பதிவு செய்த நாள்
05 ஜூன்2017
10:56

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளில் சரிவுடன் ஆரம்பமான நிலையில் சற்று நேரத்தில் உயர்வுடன் வர்த்தகமாகின. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஜூன் 5-ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 40.64 புள்ளிகள் சரிந்து 31,232.65-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 11.75 புள்ளிகள் சரிந்து 9,641.75-ஆகவும் வர்த்தகமாகின. முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் ஆரம்பமாகின. இருப்பினும் சற்றுநேரத்தில் முன்னணி பங்குகள் சில உயர்ந்ததன் காரணமாக பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன. காலை 10.50 மணியளவில் சென்செக்ஸ் 20.20 புள்ளிகள் உயர்ந்து 31,293.31-ஆகவும், நிப்டி 14 புள்ளிகள் உயர்ந்து 9,667.60-ஆகவும் வர்த்தகமாகின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|