பதிவு செய்த நாள்
05 ஜூலை2017
00:03
புதுடில்லி : கடந்த ஜூனில், ஜி.எஸ்.டி., வரி விதிப்பை எதிர்நோக்கி, பலர், வாகனம் வாங்கும் திட்டத்தை தள்ளி வைத்தனர். அதனால், வாகன விற்பனை குறையும் என, எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு மாறாக, பெரும்பான்மையான இருசக்கர வாகன நிறுவனங்களின் விற்பனை, வளர்ச்சி கண்டுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இருசக்கர வாகன விற்பனை, ஜூனில், 14 சதவீதம் உயர்ந்து, 6.24 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 5.50 லட்சம் ஆக இருந்தது. இதே காலத்தில், டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் இருசக்கர வாகன விற்பனை, 2.4௦ லட்சத்திலிருந்து, 2.67 லட்சம் ஆக அதிகரித்துள்ளது.
ஹோண்டா மோட்டார் அண்டு ஸ்கூட்டர் நிறுவனத்தின் இருசக்கர வாகன விற்பனை, 4.27 லட்சத்திலிருந்து, 4.44 லட்சமாக ஏற்றம் கண்டுள்ளது. இதே காலத்தில், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் விற்பனை, 25 சதவீதம் குறைந்து, 2.73 லட்சத்திலிருந்து, 2.04 லட்சமாக சரிவடைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|