தங்கத்திற்கு 3 சதவீத ஜி.எஸ்.டி., ஆபரண நிறுவனங்கள் மகிழ்ச்சிதங்கத்திற்கு 3 சதவீத ஜி.எஸ்.டி., ஆபரண நிறுவனங்கள் மகிழ்ச்சி ... ரூபாயின் மதிப்பில் ஏற்ற - இறக்கம் ரூபாயின் மதிப்பில் ஏற்ற - இறக்கம் ...
இந்திய ஐ.டி., – பி.பி.எம்., சந்தை 35 ஆயிரம் கோடி டாலராக உயரும் : ‘நாஸ்­காம்’ மதிப்­பீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2017
04:13

மும்பை : ‘இந்­தி­யா­வின், ஐ.டி., – பி.பி.எம்., துறை­க­ளின் சந்தை மதிப்பு, 2025ல், 35 ஆயி­ரம் கோடி டால­ராக உய­ரும்’ என, இந்­திய சாப்ட்­வேர் மற்­றும் சேவை­கள் கூட்­ட­மைப்­பான, ‘நாஸ்­காம்’ மதிப்­பீடு செய்­துள்­ளது.இந்த அமைப்பு, கடந்த வாரம், அமெ­ரிக்­கா­வின் நியூ­யார்க் நக­ரில், பல்­வேறு துறை­க­ளைச் சார்ந்த நிறு­வ­னங்­க­ளின் தலைமை செயல் அதி­கா­ரி­கள் பங்­கேற்ற, சி.எக்ஸ்.ஓ., மாநாட்டை நடத்­தி­யது. இந்­தி­யா­விற்கு வெளியே, நாஸ்­காம் முதன்­மு­றை­யாக நடத்­திய இந்த மாநாட்­டில், ஐ.டி., எனப்­படும், தக­வல் தொழிற்­நுட்­பம் மற்­றும் அது சார்ந்த சேவை­களை வழங்­கும் நிறு­வ­னங்­களும், அச்­சே­வை­களை பெறும் நிறு­வ­னங்­களும் பெரு­ம­ள­வில் பங்­கேற்­றன.இந்த மாநாட்­டில், நாஸ்­காம் தலை­வர், ஆர்.சந்­தி­ர­சே­கர், திட்ட தலை­வர் கணேஷ் நட­ரா­ஜன், செயற்­குழு உறுப்­பி­ன­ரும், டபிள்யு.என்.எஸ்., குளோ­பல் சர்­வீ­சஸ் குழு­மத்­தின் தலைமை செயல் அதி­கா­ரி­யு­மான, முரு­கேஷ் உள்­ளிட்­டோர் கலந்து கொண்­ட­னர்.மாநாடு குறித்து, முரு­கேஷ் கூறி­ய­தா­வது:தொலைத் தொடர்பு, வங்கி, ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு, தொழிற்­நுட்ப தீர்­வு­கள், நுகர்­வோர் சாத­னங்­கள் உட்­பட, பல்­வேறு துறை­க­ளைச் சேர்ந்­த­வர்­களும், பிர­பல கல்­வி­யா­ளர்­களும், மாநாட்­டில் பங்­கேற்று பேசி­னர். அவர்­கள், தாங்­கள் சார்ந்த துறை­க­ளின் முன்­னேற்­றத்­திற்கு, ஐ.டி., மற்­றும் நிறு­வன செயல்­பா­டு­களை மேம்­ப­டுத்­தும், பி.பி.எம்., துறை­கள் எந்த அள­விற்கு பங்­க­ளிப்பை வழங்­கி­யுள்­ளன என்­ப­தை­யும், எதிர்­கா­லத்­தில், அத்­து­றை­க­ளுக்கு உள்ள முக்­கி­யத்­து­வத்­தை­யும் விரி­வாக எடுத்­து­ரைத்­த­னர்.அவர்­கள் ஆற்­றிய உரை, ஐ.டி., துறை­யின் எதிர்­கா­லம் குறித்த, அனைத்து தவ­றான ஊகங்­க­ளுக்­கும் முற்­றுப்­புள்ளி வைத்து, வளர்ச்­சியை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தது. அதன் அடிப்­ப­டை­யி­லும், பல்­வேறு கார­ணி­களை கொண்­டும், இந்­திய, ஐ.டி., மற்­றும் பி.பி.எம்., துறை­க­ளின் வளர்ச்சி கணிக்­கப்­பட்டு உள்­ளது. அதன்­படி, தற்­போது, 15,300 கோடி டால­ராக உள்ள இத்­து­றை­க­ளின் சந்தை மதிப்பு, 2025ல், 35 ஆயி­ரம் கோடி டால­ராக உய­ரும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.மாநாட்­டில் பங்­கேற்ற, வணிக நிறு­வ­னங்­க­ளின் தலை­வர்­கள், ‘பெருகி வரும் மின்­னணு தொழிற்­நுட்ப பயன்­பாடு, தனி­ந­பர்­கள், நிறு­வ­னங்­கள் மற்­றும் நாடு­க­ளுக்கு அப்­பாற்­பட்டு ஏற்­ப­டுத்­தி­யுள்ள தாக்­கம், பிர­மிக்க வைக்­கிறது’ என, தெரி­வித்­த­னர்.வர்த்­தக நடை­மு­றை­களில், டிஜிட்­டல் தொழிற்­நுட்­பங்­கள் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி வரு­வதை மறுக்க முடி­யாது. அவை, நம் வாழ்க்கை மற்­றும் பணிப் பாணி­களை மாற்­று­வ­தில் முக்­கிய பங்கு வகிக்­கின்­றன. வெற்­றி­க­ர­மான டிஜிட்­டல் சமூ­கத்தை உரு­வாக்க, ஒன்­று­பட்ட கூட்டு முயற்சி அவ­சி­யம் என, மாநாட்­டில் பங்­கேற்­றோர் வலி­யுறுத்­தி­னர்.இவ்­வாறு அவர் கூறி­னார்.


வேலைவாய்ப்புகடந்த ஓராண்­டில், இந்­திய, ஐ.டி., மற்­றும் பி.பி.எம்., எனப்­படும், நிறு­வன செயல்­பா­டு­களை மேம்­ப­டுத்­தும் துறை­களில், 1.70 லட்­சம் புதிய வேலை­வாய்ப்­பு­கள் உரு­வாகி உள்­ளன. இத்­து­றை­கள், மூன்று ஆண்­டு­களில், மொத்­தம், 6 லட்­சம் வேலை­வாய்ப்­பு­களை வழங்­கி­யுள்­ளன.– முரு­கேஷ் செயற்­குழு உறுப்­பி­னர், ‘நாஸ்­காம்’

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)