பதிவு செய்த நாள்
26 ஜூலை2017
06:43

மும்பை : தர நிர்ணய நிறுவமான, ‘பிட்ச்’ வெளியிட்டுள்ள அறிக்கை: ரிலையன்ஸ், செப்டம்பரில் வெளியிட உள்ள, விலையற்ற, ‘ஆர்ஜியோ போன்’ மூலம், கூடுதலாக, 10 கோடி வாடிக்கையாளர்களை பெறும். இதனால், 2018ல், வருவாய் சந்தை பங்கு, 10 சதவீதம் உயரும். தொலை தொடர்பு சேவை துறையின் ஆண்டு வருவாய், 3 – 4 சதவீதம், அதாவது, 95 கோடி டாலர் அளவிற்கு அதிகரிக்கும்.
முதன்முறையாக, ‘4ஜி’ தொழிற்நுட்பத்தை பயன்படுத்துவோர், ஆர்ஜியோவின் வருவாய் சந்தையின் பங்களிப்பை அதிகரிக்க துணை புரிவர். கிராமப்புறங்களில், ‘2ஜி’ மொபைல் போன்களின் பயன்பாடு முடிவிற்கு வரும். ஆர்ஜியோவின், மாதம், 153 ரூபாய் கட்டணம், தற்போது கிராமப்புறத்தில், தனிநபர் ஒருவர், தொலை தொடர்பு சேவைக்காக செலவிடுவதை விட, 50 சதவீதம் அதிகம்.
இதனால், ஆர்ஜியோவின் வருவாய் உயரும். அதிகளவில் இலவச அழைப்புகளும், தகவல் பரிமாற்றங்களும் நடைபெறும் என்பதால், போட்டி நிறுவனங்களின் வருவாயும் பெருகும். ஒட்டுமொத்த அளவில், சரிவடைந்து வந்த தொலை தொடர்பு சேவை நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|