ஒரு சவ­ரன் தங்­கம் விலை ரூ.22 ஆயி­ரத்தை தாண்­டி­யதுஒரு சவ­ரன் தங்­கம் விலை ரூ.22 ஆயி­ரத்தை தாண்­டி­யது ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு ...
மத்திய அரசின் சீர்திருத்த திட்டங்களால்... தொழில் துவங்கும் ஆர்வம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2017
00:03

புது­டில்லி : மத்­திய அர­சின் சீர்­தி­ருத்த திட்­டங்­க­ளால், பல்­வேறு நிறு­வ­னங்­களில் பணி­பு­ரி­வோ­ரி­டம், சொந்­த­மாக தொழில் துவங்க வேண்­டும் என்ற ஆர்­வம் அதி­க­ரித்­தி­ருப்­பது, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.

நெதர்­லாந்­தைச் சேர்ந்த, ரன்ட்ஸ்­டட் நிறு­வ­னம், 33 நாடு­க­ளைச் சேர்ந்த, பல்­வேறு நிறு­வன ஊழி­யர்­களின் எதிர்­கால திட்­டங்­கள் குறித்த கருத்துக்­களை தொகுத்து, வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை: இந்­தி­யா­வில், பல்­வேறு நிறு­வ­னங்­களில் பணி­பு­ரி­வோ­ரி­டம், தொழில்­முனை­வோ­ராக வேண்­டும் என்ற எண்ணம் அதி­கம் இருப்­பது, ஆய்­வில் தெரிய வந்­துள்­ளது. ஆய்­வில் பங்­கேற்­றோ­ரில், 56 சத­வீ­தம் பேர், தற்­போ­தைய வேலையை உத­றி­விட்டு, சுய தொழில் துவங்க விரும்­பு­வ­தாக தெரி­வித்து உள்­ள­னர்.

தொழில்­மு­னை­வோ­ராக வேண்­டும் என்ற எண்­ணம் உள்­ள­தாக, 83 சத­வீ­தம் பேர் கூறி­யுள்­ள­னர். இது, சர்­வ­தேச சரா­ச­ரி­யான, 53 சத­வீ­தத்தை விட அதி­கம்.இந்­தி­யா­வில் தற்­போது, வர்த்­த­கச் சூழல் நிலை­யாக உள்­ளது. வெளிப்­ப­டை­யான வரி நிர்­வா­கத்­திற்கு வழி­வ­குக்­கும், ஜி.எஸ்.டி., அறி­மு­க­மாகி இருக்­கிறது. பெரும்­பா­லான துறை­களில், அன்னிய நேரடி முத­லீ­டு­க­ளுக்­கான வரம்பு உயர்த்­தப்­பட்டு உள்­ளது. உள்­நாட்டு தயா­ரிப்பை ஊக்­கு­விக்­க­வும், மின்­னணு தொழில்­நுட்ப பயன்­பாட்டை பர­வ­லாக்­க­வும், ‘மேக் இன் இந்­தியா, டிஜிட்­டல் இந்­தியா’ போன்ற திட்­டங்­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு உள்ளன.

தொழில் துவங்­கு­வ­தற்­கான நடை­மு­றை­கள் சுல­ப­மாக்­கப்­பட்டு உள்ளன. வலை­த­ளம் வாயி­லாக, புது­மை­யான தொழில்­களில் ஈடு­ப­டு­வோ­ருக்கு உதவ, ‘ஸ்டார்ட் அப் இந்­தியா’ திட்­டம் செயல்­பாட்­டில் உள்­ளது. குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு உதவ, பல்­வேறு திட்­டங்­கள் அறி­விக்­கப்­பட்டு உள்ளன. இது போன்ற சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­க­ளால், இந்­தி­யா­வில், தற்­போது பணி­யில் உள்­ளோ­ரி­டம் சுய தொழில் செய்ய வேண்­டும் என்ற சிந்­தனை மேலோங்கி வரு­கிறது.

ஆய்­வில் பங்­கேற்­றோ­ரில், 86 சத­வீதம் பேர், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­களை துவக்­கு­வ­தற்­கான சூழல் சிறப்­பாக உள்­ள­தாக கூறி­யுள்­ள­னர். புதிய நிறு­வ­னங்­களை துவக்க, மத்­திய அரசு, முழு ஆத­ரவு அளிப்­ப­தாக, 84 சத­வீ­தத்­தி­னர் கருத்து தெரி­வித்து உள்­ள­னர். இந்த ஆய்­வில், எத்­த­கைய நிறு­வ­னங்­களில் பணி­யாற்ற விருப்­பம் என்ற கேள்விக்கு, 84 சத­வீ­தம் பேர், பன்­னாட்டு நிறு­வ­னங்­களை தேர்வு செய்­த­னர்.

ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களில் பணி­பு­ரிய, 76 சத­வீ­தத்­தி­னர் ஆர்­வம் தெரி­வித்­த­னர். சிறிய அல்­லது நடுத்­த­ர­மான தனி­யார் நிறு­வ­னங்­களில் பணி­யாற்ற தயார் என, 69 சத­வீ­தம் பேர் கூறி­யுள்­ள­னர். இந்த ஆய்வு, வாரத்­தில், குறைந்­த­பட்­சம், 24 மணி நேரம் பணி­பு­ரி­யும், 18 – 65 வய­துள்­ளோ­ரி­டம் நடத்­தப்­பட்­டது. அதில், 45 – 54 வய­திற்கு உட்­பட்ட பலர், சுய தொழில் துவங்க தயக்­கம் காட்­டு­வது தெரிய வந்­துள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)