மின்னணு தொழிற்நுட்பத்தை பின்பற்ற இந்திய நிறுவனங்கள் முன்னுரிமைமின்னணு தொழிற்நுட்பத்தை பின்பற்ற இந்திய நிறுவனங்கள் முன்னுரிமை ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைவு ...
நெடுஞ்சாலையோர உணவகம், கடைகள்; மத்திய அரசின் புதிய திட்டங்கள் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2017
06:56

புதுடில்லி : மத்­திய அரசு, வேலை­வாய்ப்பை உரு­வாக்­க­வும், முத­லீ­டு­களை ஈர்க்­க­வும், வியா­பா­ரம் புரி­வ­தற்­கான வச­தி­களை ஏற்­ப­டுத்­த­வும், ‘தேசிய நெடுஞ்­சாலை கிரா­மம்’ மற்­றும் ‘தேசிய நெடுஞ்­சாலை கூடு’ என்ற இரண்டு திட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­ உள்­ளது.

மும்­பை­யில், இத்­திட்­டங்­க­ளுக்­கான சின்­னங்­களை அறி­மு­கப்­ப­டுத்தி, மத்­திய சாலை போக்­கு­வ­ரத்து மற்­றும் நெடுஞ்­சா­லை­கள் துறை அமைச்­சர் நிதின் கட்­கரி பேசி­ய­தா­வது: இந்த இரு திட்­டங்­களின் கீழ், வாக­னங்­களில் தொலை­துா­ரப் பய­ணம் மேற்­கொள்­வோர், சரக்கு லாரி ஓட்­டு­னர்­கள் ஆகி­யோ­ருக்­காக, தேசிய நெடுஞ்­சாலை ஓரங்­களில், உண­வ­கம், தங்­கு­மி­டம், பொழு­து­போக்கு வச­தி­கள் கொண்ட சிறிய பகு­தி­கள் உரு­வாக்­கப்­படும்.

அமெ­ரிக்கா, ஜெர்­மனி போன்ற நாடு­களில், தேசிய நெடுஞ்­சா­லை­களின் ஓரம், ஆங்­காங்கே பய­ணியர் தங்கி இளைப்­பா­றுவ­தற்கு விடு­தி­களும், உண­வ­கங்­களும் உள்ளன. அது­ போல, இந்­தி­யா­வில், தேசிய நெடுஞ்­சாலை ஓரங்­களில், ஒவ்­வொரு, 50 கி.மீ., துாரத்­தி­லும், அனைத்து வச­தி­கள், தங்­கு­மி­டம், உண­வ­கம், பெட்­ரோல் நிலை­யம் கொண்ட பகு­தி­கள் அமைக்­கப்­படும். இங்கு, உள்­ளூ­ரில் புகழ் பெற்ற கைவி­னைப் பொருட்­கள், பழங்­கள் போன்­ற­வை­யும் கிடைக்­கும்.

உதா­ர­ண­மாக, நாக்­பூர் தேசிய நெடுஞ்­சா­லை­யில் பய­ணிக்­கும் போது, பிர­சித்தி பெற்ற ஆரஞ்சு பழங்­களை ருசிக்­க­லாம். நாசிக் வழியே சென்­றால், திராட்சை பழங்­க­ளை­யும், ஹிமாச்­சல பிர­தே­சத்­தில்,ஆப்­பிள்­க­ளை­யும் வாங்­க­லாம். இந்த கிரா­மங்­களை அமைக்க, முத­லீட்­டா­ளர்­கள் மட்­டு­மின்றி, நெடுஞ்­சாலை ஓரம் நிலம் வைத்­துள்­ளோ­ரும், அர­சு­டன் கைகோர்க்­க­லாம். 1 ஹெக்­ட­ருக்கு மேல் வைத்­துள்ள நில உரி­மை­யா­ளர்­கள், இத்­திட்­டத்­தில் இணை­வ­தற்கு, செப்., 21 வரை விண்­ணப்­பிக்­க­லாம். இந்த கிரா­மங்­க­ளுக்­கான இல­வச அணுகு சாலை, எரி­வாயு மற்­றும் பெட்­ரோல் நிலை­யங்­கள் அமைத்­தல் உள்­ளிட்ட வச­தி­களை, அரசு செய்து தரும்.

‘நெடுஞ்­சாலை கிரா­மம்’ 5 ஹெக்­ட­ருக்கு மேற்­பட்ட நிலப் பகு­தி­யி­லும், ‘நெடுஞ்­சாலை கூடு’ 5 ஹெக்­ட­ருக்கு உட்­பட்ட இடத்­தி­லும் அமைக்­கப்­படும்.இது போன்ற வச­தி­கள், முதற்­கட்­ட­மாக, நாடு முழு­வ­தும் தேசிய நெடுஞ்­சாலை ஓரங்­களில், 1,000 இடங்­களில் ஏற்­ப­டுத்­தப்­படும். தேசிய நெடுஞ்­சா­லை­களில் பிர­யா­ணம் செய்­வோர், சரக்கு லாரி ஓட்­டு­னர்­கள் உள்­ளிட்­டோ­ரின் வச­திக்­கான இத்­திட்­டம், முத­லீ­டு­க­ளுக்கு நல்ல வாய்ப்­பா­கும். அத்­து­டன், உள்­ளூரில் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கும். அப்­ப­குதி சார்ந்த சிறிய வியா­பா­ரங்­களை ஊக்­கு­வித்து, உள்­ளூர் மக்­களின் நிதி­யா­தா­ரம் பெரு­க­வும் வழி வகுக்­கும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

முதலீட்டாளர்கள் வரவேற்கப்படுகின்றனர்:
தேசிய நெடுஞ்­சாலை ஓரங்­களில், உண­வ­கம், தங்­கு­மி­டம், கடை­கள் உள்­ளிட்­ட­வற்றை அமைக்­கும் திட்­டத்­திற்­காக, முத­லீட்­டா­ளர்­கள் வர­வேற்­கப்­ப­டு­கின்­ற­னர். அங்­கீ­கா­ரம் உள்ள, ‘லே அவுட்’ வைத்­தி­ருப்­போ­ரும், இத்­திட்­டங்­களில் இணை­ய­லாம். இந்த இரு திட்­டங்­களின் கீழ் பல்­வேறு வச­தி­களை ஏற்­ப­டுத்த, தேசிய நெடுஞ்­சாலை ஆணை­யத்­திற்கு சொந்­த­மாக உள்ள, 200 பகு­தி­கள் தேர்வு செய்­யப்­பட்­டுள்ளன. அவற்­றில், 34 பகு­தி­களில், தனி­யார் முத­லீட்­டிற்­கான ஒப்­பந்த புள்­ளி­கள் கோரப்­பட்­டுள்ளன. அடுத்த மாதம், 119 இடங்­க­ளுக்­கான ஒப்­பந்த புள்­ளி­கள் வெளி­யி­டப்­பட உள்ளன.
-தீபக் குமார், தலை­வர், தேசிய நெடுஞ்­சாலை ஆணை­யம்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)