காலணி தயாரிப்பில் சீனாவை விஞ்சும் இந்தியாகாலணி தயாரிப்பில் சீனாவை விஞ்சும் இந்தியா ... பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
யானை பசிக்கு சோளப் பொரி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2017
08:18

நோய்க்­கான மருந்தை துளி­ து­ளி­யாக கொடுப்­பது சரியா? வலி­மை­யான மருந்­தைக் கொடுத்து, உட­ன­டி­யாக மீட்­பது சரியா? நோயின் தன்­மை­யைப் பொறுத்து, மருத்­து­வர்­கள் இந்த முடிவை எடுக்­கக்­கூ­டும். பொரு­ளா­தா­ரம் குண­மாக, ஹெவி டோஸேஜ் தான் தேவை. ஆனால், சமீ­பத்­திய ரெப்போ வட்டி குறைப்போ, ரொம்ப சாதா டோஸேஜ் என்­பது நிபு­ணர்­களின் கருத்து.
மத்­திய ரிசர்வ் வங்கி, வங்­கி­க­ளுக்­குத் தரும் கடன் தொகைக்­கான வட்டி விகி­தத்தை, 6.25 சத­வீ­தத்­தில் இருந்து, 6 சத­வீ­த­மாக சமீ­பத்­தில் குறைத்­தது. இத­னால், வீட்­டுக்­க­டன், வாக­னக் கடன்­க­ளுக்­கான வட்டி விகி­தங்­கள் குறை­யக்­கூ­டும் என்­பது எதிர்­பார்ப்பு. ஆனால், பாரத ஸ்டேட் வங்­கி­யின் தலை­வர் அருந்­ததி பட்­டாச்­சா­ரி­யாவோ, வட்டி விகி­தங்­கள் குறை­யாது என்று சொல்­லி­விட்­டார். இன்­னும் ஒரு படி முன்­னேறி, வழக்­க­மான சேமிப்­புக் கணக்­கு­க­ளுக்கு வழங்­கப்­பட்ட, 4 சத­வீ­த வட்­டி­யை­யும், 3.55 சத­வீத­மாக குறைத்­து­விட்­டது, எஸ்.பி.ஐ., மற்ற வங்­கி­களும் இதைப் பின்­பற்­றப் போவது உறுதி.
வட்டி விகிதம் குறையும்இத­னால், வழக்­க­மான வைப்பு நிதிக்­கான வட்டி விகி­தங்­கள் குறை­யும். ஓய்­வூ­தி­யர்­களும், முதி­ய­வர்­களும் நம்­பி­யி­ருப்­பது வைப்பு நிதி­யைத்­தான். அவர்­க­ளுக்கு இது பெரிய இடி. வட்டி விகி­தங்­கள் குறை­வ­தன் கார­ண­மாக, மக்­கள் பங்­குச் சந்தை, பரஸ்­பர நிதி ஆகி­ய­வற்றை நோக்கி நகர்­வர் என்­பது கணிப்பு. பாது­காப்­பான முத­லீ­டு­களை மட்­டுமே நம்­பும் போக்கு இந்­தி­யா­வில் அதி­கம். ரிஸ்க் எடுக்க ஓய்­வூ­தி­ய­ர்­கள் ரொம்­பவே தயங்­கு­வர்­. இன்­னும் இரண்டு விஷ­யங்­கள் முக்­கி­ய­மா­னவை. ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகு­ராம் ராஜ­னும் சரி, இப்­போ­தைய கவர்னர் உர்­ஜித் படே­லும் சரி, ஒரு குறை­யைச் சுட்­டிக்­காட்­டு­கி­ன்றனர்.
வட்டி விகி­தங்­கள் குறைக்­கப்­பட்­டால், அதன் பலன் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு முழு­மை­யா­கப் போய் சேரு­வ­தில்லை என்­பதே அவர்­க­ளு­டைய குற்­றச்­சாட்டு. போட்­டி­கள் மிகுந்த துறை­யான வீட்­டுக் கடன், வாக­னக் கடன்­களில் மட்­டும் வட்டி விகி­தங்­கள் குறைக்­கப்­ப­டு­கின்றன. முன்பு, பேஸ் ரேட் என்ற நிலை­யி­லி­ருந்து மாறி, எம்.சி.எல்.ஆர்., என்ற அடிப்­ப­டையை ஒட்டி, வீட்­டுக்­க­ட­னுக்­கான வட்டி விகி­தம் நிர்­ண­யிக்­கப்­பட்­டது.
எம்.சி.எல்.ஆர்., நடை­மு­றை­யின் மூல­மும் பய­னாளர்­க­ளுக்கு உரிய பயன் போய் ­சே­ர­வில்லை, அத­னால், இதை­யும் மறு­ப­ரி­சீ­லனை செய்­ய­வேண்­டும் என்­பது உர்­ஜித் படே­லின் கருத்து. பத்­தாண்­டு­க­ளுக்கு முன், நிலை­யான வட்டி, மாறு­படும் வட்டி என்று இரண்டு விகி­தங்­கள் இருந்­தன. 2006 சம­யத்­தில், வட்டி விகி­தங்­கள் கடு­மை­யா­கக் குறைந்­தன. நிலை­யான வட்டி, 7 சத­வீதம் அள­வுக்கு வீழ்ந்­தது.
மிக அதிக வட்டிமாறு­படும் வட்டி விகி­தம் இதற்­கும் கீழ். பல­ரும் தைரி­ய­மாக வீடு­கள் வாங்க முடிந்­தது. அதை­விட, மாறு­படும் வட்டி விகி­தத்­தி­லி­ருந்து நிலை­யான வட்டி விகி­தத்­துக்கு மாறிக்­கொண்டு, விரை­வில் கடனை அடைத்­த­வர்­களும் உண்டு.தற்­போது, நிலை­யான வட்டி விகி­தத்தை எந்த வங்­கி­யும் தரு­வ­தில்லை. தந்­தா­லும், அது மிக மிக அதிக வட்டி. வாழ்க்கை முழு­வ­தும் வட்­டி கட்­டிக்­கொண்டு வாழு­வ­தற்கு இந்­தி­யர்­கள் என்ன அமெ­ரிக்­கர்­களா? மாறு­படும் வட்­டி­யின் பல்­வேறு கோர முகங்­கள்­ தான் பேஸ் ரேட் என்­ப­தும், எம்.சி.எல்.ஆர்., என்­ப­தும். நீண்­ட­கால அள­வில் வங்­கி­கள் லாபம் ஈட்­டு­வ­தற்கு போடப்­பட்ட தூண்­டில் இது.
வாராக் கடன் சுமைரிசர்வ் வங்கி குறைத்­துள்ள வட்டி விகி­தத்­தால், தொழில் வளர்ச்சி உய­ருமா; வரு­வாய் பெரு­குமா? இங்­கே­ தான் சிக்­கலே. மிகப்­பெ­ரும் நிறு­வ­னங்­கள், கடன் பெற வங்­கி­க­ளுக்கு வரு­வ­தில்லை. தனி­யார் முத­லீட்­டா­ளர்­க­ளி­ட­மி­ருந்து வங்கி தரும் வட்­டி­யை­ வி­டக் குறை­வான வட்­டி­யில் கடன் பெற முடி­யும். வங்­கிக் கடனை நம்­பி­யி­ருப்­பவை சிறு மற்­றும் குறுந்­தொ­ழில்­களே. இவற்­றால் கடன்­களை ஒழுங்­காக திருப்­பிச் செலுத்த முடி­ய­வில்லை. விளைவு, வங்­கி­கள் கடன் கொடுக்க ரொம்­ப­வும் தயங்­கு­கின்றன. ஏற்­க­னவே வாராக் கடன் சுமை தோளை அழுத்­தும்­போது, ரிஸ்க் எடுக்க எந்த வங்­கி­யும் முன்­வ­ராது.
அப்­ப­டி­யா­னால், வட்டி விகித குறைப்­பால் பலனே இல்­லையா? சரி­யான நேரத்­தில் போது­மான அளவு செய்­தி­ருந்­தால், பயன் இருந்­தி­ருக்­கும். 2016 அக்­டோ­ப­ரில் நடை­பெற்ற நிதிக் கொள்கை குழு சந்­திப்­பில், ரெப்போ விகி­தம், 6.25 சத­வீத­மாக குறைக்­கப்­பட்­டது. பத்து மாதங்­கள் கழித்து, ஆகஸ்ட், 2017ல் தான் அடுத்த கால் சத­வீத வட்டி விகித குறைப்பு.
குதி­ரை பாய்ச்­ச­லுக்­கு தயார்இந்த ஓராண்­டில் ஏற்­பட்­டுள்ள முக்­கிய மாற்­றங்­கள் இவை: நுகர்­வோர் பண­வீக்­கம் படிப்­ப­டி­யாக குறைந்து, தற்­போது, 1.54 சத­வீ­த­மாக உள்­ளது. தொழில் உற்­பத்தி வளர்ச்சி, 1.7 சத­வீ­த­மாக சரிந்­துள்­ளது. பண­வீக்­கத்­தைக் குறைப்­ப­தில் மட்­டுமே கவ­னம் செலுத்­தப்­பட்­ட­தால், தொழில் உற்­பத்தி வளர்ச்சி புறக்­க­ணிக்­கப்­பட்­டதோ என்ற அச்­சம் எழுப்­பப்­ப­டு­கிறது.
2017 பிப்­ர­வரி, ஏப்­ரல், ஜூன் மாதங்­களில் நடை­பெற்ற சந்­திப்­பு­க­ளி­லேயே வட்டி விகித குறைப்பு நடந்­தி­ருக்­கு­மா­னால், அன்றே கட­னுக்­கான வட்­டி­வி­கி­தம் இன்­னும் குறைந்­தி­ருக்­கும்; வளர்ச்­சி­யும் பெரு­கி­யி­ருக்­கும்.தற்­போது குறைக்­கப்­பட்­டுள்ள கால் சத­வீதம், யானைப் பசிக்கு சோளப் பொரி. அரை சதமோ, முக்­கால் சதமோ குறைக்­கப்­பட்­டி­ருந்­தால், கடன் பெறு­வோ­ருக்கு பெரும் ஊக்­க­மாக இருந்­தி­ருக்­கும்.
இத்­தனை மாதங்­கள் சிர­மங்­க­ளி­லேயே கழிந்த பின், தொழில் துறை­யி­ன­ரி­டையே பெரிய ஆர்­வ­மில்லை. புதிய கடன்­க­ளைப் பெற்று, தொழி­லில் முத­லீடு செய்­யும் வேகம் சுணங்­கி­விட்­டது.அடுத்த நிதிக் கொள்­கைக் குழு­வின் சந்­திப்­பி­லா­வது பெரும் வட்­டி குறைப்பு இருக்­கு­மா­னால், அது தொழில்­ து­றை­யி­னரை குதி­ரைப் பாய்ச்­ச­லுக்­குத் தயார் செய்­யும்.செய்­யுமா மத்­திய ரிசர்வ் வங்கி?
-ஆர்.வெங்­க­டேஷ்பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)