இருந்தது. சமீப காலமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்து வரும் நிர்வாகம் சார்ந்த அதிரடி நடவடிக்கைகளால் அமெரிக்காவின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக டாலருக்கு எதிரான மற்ற நாடுகளின் நாணய மதிப்புக்கள் சரிவடைந்து காணப்படுகின்றன என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|