நுண்ணுாட்ட சத்து உணவு பொருட்களின் தர கட்டுப்பாட்டு விதிகள் மறுபரிசீலனைநுண்ணுாட்ட சத்து உணவு பொருட்களின் தர கட்டுப்பாட்டு விதிகள் மறுபரிசீலனை ... தனியார் கார் ‘ஷேர்’ திட்டம்: மத்திய அரசு பரிசீலனை தனியார் கார் ‘ஷேர்’ திட்டம்: மத்திய அரசு பரிசீலனை ...
ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2017
06:18

விற்­பனை மற்­றும் சேவையை, ஒரே விலைப் பட்­டி­ய­லில் குறிப்­பி­ட­லாமா?– மணி­கண்­டன், போரூர்

ஜி.எஸ்.டி., அமைப்­பில், சேவை மற்­றும் விற்­பனை என்ற பாகு­பாடு கிடை­யாது. இவற்றை, ‘வழங்­கல்’ என்ற பொரு­ளால் குறிப்­பி­டு­கி­றோம். எனவே, ஒரே விலைப் பட்­டி­ய­லில் சேவை மற்­றும் விற்­ப­னையை, வழங்­கல் எனக் குறிப்­பிட்டு, விலைப் பட்­டி­யலை எழுப்­ப­லாம்.

தற்­போது நான், ​​‘கிரெ­டிட் கார்டு’ உப­யோ­கித்து வரு­கி­றேன். கிரெ­டிட் கார்டு மூலம் வாங்­கிய பொருட்­க­ளுக்கு, குறித்த தவணை தினத்­தில் தொகையை செலுத்தி விடு­கி­றேன். இனி, கிரெ­டிட் கார்டு தொகைக்­கும், 18 சத­வீ­தம், ஜி.எஸ்.டி., வரும் என, குறு​ஞ்செய்தி மூல­மா­க­வும்​, ‘வாட்ஸ் அப்’ ​மூல­மா­க­வும் நிறைய தக­வல்­கள் வரு­கின்றன. இதை பற்றி, தய­வு­கூர்ந்து விளக்­க­வும்.
– இந்­து­மதி​,​ தேனி

இது, முற்­றி­லும் தவ­றான கருத்து​.​ நீங்­கள் செலுத்­தும், கிரெ­டிட் கார்டு தொகைக்கு, ​​​​​ஜி.எஸ்.டி., விதிக்­கப்­ப­ட­மாட்­டாது. தவணை தினத்­தில் தொகையை செலுத்த தவ­றி­னால்​,​ நீங்­கள் செலுத்த வேண்­டிய வட்­டித் தொகை அல்­லது அப­ரா­தத் தொகைக்கு மட்­டுமே, ​​ஜி.எஸ்.டி., விதிக்­கப்­படும்.
தற்­போது, எங்­க­ளுக்கு கலால் மற்­றும் ‘வாட்’ வரி­யின் உள்­ளீட்டு பயன் உள்­ளது. இவை, ஜி.எஸ்.டி., சட்­டத்­தில் எத்­த­கைய உள்­ளீட்டு பய­னாக அமை­யும்?– கவிதா, தஞ்­சா­வூர்

தற்­போ­துள்ள, கலால் வரி மற்­றும் சேவை வரி­யின் உள்­ளீட்டு வரி பயன், சி.ஜி.எஸ்.டி.,யாக­வும், மாநில, ‘வாட்’ வரி­யின் உள்­ளீட்டு வரி பயன், எஸ்.ஜி.எஸ்.டி.,யாக­வும், ஜி.எஸ்.டி., அமைப்­பில் கிடைக்­கும்.

நான், நகைக் கடை வைத்­துள்­ளேன். சில நேரங்­களில், வாடிக்­கை­யா­ளர்­கள் பழைய நகை­களை கொடுத்து, அதற்கு நிக­ராக பணமோ அல்­லது புதிய நகை­க­ளையோ பெற்­றுச் செல்­வர். இத்­த­கைய பரி­வர்த்­த­னைக்கு, நான், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில் வரி செலுத்த வேண்­டுமா?– பாலாஜி, சேலம்

இத்­த­கைய பரி­வர்த்­தனை, சாமா­னிய மக்­க­ளால் செய்­யப்­படும் பரி­வர்த்­த­னை­யா­கும். இது, ஒரு வியா­பார நிமித்­த­மான பரி­வர்த்­த­னை­யாக கரு­தப்­ப­டாது. எனவே, இதில், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை கிடை­யாது.
நாங்­கள், சென்­னை­யி­லி­ருந்து மும்­பைக்கு சென்று, அங்கே சில பேப்­ரி­கே­ஷன் வேலை­கள் செய்து, இயந்­தி­ரங்­களை நிறுவி வரு­கி­றோம். இத்­த­கைய செய­லுக்கு எத்­தனை சத­வீ­தம், ஜி.எஸ்.டி., வசூல் செய்ய வேண்­டும்?– முகேஷ், சென்னை

இதற்கு நீங்­கள், 18 சத­வீ­தம் ஒருங்­கி­ணைந்த, ஜி.எஸ்.டி., வசூல் செய்ய வேண்­டும்.
நான், சேவை வரியை வாடிக்­கை­யா­ள­ரி­ட­மி­ருந்து பணம் வசூல் செய்த பின் தான் செலுத்தி வந்­தேன். தற்­போது, ஜி.எஸ்.டி.,யில் பணம் வசூல் செய்­ய­வில்லை என்­றா­லும் செலுத்த வேண்­டும் என்­கின்­ற­னர். இது குறித்து விளக்­க­வும்.– மெர்சி டிர­டேர்ஸ், கோவை

ஜி.எஸ்.டி.,யை, வழங்­கல் நடந்த, அடுத்த மாதம், 20க்குள் செலுத்த வேண்­டும். வாடிக்­கை­யா­ள­ரி­ட­மி­ருந்து பணம் பெறா­விட்­டா­லும், குவிப்பு அடிப்­ப­டை­யில் செலுத்த வேண்­டும்.

தனி­ந­பர், ஜி.எஸ்.டி., கட்டி வாங்­கும் பொருட்­க­ளுக்கு, வரு­மான வரிச்­ச­லுகை உண்டா?– சித்­தார்த், வேலுார்

வரு­மான வரி என்­பது, ஒரு நேரடி வரி விதிப்­பா­கும். ஜி.எஸ்.டி., என்­பது, மறை­முக வரி­யா­கும். இவை இரண்­டும், இரு வேறு சட்­டங்­க­ளால் ஆளப்­ப­டு­கின்றன. தனி­ந­பர் தன் நுகர்­விற்­காக, ஜி.எஸ்.டி., செலுத்­திய தொகையை, வரு­மான வரி செலுத்­தும் போது, உள்­ளீட்டு சலு­கை­யாக பெற இய­லாது.
ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)