சரக்கு மற்றும் சேவை வரியை குறைக்க ஐ.டி., சாதன நிறுவனங்கள் கோரிக்கைசரக்கு மற்றும் சேவை வரியை குறைக்க ஐ.டி., சாதன நிறுவனங்கள் கோரிக்கை ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.39 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.39 ...
அன்­னிய நேரடி முத­லீட்டு விண்­ணப்­பம் மீது 60 நாட்­களில் முடிவு; மத்­திய அமைச்­ச­கங்­க­ளுக்கு அதி­ரடி உத்­த­ரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2017
05:29

புதுடில்லி: மத்­திய நிதி­ய­மைச்­ச­கம், அன்­னிய நேரடி முத­லீ­டு­கள் தொடர்­பாக வரும் விண்­ணப்­பங்­களை, 60 நாட்­க­ளுக்­குள் பரி­சீ­லித்து முடிவு எடுக்க வேண்­டும் என, அனைத்து அமைச்­ச­கங்­க­ளுக்­கும் சுற்­ற­றிக்கை அனுப்­பி­யுள்­ளது.

இத்­த­கைய, ஒற்றை சாளர நடை­மு­றை­யால், அன்­னிய நேரடி முத­லீட்டு திட்­டங்­க­ளுக்கு, விரை­வாக ஒப்­பு­தல் கிடைக்­கும் சூழல் உரு­வாகி உள்­ளது. இந்­தி­யா­வில், 1990களின் துவக்­கத்­தில் தாரா­ள­ம­ய­மாக்­கல் கொள்கை அறி­மு­க­மான போது, அன்­னிய நேரடி முத­லீட்டு திட்­டங்­களை பரி­சீ­லித்து ஒப்­பு­தல் வழங்க, எப்.ஐ.பி.பி., எனப்­படும், அன்­னிய முத­லீட்டு மேம்­பாட்டு வாரி­யம் அமைக்­கப்­பட்­டது.

மாற்றம்
இவ்­வா­ரி­யம், 1996ல் மறு­சீ­ர­மைக்­கப்­பட்டு, தலா, 600 கோடி ரூபாய் வரை­யி­லான திட்­டங்­க­ளுக்கு ஒப்­பு­தல் வழங்­கும் அதி­கா­ரம், டி.ஐ.பி.பி., எனப்­படும், தொழிற்­கொள்கை மற்­றும் மேம்­பாட்டு அமைப்­பிற்கு மாற்­றப்­பட்­டது. அது முதல், எப்.ஐ.பி.பி., அன்­னிய நேரடி முத­லீட்டு திட்­டங்­களை பரி­சீ­லித்து, அவற்­றின் மீதான பரிந்­து­ரை­களை வழங்கி வரு­கிறது.

இந்­நி­லை­யில், பிர­த­மர் மோடி தலை­மை­யி­லான மத்­திய அரசு, தொலை தொடர்பு, மொத்த விற்­பனை, பத்­தி­ரிகை உள்­ளிட்ட பெரும்­பா­லான துறை­களில், அரசு மற்­றும் ரிசர்வ் வங்கி அனு­ம­தி­யின்றி, நேர­டி­யாக அன்­னிய நேரடி முத­லீட்­டிற்கு அனு­மதி வழங்­கி­யது. இதை­ய­டுத்து, தொலை தொடர்பு, வங்கி, பாது­காப்பு, சில்­லரை விற்­பனை உள்­ளிட்ட, 11 துறை­களில் மட்­டுமே, அன்­னிய நேரடி முத­லீடு மேற்­கொள்ள, அரசு அனு­மதி தேவை என்ற நிலை ஏற்­பட்­டுள்­ளது.

சீரான நடைமுறை
அத­னால், கடந்த மாதம் மத்­திய அமைச்­ச­ர­வைக் குழு கூடி, 25 ஆண்­டு­ க­ளாக இயங்கி வந்த, எப்.ஐ.பி.பி., அமைப்பை கலைக்க ஒப்­பு­தல் அளித்­தது. இனி, சம்­பந்­தப்­பட்ட அமைச்­ச­கங்­களே, அன்­னிய நேரடி முத­லீட்டு விண்­ணப்­பங்­களை பரி­சீ­லித்து, முடிவு எடுக்­க­லாம்.
இது தொடர்­பாக, மத்­திய நிதி­ய­மைச்­ச­கம், அனைத்து அமைச்­ச­கங்­க­ளுக்­கும் அனுப்­பி­யுள்ள சுற்­ற­றிக்கை: எப்.ஐ.பி.பி., கலைப்­பைத் தொடர்ந்து, இனி அன்­னிய நேரடி முத­லீட்டு விண்­ணப்­பங்­களை பரி­சீ­லித்து முடிவு எடுக்­கும் பொறுப்பு, சம்­பந்­தப்­பட்ட அமைச்­ச­கங்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­படும். விண்­ணப்­பங்­களை, 60 நாட்­க­ளுக்­குள் பரி­சீ­லித்து முடிவு எடுக்க வேண்­டும். விண்­ணப்­பங்­களை நிரா­க­ரிக்­கும்­பட்­சத்­தில், அதற்­கான ஒத்­தி­சைவை, டி.ஐ.பி.பி.,யிடம் பெற வேண்­டும்.

தொழில் துறை அமைச்­ச­கம், அனைத்து அமைச்­ச­கங்­களின் நிர்­வாகப் பிரி­வு­டன் கலந்­தா­லோ­சித்து, அன்­னிய நேரடி முத­லீட்டு திட்­டங்­களை பரி­சீ­லிப்­ப­தற்­கான, வழி­காட்டு நெறி­களை விரை­வில் வெளி­யி­டும். இது, அனைத்து துறை­களும், ஒரே சீரான நடை­மு­றையை பின்­பற்ற உத­வும். வெளி­நாடு வாழ் இந்­தி­யர்­களின் முத­லீ­டு­கள் குறித்து, டி.ஐ.பி.பி., முடி­வெ­டுக்­கும். அரசு அனு­மதி தேவைப்­ப­டாத துறை­களில், அதே சம­யம் உள்­நாட்டு பாது­காப்பு சார்ந்த அன்­னிய நேரடி முத­லீட்டு திட்­டங்­களை மட்­டும், மத்­திய உள்­துறை அமைச்­ச­கம் பரி­சீ­லிக்­கும். இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)