சிமென்ட் விலை 6 சதவீதம் உயரும்; ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ் மதிப்பீடுசிமென்ட் விலை 6 சதவீதம் உயரும்; ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ் மதிப்பீடு ... இந்திய ரூபாய் மதிப்பில் மாற்றமில்லை : 64.44 இந்திய ரூபாய் மதிப்பில் மாற்றமில்லை : 64.44 ...
இயற்கை எரிவாயு வர்த்தக மையம் இந்தியாவில் அமைக்க முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2017
23:41

புது­டில்லி : ‘‘குழாய் வாயி­லான இயற்கை எரி­வாயு வினி­யோ­கத்தை, அடுத்த, 3 – 4 ஆண்­டு­களில், இரு மடங்கு உயர்த்தி, 30 ஆயி­ரம் கி.மீ., ஆக அதி­க­ரிக்க திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது,’’ என, மத்­திய பெட்­ரோ­லிய துறை அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான் தெரி­வித்து உள்­ளார். அவர், துருக்­கி­யில் நடை­பெற்ற, 22வது சர்­வ­தேச பெட்­ரே­ாலிய துறை மாநாட்­டில் பேசி­யதை, அமைச்­ச­கம் வெளி­யிட்­டுள்­ளது.

அதன் விப­ரம்: இந்­திய இயற்கை எரி­வாயு துறை­யில், மேலும் அதிக சீர்­தி­ருத்­தங்­கள் வர உள்ளன. பசுமை குடில் வாயுக்­க­ளை­யும், கச்சா எண்­ணெய் இறக்­கு­ம­தி­யை­யும் குறைத்து, இயற்கை எரி­வாயு சார்ந்த பொரு­ளா­தா­ரத்தை உரு­வாக்க உள்­ளோம். துாய்மை­யான சுற்­றுச்­சூ­ழ­லுக்கு ஏற்ற எரி­பொ­ருட்­களை ஊக்­கு­வித்து, 2030க்குள், காற்று மாசு­பாட்டை, மூன்­றில் ஒரு பங்கு குறைக்க திட்­ட­மிட்டு உள்­ளோம்.

இதற்­காக, இயற்கை எரி­வாயு வள ஆய்வு மற்­றும் உற்­பத்­தி­யில், அன்­னிய முத­லீ­டு­களை ஈர்க்­கும் முயற்­சி­கள் நடை­பெற்று வரு­கின்றன. அவற்­றில் ஒன்­றாக, உள்­நாட்­டில், இயற்கை எரி­வா­யு­விற்கு சிறந்த விலை கிடைக்க வேண்­டும் என்ற நோக்­கத்­தில், இயற்கை எரி­வாயு வர்த்­தக மையம் அமைக்க முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது. இந்த மையத்­தில், நிறு­வ­னங்­கள் உற்­பத்தி செய்­யும் இயற்கை எரி­வா­யுவை விற்­பனை செய்­ய­லாம்.

தற்­போது, இயற்கை எரி­வாயு உப­ரி­யாக உள்ள நாடு­களில் நில­வும் விலைக்­கேற்ப, இந்­தி­யா­வில், மத்­திய அர­சின் விதி­மு­றைப்­படி, இயற்கை எரி­வாயு விலை நிர்­ண­யிக்­கப்­ப­டு­கிறது. ஆனால், நீண்ட கால ஒப்­பந்­தப்­படி இறக்­கு­ம­தி­யா­கும் இயற்கை எரி­வா­யு­வின் விலை, சர்­வ­தேச கச்சா எண்­ணெய் விலைக்கு ஏற்ப நிர்­ண­யம் செய்­யப்­ப­டு­கிறது. இந்த மாறு­பாடு கார­ண­மாக, இந்­தி­யா­வில், எரி­வாயு வள ஆய்­வி­லும், உற்­பத்­தி­யி­லும் முத­லீடு செய்ய, அன்­னிய நிறு­வ­னங்­கள் தயங்­கு­வ­தாக கூறப்­ப­டு­கிறது. அவை, இயற்கை எரி­வா­யு­வின் விலையை, சந்தை தான் தீர்­மா­னிக்க வேண்­டும் என, விரும்­பு­கின்றன. இதை­யொட்டி, இயற்கை எரி­வாயு வர்த்­த­கத்­திற்கு, பிரத்­யேக தளம் அமைத்­துக் கொடுக்­கப்­படும்.

வரும் ஆண்­டு­களில், தேசிய அள­வில், குழாய் வாயி­லான இயற்கை எரி­வாயு வினி­யோ­கம், 30 ஆயி­ரம் கி.மீ., ஆக அதி­க­ரிக்­கப்­படும். உல­க­ள­வில், கச்சா எண்­ணெய் பயன்­பாட்­டில், இந்­தியா மூன்­றா­வது இடத்­தில் உள்­ளது. உள்­நாட்டு தேவை­யில், 80 சத­வீ­தம் இறக்­கு­மதி மூலம் பூர்த்தி செய்து கொள்­ளப்­ப­டு­கிறது. இதில், 10 சத­வீ­தத்தை, 2022க்குள் குறைக்க திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

இந்­திய எண்­ணெய் மற்­றும் எரி­வாயு துறை­யில் முத­லீடு செய்ய, சர்­வ­தேச நிறு­வ­னங்­களை அழைக்­கி­றோம். இத்­து­றை­யில், பல்­வேறு சீர்­தி­ருத்­தங்­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்றன. திறந்­த­வெளி உரிம கொள்­கைப்­படி, 28 லட்­சம் சதுர கி.மீ., பரப்­பில், விருப்­ப­மான பகு­தியை, இயற்கை எரி­வாயு வள ஆய்­வுக்கு, நிறு­வ­னங்­கள் தேர்வு செய்து கொள்­ள­லாம்.
-பெட்­ரோ­லிய துறை அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான், துருக்கி பெட்­ரோ­லிய துறை மாநாட்­டில் பேசி­யது...

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)