இந்திய மருத்துவ சுற்றுலா துறை முன்னேறிய நாடுகளை விஞ்சும்இந்திய மருத்துவ சுற்றுலா துறை முன்னேறிய நாடுகளை விஞ்சும் ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.63.96 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.63.96 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கமாடிட்டி சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2017
08:07

கச்சா எண்ணெய்
சர்­வ­தேச சந்­தை­யில், கடந்த இரு வாரங்­க­ளாக, கச்சா எண்­ணெய் விலை சரி­வைச் சந்­தித்­தது. ஒரு பேரல், 50 டாலர் என்ற நிலை­யைக் கடக்க இய­லா­மல், குறைந்து வர்த்­த­க­மா­கி­யது. தொடர்ந்து அதி­க­ரித்து வரும் அமெ­ரிக்க கச்சா எண்­ணெய் உற்­பத்தி, சந்­தை­யில், ஒபெக் நாடு­க­ளுக்கு சவா­லாக இருக்­கிறது. மேலும், உறுப்பு நாடு­கள், தங்­கள் உற்­பத்தி குறைப்பை, ஒப்­பந்­தப்­படி சரி­வர அமல்­ப­டுத்­த­வில்லை.
ஒபெக் நாடு­கள், தின­சரி, 1.2 மில்­லி­யன் பேரல்­கள் அள­வுக்கு உற்­பத்­தியை குறைப்­பது என, கடந்த ஜன­வ­ரி­யில் தீர்­மா­னித்­தது. இதில், ஐக்­கிய அரபு நாடு­கள், லிபியா, நைஜீ­ரியா போன்­றவை உற்­பத்­தியை அதி­க­ரித்­தது. இத­னால், சந்­தை­யில், எண்­ணெய் விலை உய­ரா­மல், கட்­டுக்­குள் வந்­தது.நைஜீ­ரிய நாட்­டின், ஜூலை மாத சரா­சரி எண்­ணெய் உற்­பத்தி, 1.81 மில்­லி­யன் பேரல்­கள் ஆகும். ஆனால் இதே நைஜீ­ரியா, கடந்த மாதம், ரஷ்­யா­வில் நடை­பெற்ற, ஒபெக் உற்­பத்தி குறைப்பு மேற்­பார்வை கூட்­டத்­தில், தின­சரி, அதி­க­பட்­சம், 1.80 மில்­லி­யன் பேரல்­கள் என்­பதை அமல்­ப­டுத்­து­வ­தாக உறுதி அளித்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.
ஐக்­கிய அரபு நாட்­டின் எண்­ணெய் நிறு­வ­ன­மான, அபு­தாபி நேஷ­னல் ஆயில் கம்­பெனி, தன் தின­சரி உற்­பத்­தியை, 3 மில்­லி­ய­னி­லி­ருந்து, 3.5 மில்­லி­ய­னாக அடுத்த ஆண்­டில் உயர்த்த திட்­ட­மிட்­டுள்­ளது. இவ்­வா­றாக உய­ரும் எண்­ணெய் உற்­பத்தி,விலைக்கு பாத­க­மா­கவே அமை­யும். வாரம் இரு­முறை வெளி­வ­ரும், அமெ­ரிக்க எண்­ணெய் இருப்­பும் அளவு உயர்ந்து காணப்­ப­டு­கிறது.
தற்­போது உல­கின் மிகப்­பெ­ரிய எண்­ணெய் இறக்­கு­மதி நாடாக, சீனா இருக்­கிறது. அதன் ஜூலை மாத இறக்­கு­மதி அள­வான, 34.66 மில்­லி­யன் டன் என்­பது, அதற்கு முந்­தைய மாதங்­களை விட குறைவு. அதா­வது, தின­சரி இறக்­கு­மதி, 8.55 மில்­லி­யன் பேர­லில் இருந்து, 8.16 மில்­லி­யன் பேர­லாக குறைந்­தது.ஒபெக் நாடு­களின், ஜூன் மாத மொத்த உற்­பத்தி தின­சரி, 29.867 மில்­லி­யன் பேரல்­கள் ஆகும். இது ஜூலை மாதம், 29.964 மில்­லி­யன் பேரல்­க­ளாக உயர்ந்து காணப்­பட்­டது. ஆனால், ஒப்­பந்­தப்­படி, 29.804 மில்­லி­யன் பேரல்­களே உறுப்பு நாடு­கள் ஏற்­றுக் கொண்ட அள­வா­கும்.
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 3,095 3,040 3,148 3,195என்.ஒய்.எம்.இ.எக்ஸ்., (டாலர்) 48.00 46.70 49.40 51.00

தங்கம், வெள்ளி
தங்­கம் மற்­றும் வெள்ளி விலை­கள், கடந்த வாரம் அதி­க­ரித்து வர்த்­த­க­மா­யின. கடந்த வார இறு­தி­யில், தொடர்ந்து நான்கு நாட்­கள் உயர்ந்து, இரு மாத உச்­சத்தை தொட்­டது.
முத­லீட்­டா­ளர்­கள் மற்­றும் வர்த்­த­கர்­களின் சஞ்­ச­லம் கார­ண­மா­க­வும், வட­கொ­ரியா மற்­றும் அமெ­ரிக்­கா­விற்கு இடையே நடந்து வரும் அசா­தா­ர­ண­மான சூழல் கார­ண­மா­வும், ஏதே­னும் நிக­ழும் என்ற அச்­சத்­தின் கார­ண­மா­க­வும் தங்­கம் மற்­றும் வெள்ளி விலை­கள் உயர்ந்து வியா­பா­ர­ம்ஆ­கி­யது.
கடந்த வெள்­ளி­யன்று வெளி­வந்த, அமெ­ரிக்க பண­வீக்க விகி­தம் எதிர்­பார்த்­ததை விட குறை­வாக இருந்­தது. இத­னால். அரசு சார்ந்த கரு­வூல பங்­கு­களின் ஆதா­யம் குறைந்­தது. பெட­ரல் ஓப்­பன் மார்க்­கெட் கமிட்­டி­யின் டிசம்­பர் மாத கூட்­டத்­தில், வட்டி விகி­தம் உயர்த்­தப்­பட வாய்ப்­புள்­ளது என்ற கண்­ணோட்­டத்­தில், டாலர் சரிந்து, தங்­கம் மற்­றும் வெள்ளி விலை உயர்ந்­தது. வரும் நாட்­க­ளி­லும் இந்த ஏற்­றம் தொட­ரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
தங்கம்
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 29,071 28,905 29,295 29,520காம்எக்ஸ் (டாலர்) 1,275 1,263 1,299 1,312

வெள்ளி
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 38,800 38,340 39,400 39,830காம்எக்ஸ் (டாலர்) 16.80 16.25 17.35 17.80

செம்பு
தொடர்ந்து ஐந்து வாரங்­க­ளாக செம்பு விலை அதி­க­ரித்த வண்­ணம் உள்­ளது. அனைத்து தொழிற்­சாலை மூலப்­பொ­ருட்­கள் விலை­யும் அதி­க­ரித்து காணப்­பட்­டன.
உயர்ந்து வரும், அமெ­ரிக்க மற்­றும் வள­ரும் நாடு­களின் பங்கு சந்­தை­களும் இதன் போக்­கிற்கு துணை­யாக உள்ளன.சீனா­வின் தொழில்­ துறை உற்­பத்தி 7.1 சத­வீ­தம் ஆகும். எல்.எம்.இ., எனப்­படும், லண்­டன் மெட்­டல் எக்­சேஞ்­சில், செம்பு விலை மூன்று ஆண்டு உச்­சத்தை அடைந்­தது. தற்­போது ஒரு டன், 6,500 டாலர் என்ற நிலை­யில் வர்த்­த­க­மா­கிறது.
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 410.00 405.30 415.00 419.20

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)