வேளாண் பொருட்களை விற்க ‘இ – ராகம்’ வலைதளம் அறிமுகம்வேளாண் பொருட்களை விற்க ‘இ – ராகம்’ வலைதளம் அறிமுகம் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு ...
ஜி.எஸ்.டி., – விலை குறைப்பால் வாகனங்கள் விற்பனை அமோகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2017
00:03

புதுடில்லி : கடந்த ஜூலை­யில், உள்­நாட்டு வாகன விற்­ப­னை­யில், முன்­னணி நிறு­வ­னங்­கள், இரட்டை இலக்க வளர்ச்­சியை கண்­டுள்ளன. இதற்கு, நிறு­வ­னங்­களின் விலை குறைப்பு, அம­லுக்கு வந்­துள்ள, ஜி.எஸ்.டி., ஆகி­யவை துணை புரிந்­துள்ளன.

ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி அம­லுக்கு வரும் முன், முக­வர்­க­ளி­டம் தேங்­கி­யுள்ள வாக­னங்­களை விரைந்து விற்­பனை செய்­வ­தற்­காக, பல நிறு­வ­னங்­கள், 5,000 ரூபாய் – 7 லட்­சம் ரூபாய் வரை, விலையை குறைத்­தன. அத­னால், வாக­னங்­கள் விற்­பனை அதி­க­ரித்­தது. அதே சம­யம், நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து வாக­னங்­களை கொள்­மு­தல் செய்­வதை, முக­வர்­கள் தள்ளி வைத்­த­னர்.

இந்­நி­லை­யில், ஜூலை­யில், ஜி.எஸ்.டி., அம­லுக்கு வந்­ததை தொடர்ந்து, முக­வர்­கள் மீண்­டும் சுறு­சு­றுப்­பாக வாக­னங்­களை கொள்­மு­தல் செய்ய துவங்கி உள்­ள­னர். வாகன தயா­ரிப்பு நிறு­வ­னங்­களும், ஜி.எஸ்.டி.,யால் பெற்ற வரி பயனை, நுகர்­வோ­ருக்கு அளித்­துள்ளன. இத­னால், ஜூலை­யில், வாகன தயா­ரிப்பு நிறு­வ­னங்­களின் விற்­பனை அமோ­க­மாக இருந்­தது.
அதன் விப­ரம்:
மாருதி சுசூகி இந்­தியா: ஜூலை­யில், இதன் உள்­நாட்டு வாகன விற்­பனை, 22.4 சத­வீ­தம் உயர்ந்து, 1.54 லட்­ச­மாக அதி­க­ரித்­து உள்­ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்­தில், 1.26 லட்­ச­மாக இருந்­தது.
டாடா மோட்­டார்ஸ்: இந்­நி­று­வ­னத்­தின் உள்­நாட்டு பய­ணி­யர் வாகன விற்­பனை, 10.23 சத­வீ­தம் வளர்ச்சி கண்டு, 13,547 லிருந்து, 14,933 ஆக உயர்ந்­துள்­ளது.
போர்டு இந்­தியா: இதன் உள்­நாட்டு வாகன விற்­பனை, 18.96 சத­வீ­தம் அதி­க­ரித்து, 7,076லிருந்து, 8,418 ஆக உயர்ந்­து உள்­ளது.
ஹூண்­டாய் மோட்­டார் இந்­தியா: ஜூலை­யில், இந்­நி­று­வ­னத்­தின் உள்­நாட்டு வாகன விற்­பனை, 43,007 ஆக உயர்ந்­துள்­ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்­தில், 41,201 ஆக இருந்­தது.
மகிந்­திரா அண்டு மகிந்­திரா: இந்­நி­று­வ­னத்­தின் பய­ணி­யர் வாகன விற்­பனை, 13 சத­வீ­தம் வளர்ச்சி கண்டு, 35,305லிருந்து, 39,762 ஆக உயர்ந்­துள்­ளது.
ஹோண்டா கார்ஸ் இந்­தியா: இதன் கார் விற்­பனை, ஜூலை­யில், 21.74 சத­வீ­தம் உயர்ந்து, 17,085 ஆக அதி­க­ரித்­துள்­ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்­தில், 14,033 ஆக இருந்­தது.
அசோக் லேலாண்டு: இதன் மொத்த வாகன விற்­பனை, 14.19 சத­வீ­தம் அதி­க­ரித்து, 10,492லிருந்து, 11,981 ஆக உயர்ந்­துள்­ளது. இந்­தாண்டு பரு­வ­மழை நன்கு இருக்­கும் என்ற கணிப்­பும், எதிர் வரும் பண்­டிகை கால­மும், வாகன விற்­ப­னையை மேலும் அதி­க­ரிக்க துணை புரி­யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
இருசக்கர வாகனம்
ஹீரோ மோட்டோகார்ப்:இந்­நி­று­வ­னத்­தின் இரு­சக்­கர வாகன விற்­பனை, ஜூலையில் 17.13 சத­வீ­தம் அதி­க­ரித்து, 5,32,113லிருந்து, 6,23,269 ஆக வளர்ச்சி கண்­டுள்­ளது.
ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா :இதன் இரு­சக்­கர வாகன விற்­பனை, 19.96 சத­வீ­தம் ஏற்­றம் கண்டு, 4,53,884லிருந்து, 5,44,508 ஆக உயர்ந்­துள்­ளது
ராயல் என்பீல்டு:இதன் விற்­பனை, 20.75 சத­வீ­தம் உயர்ந்து, 53,378லிருந்து, 64,459 ஆக அதி­க­ரித்­துள்­ளது.
டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனி:இந்­நி­று­வ­னத்­தின் இரு­சக்­கர வாகன விற்­பனை, 9.34 சத­வீ­தம் உயர்ந்து, 2,48,002லிருந்து, 2,71,171 ஆக அதி­க­ரித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)