தங்கம் விலை காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.72 சரிவுதங்கம் விலை காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.72 சரிவு ... ஜி.எஸ்.டி.,கேள்விகள் ஆயிரம் ஜி.எஸ்.டி.,கேள்விகள் ஆயிரம் ...
ரூ.500க்கு 4ஜி ஸ்மார்ட்போன்: ஜியோ அடுத்த அதிரடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2017
17:09

புதுடில்லி: மிகக் குறைந்த கட்டணத்தில் டேட்டா வழங்கி மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களை அதிர்ச்சி அடைய வைத்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அடுத்த அதிரடிக்கு தயாராகி உள்ளது.

ஜியோ அறிவித்த குறைந்த விலையில் 4ஜி டேட்டா திட்டத்தால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 112.55 மில்லியனை எட்டி உள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக ரூ.500 க்கு 4ஜி மொபைல்போன்களை விற்பனை செய்ய ஜியோ திட்டமிட்டுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டம் ஜூலை 21 ம் தேதி நடக்க உள்ளது. அன்றைய தினம் அல்லது ஆகஸ்ட் துவக்கத்தில் இத்திட்டத்தை ஜியோ முறைப்படி அறிமுகம் செய்ய உள்ளது. ரூ.1000 க்கு மொபைல் போன்களை விற்பனை செய்ய ஜியோ திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், எதிர்ப்பார்ப்புக்களை விட மேலும் விலையை குறைத்து, ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு கொண்டு வர உள்ளது ஜியோ.

ஆகஸ்ட் 15 அன்று தங்களின் புதிய திட்டத்தை துவக்கவும், ஜியோ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களை கவருவதற்காக 2ஜி வாடிக்கையாளர்கள் இந்த புதிய போன் மூலம் நேரடியாக 4ஜி க்கு தங்களை மாற்றிக் கொள்ளலாம். இதன் விலை ரூ.500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே இந்த குறைந்த விலை ஸ்மார்ட்போனை விற்பனை செய்ய ஜியோ திட்டமிட்டுள்ளது. இருந்தாலும் 2ஜி வாடிக்கையாளர்கள் தங்களை 4ஜி க்கு மாற்றி கொள்வதற்காக இந்த போனை அதிகம் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன் ஜியோ, தனது ‛டன் டனா டன்' சலுகையின் புதிய திட்டத்தின் ஆரம்ப விலையை மாதத்திற்கு ரூ.150 ஆக நிர்ணயித்துள்ளது. மேலும் ரூ.80 முதல் 90 என்ற சலுகை கட்டண திட்டத்தையும் ஜியோ அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது டன் டனா டன் திட்டத்தில் ரூ.309 அல்லது ரூ.509 க்கு இலவச வாய்ஸ், அளவில்லா எஸ்.எம்.எஸ், ஜியோ ஆப்ஸ், தினமும் 1 முதல் 2 ஜிபி டேட்டா சேவையை வழங்கி வருகிறது.

பிரைம் உறுப்பினர்களுக்கு இந்த சேவை ரூ.99 க்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)