பதிவு செய்த நாள்
06 ஜூலை2017
22:37

புதுடில்லி : ‘இ – வாலட்’ நிறுவனமான, ‘பேடிஎம்’ தங்கம் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள, எம்.எம்.டி.சி----., பேம்ப் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து, கடந்த மே மாதம், ‘டிஜிட்டல் தங்கம்’ வாங்கும் வசதியை அறிமுகப்படுத்தியது.இதையடுத்து, பேடிஎம், இரு மாதங்களில், 100 கிலோ தங்கத்தை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.இது குறித்து, ‘பேடிஎம்’ மூத்த துணைத் தலைவர் கிருஷ்ணா ஹெக்டே கூறுகையில், ‘‘குறைந்த விலையில் தரமான தங்கம் கிடைப்பதால், ‘டிஜிட்டல் தங்கம்’ சேவை, சிறிய நகரங்களிலும் வேகமாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள், 1 டன் டிஜிட்டல் தங்கத்தை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்து உள்ளோம்,’’ என்றார்.‘பேடிஎம்’ மூலம், வாடிக்கையாளர்கள், சுத்தமான தங்கத்தை, ஒரு ரூபாய்க்கு கூட வாங்கும் வசதி உள்ளது. விரும்பும் போது, எம்.எம்.டி.சி., மூலமாகவே அந்த தங்கத்தை விற்கலாம் அல்லது தங்க நாணயமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.இந்தியாவில் அதிகளவில் தங்கம் பயன்படுத்தப்படுகிறது. 90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 24 ஆயிரம் டன் தங்கம், வீடுகள் மற்றும் பேங்க் லாக்கர்களில் உள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|