பதிவு செய்த நாள்
01 ஆக2017
06:53
புதுடில்லி : அமெரிக்காவைச் சேர்ந்த, தர நிர்ணய நிறுவனமான, ‘மூடிஸ்’ வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, அடுத்த, 12 – 18 மாதங்களில், 6.5 –7.5 சதவீதமாக உயரும். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட, குறுகிய கால பாதிப்பில் இருந்து நாடு விடுபட்டு, வேகமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு, மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் துணை புரிந்து வருகின்றன. ஜி.எஸ்.டி., அறிமுகம் காரணமாக, நாடு, ஏற்கனவே மதிப்பிட்டதை விட, வேகமாக வளர்ச்சி காணும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 2016 – 17ம் நிதியாண்டில், 7.5 சதவீதத்தில் இருந்து, நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டில், 7.7 சதவீதமாக உயரும். இது, அடுத்த மூன்று ஆண்டுகளில், 8 சதவீதமாக அதிகரிக்கும். எனினும், மின்சாரம், உருக்கு மற்றும் அடிப்படை கட்டமைப்பு துறைகளின் வாராக்கடன், இந்திய வங்கி துறைக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாகவே இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|