எல் அண்டு டி நிறுவனத்துக்கு புதிய தலைமை செயல் அதிகாரிஎல் அண்டு டி நிறுவனத்துக்கு புதிய தலைமை செயல் அதிகாரி ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைவு ...
ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச சில்லரை விற்பனை விலை கட்டாயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2017
00:54

புதுடில்லி : ‘ஆன்­லைன்’ மூலம் விற்­பனை செய்­யப்­படும் பொருட்­க­ளுக்கு, 2018 முதல், அதி­க­பட்ச சில்­லரை விற்­பனை விலை உள்­ளிட்ட, தேவை­யான விப­ரங்­களை கட்­டா­யம் குறிப்­பிட வேண்­டும் என, விதி­மு­றை­களில் திருத்­தம் வர இருக்­கிறது.

பொது­வாக, ‘ஆன்­லைன்’ மூலம் விற்­பனை செய்­யப்­படும் பொருட்­களில், பெரும்­பா­லா­ன­வைக்கு, அதி­க­பட்ச சில்­லரை விலை உள்­ளிட்ட விப­ரங்­கள் தரப்­ப­டு­வ­தில்லை. ஆனால், இனி இத்­த­கைய தக­வல்­களை தெரி­விக்க வேண்­டி­யது கட்­டா­ய­மாக்­கப்­பட உள்­ளது. அதே போல், மருத்­துவ சாத­ன­மாக கரு­தப்­பட்டு வந்த, ‘ஸ்டென்ட்ஸ்’ உள்­ளிட்­டவை மருந்து பொரு­ளாக அறி­விக்­கப்­பட்­டதை அடுத்து, அவற்­றுக்­கும் அதி­க­பட்ச சில்­லரை விற்­பனை விலை உள்­ளிட்ட, தேவை­யான அனைத்து தக­வல்­க­ளை­யும் கட்­டா­யம் தர வேண்­டும் என்ற நிலை உரு­வாகி உள்­ளது.

மத்­திய உணவு மற்­றும் நுகர்­வோர் விவ­கா­ரத் துறை அமைச்­சர் ராம்­வி­லாஸ் பஸ்­வான், ‘பேக்­கேஜ்’ செய்­யப்­பட்ட பொருட்­க­ளுக்­கான எடை அள­வு­கள் விதி – 2011ல், திருத்­தங்­க­ளுக்­கான ஒப்­பு­தலை வழங்கி இருக்­கி­றார். இந்த திருத்­தங்­கள், 2018 ஜன., 1 முதல் அம­லுக்கு வரு­கிறது. ‘பேக்­கிங்’ செய்­யப்­ப­டு­வ­தற்கு முன், பொருட்­களின் லேபி­ளில், என்­னென்ன தக­வல்­கள் தரப்­பட வேண்­டும் என்­பது குறித்த விதி­களை, இந்த புதிய சட்­டத்­தி­ருத்­தம் வகுத்து கொடுத்­துள்­ளது.

இதன்­படி, மின்­னணு வர்த்­தக நிறு­வ­னங்­கள் விற்­பனை செய்­யும் பொருட்­கள் மற்­றும் மருந்­தாக கரு­தப்­படும் என, அறி­விக்­கப்­பட்ட மருத்­துவ சாத­னங்­கள் ஆகி­ய­வற்­றுக்கு, புதிய திருத்­தங்­கள் படி, லேபி­ளில் கூடு­தல் தக­வல்­களை வழங்க வேண்­டி­ய­தி­ருக்­கும்.

இது குறித்து, அரசு தரப்­பில் கூறப்­ப­டு­வ­தா­வது: நுகர்­வோ­ரின் நலன் காக்­கும் வகை­யி­லும், எளி­தாக தொழில் செய்­வ­தற்கு ஏற்­ற­தா­க­வும், இந்த திருத்­தங்­கள் இருக்­கும். அது­மட்­டு­மின்றி, ஒரே பொரு­ளுக்கு இரண்டு வித­மான அதி­க­பட்ச சில்­லரை விற்­பனை விலை இருக்­கும் நிலை­யை­யும் தடுக்­கும்.இத­னால், யாரும் வெவ்­வேறு வித­மான அதி­க­பட்ச சில்­லரை விலையை பயன்­ப­டுத்த முடி­யாது. ஏதா­வது ஒரு சட்­டம், அப்­படி இரட்டை சில்­லரை விலைக்கு அனு­மதி வழங்கி இருந்­தால் ஒழிய, இனி இரட்டை சில்­லரை விற்­பனை விலைக்கு வழி இருக்­காது.

சினிமா தியேட்­டர்­கள், மால்­கள், விமான நிலை­யங்­கள் ஆகிய இடங்­க­ளி­லும் இனி, இரட்டை சில்­லரை விலை குறித்த பிரச்­னை­கள் இருக்­காது. ‘ஆன்­லைன்’ மூலம் பொருட்­களை விற்­பனை செய்­யும் விற்­ப­னை­யா­ளர்­கள், தயா­ரிப்­பா­ள­ரின் பெயர், முக­வரி, சில்­லரை விற்­பனை விலை, நுகர்­வோர் எங்கு புகார் செய்ய வேண்­டும் என்ற தக­வல் உள்­ளிட்ட தக­வல்­களை தரு­வது கட்­டா­ய­மாக்­கப்­படும்.

மேலும், லேபி­ளில் உள்ள எழுத்துக்கள், பெரும்­பா­லும் படிக்க முடி­யாத அள­வுக்கு சிறி­தாக அச்­சி­டப்­ப­டு­வதை மாற்றி, பெரிய எழுத்­துக்­களில் எளி­தாக வாசிக்­கும்­படி அச்­சிட வேண்­டும். ‘பார்­கோ­டிங், கியூ.ஆர்., கோடிங்’ போன்ற வச­தி­களை, விருப்­பப்­பட்­டால் சேர்த்­துக் கொள்­ள­லாம். இவ்­வாறு அரசு தரப்­பில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

மருத்­துவ சாத­னங்­கள்:
மருத்­துவ சாத­னங்­களை பொறுத்­த­வரை, ஸ்டென்ட், வால்வு, சிரிஞ்சு, உட­லி­னுள் வைக்­கப்­படும் செயற்கை பொருட்­கள் போன்­ற­வற்­றுக்­கான விலை குறித்து, பல புகார்­கள் வரு­கின்றன. வாங்க இருக்­கும் நுகர்­வோ­ரின் வச­தியை பொறுத்து, அவற்­றின் விலை சொல்­லப்­ப­டு­வ­தாக குற்­றச்­சாட்­டு­கள் வரு­கின்றன. சில­வற்­றுக்கு, அதி­க­பட்ச சில்­லரை விலையை நிர்­ண­யித்த பின்­னும் கூட, அவற்றை குறிப்­பி­டா­மல் இருக்­கின்­ற­னர். இவற்றை களை­யும் வகை­யில், புதிய சட்­டத்­தி­ருத்­தங்­கள் இருக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)