இயற்கை உணவு பொருட்களுக்கு சான்றிதழ் வர்த்தக -– வேளாண் அமைச்சகங்கள் ஆய்வுஇயற்கை உணவு பொருட்களுக்கு சான்றிதழ் வர்த்தக -– வேளாண் அமைச்சகங்கள் ஆய்வு ... இந்திய ரூபாய் மதிப்பில் கடும் சரிவு : 64.72 இந்திய ரூபாய் மதிப்பில் கடும் சரிவு : 64.72 ...
‘வலைதளத்தில் மொபைல் போன் வாங்குவது போல மியூச்சுவல் பண்டு முதலீடுகள் சுலபமாகணும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2017
22:45

மும்பை : ‘‘வலை­த­ளம் மூலம் மொபைல் போன்­களை வாங்­கு­வது போல, மியூச்­சு­வல் பண்­டு­களில் சுல­ப­மாக முத­லீடு செய்­யும் வகை­யில், விதி­மு­றை­களை எளி­மை­யாக்க வேண்­டும்,’’ என, ரிலை­யன்ஸ் கேப்­பிட்­டல் நிறு­வ­னத்­தின் தலை­வர் அனில் அம்­பானி, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’க்கு கோரிக்கை விடுத்­துள்­ளார்.அவர், மேலும் பேசி­ய­தா­வது:இதர நாடு­க­ளு­டன் ஒப்­பி­டும் போது, மியூச்­சு­வல் பண்டு முத­லீ­டு­களில், இந்­தியா பின்­தங்கி உள்­ளது. சர்­வ­தேச அள­வில், 58 மியூச்­சு­வல் பண்டு நிறு­வ­னங்­கள் நிர்­வ­கிக்­கும் சொத்து மதிப்பு, இந்­தி­யா­வின் ஒட்­டு­மொத்த மியூச்­சு­வல் பண்டு துறை நிர்­வ­கிப்­பதை விட அதி­கம்.நம் நாட்­டில், 10ல், 9 பேரி­டம் மொபைல் போன் உள்­ளது; மூன்று பேரி­டம், ஸ்மார்ட் போன் உள்­ளது. ஆனால், 25 பேரில் ஒரு­வர் தான், மியூச்­சு­வல் பண்­டு­களில் முத­லீடு செய்­கி­றார்; இந்­நிலை மாற வேண்­டும். மியூச்­சு­வல் பண்டு முத­லீ­டு­களில் ஆர்­வத்தை ஏற்­ப­டுத்த வேண்­டும். அதற்கு, முத­லீட்டு விதி­மு­றை­களை, ‘செபி’ மேலும் எளி­மை­யாக்க வேண்­டும். அத்­து­டன், விளம்­ப­ரங்­க­ளுக்கு உள்ள கட்­டுப்­பா­டு­க­ளை­யும் தளர்த்த வேண்­டும்.இந்த நிலை­யி­லும், மியூச்­சு­வல் பண்டு துறை, வேக­மாக வளர்ச்சி பெற்று வரு­கிறது.எனி­னும், மியூச்­சு­வல் பண்டு முத­லீட்டு விதி­மு­றை­களை மேலும் எளி­மை­யாக்­கி­னால், அடுத்த ஐந்து ஆண்­டு­ களில், இத்­துறை, 10 மடங்கு வளர்ச்சி காணும்.வங்­கி­கள், கே.ஒய்.சி., எனப்­படும், வாடிக்­கை­யா­ளரை தெரிந்து கொள்­வது தொடர்­பான விதி­களை பின்­பற்­று­வோ­ருக்கே, வங்­கிக் கணக்கை துவக்கி தரு­கின்றன.அத­னால், வங்­கிக் கணக்கு வைத்­துள்ள யாவ­ரும், நேர­டி­யாக மியூச்­சு­வல் பண்டு திட்­டங்­களில் முத­லீடு செய்ய அனு­ம­திக்­க­லாம். இது, மியூச்­சு­வல் பண்டு முத­லீ­டு­களை மேலும் சுல­ப­மாக்­கும். அது போல, விளம்­ப­ரங்­க­ளுக்­கான விதி­மு­றை­களை எளி­மை­யாக்­கி­னால், மியூச்­சு­வல் பண்டு திட்­டங்­களின் மதிப்பு, பர­வ­லாக பல­ரை­யும் சென்­ற­டை­யும்.கடந்த, 1964ல், இந்­தி­யா­வின் முதல் மியூச்­சு­வல் பண்டு நிறு­வ­ன­மான, யு.டி.ஐ., துவங்­கப்­பட்­டது. அடுத்த, 30 ஆண்­டு­கள் வரை, தனி­யார் நிறு­வ­னம் எது­வும் இத்­து­றை­யில் நுழை­ய­வில்லை. நாங்­கள், ஷியாம் கோத்­தா­ரி­யு­டன் இணைந்து, 1993ல், கோத்­தாரி பய­னீர் மியூச்­சு­வல் பண்டு நிறு­வ­னத்தை துவக்கி, இத்­து­றை­யில் நுழைந்த, முதல் தனி­யார் நிறு­வ­னம் என்ற சிறப்பை பெற்­றோம்.கடந்த, 1995ல், மியூச்­சு­வல் பண்டு திட்­டங்­களின் கீழ் நிர்­வ­கித்த சொத்து மதிப்பு, 60 கோடி ரூபா­யாக இருந்­தது; இது, தற்­போது, 2.25 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.இதே காலத்­தில், இந்­திய மியூச்­சு­வல் பண்டு துறை நிர்­வ­கித்த சொத்து மதிப்பு, 20 லட்­சம் கோடி ரூபா­யாக ஏற்­றம் கண்­டுள்­ளது.அது போல, இத்­து­றை­யில் தனி­ந­பர் முத­லீட்­டா­ளர் எண்­ணிக்கை, 6 கோடி­யில் இருந்து, அடுத்த ஐந்து ஆண்­டு­களில், அதா­வது, 75வது சுதந்­திர தின ஆண்­டில், 60 கோடி­யாக உய­ரும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)