இந்திய மருத்துவ சுற்றுலா துறை முன்னேறிய நாடுகளை விஞ்சும்இந்திய மருத்துவ சுற்றுலா துறை முன்னேறிய நாடுகளை விஞ்சும் ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.63.96 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.63.96 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
எதிர்­கா­லம் குறித்த கேள்­விக்­கு­றி­கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2017
08:09

சந்தை, சூழல் சார்ந்து நக­ரும் போது, சூழ­லில் ஏற்­படும் திடீர் மாற்­றங்­கள், முத­லீட்­டா­ளர்­கள் மனதை எப்­படி பாதிக்­கும் என்­ப­தற்கு, கடந்த வாரம் சிறந்த சான்று.
ஒரே வாரத்­தில், ‘சென்­செக்ஸ்’ 5 சத­வீ­தம் இழந்­த­தோடு, எதிர்­கா­லம் குறித்த பெரும் கேள்­விக்­கு­றி­கள், திடீ­ரென்று எழுந்­தது எப்­படி?
கடந்த வாரம் வரை, சந்­தையை பற்றி கருத்து கூறு­வோர் யாரும், இத்­த­கைய சரிவை ஏன் யூகிக்­க­வில்லை?
இந்த சரிவு, இத்­தோடு நின்­று­வி­டுமா அல்­லது தற்­போ­தைய பொரு­ளா­தார நிலை சந்­தைக்கு, மேலும் பல அடிப்­படை சவால்­களை அடுக்­கிக் கொண்டே போகுமா?
இனி வரும் வாரங்­களில், ஒரு முத­லீட்­டா­ளர், சந்­தையை எப்­படி எதிர்­கொள்ள வேண்­டும்?
இப்­படி, பல கேள்­வி­கள் நம் மன­தில் ஒரே வாரத்­தில் தோன்­றி­யுள்­ள­தில், எந்த ஆச்­ச­ரி­ய­மு­மில்லை. சந்­தை­யின் சக்­தி­யும், நம் முத­லீட்டு நடத்­தை­யும் தொடர்ந்து நம்மை அத்­த­கைய சோத­னை­க­ளுக்கு தொடர்ந்து உட்­ப­டுத்­தும் என்­பதை, நாம் முத­லில் ஏற்­றுக்­கொள்ள வேண்­டும்.
அடிப்­ப­டை­யில், ஒன்றை நாம் அனை­வ­ரும் தெளி­வா­கப் புரிந்து கொள்ள வேண்­டும். சந்தை அடுத்த சில நாட்­க­ளிலோ, வாரங்­க­ளிலோ, எப்­ப­டிப்­பட்ட மாற்­றங்­களை சந்­திக்­கும் என்­பதை, யாரா­லும் முன்­கூட்­டியே கணிக்க முடி­யாது. ஏற்­ப­டக் கூடிய மாற்­றங்­க­ளுக்கு, நம்மை தயார்­ப­டுத்­திக் கொள்­வது மட்­டுமே, நம் கையில் உள்­ளது. சந்­தை­யின் மாற்­றங்­களை, நமக்கு சாத­க­மாக பயன்­ப­டுத்­திக் கொள்­வதே, நம்­மு­டைய முக்­கிய குறிக்­கோ­ளாக இருக்க வேண்­டும்.
அடிப்­ப­டை­யில், இந்­திய பொரு­ளா­தா­ரத்­தின் தற்­போ­தைய நிலை, அப்­படி ஒன்­றும் கவ­லைக்­கி­ட­மா­கவோ, அச்­சு­றுத்­தும் வகை­யிலோ நிச்­ச­யம் இல்லை. ஆனா­லும், நாம் கடக்க வேண்­டிய பொரு­ளா­தார சவால்­கள், இன்­னும் பல உள்ளன. அந்த சவால்­களை நாம் எவ்­வ­ளவு விரை­வில் கடக்­கி­றோமோ, அதுவே, சந்­தை­யின் எதிர்­கால போக்கை நிர்­ண­யிக்­கும்.
முக்­கி­ய­மாக, பொதுத் துறை வங்­கி­களின் வாராக்­க­டன் பிரச்­னை­கள், நிறு­வ­னங்­களின் நிதி பற்­றாக்­கு­றை­கள், வளர்ச்­சிக்­கான முத­லீ­டு­களை ஏற்­ப­டுத்த எடுக்­கப்­படும் துல்­லிய நட­வ­டிக்­கை­கள் மற்­றும் உலக சந்­தை­களின் போக்கு ஆகி­ய­வற்­றில், முத­லீட்­டா­ளர்­கள் அதிக கவ­னம் செலுத்த வேண்­டும். இந்­தாண்­டில், இது­வரை செய்த முத­லீ­டு­களை, மதிப்­பீடு சார்ந்த ஆய்­வுக்கு உட்­ப­டுத்த வேண்­டும். அடிப்­ப­டை­யில், பல முத­லீ­டு­கள் மிக அதிக மதிப்­பீட்­டில் செய்­யப்­பட்டு இருந்­தால், அவற்றை கூர்ந்து ஆய்வு செய்து மாற்றி அமைக்க வேண்­டும்.
வரும் ஆண்­டில் ஏற்­ப­டக்­கூ­டிய பொரு­ளா­தார மாற்­றங்­கள் சார்ந்து, நம் முத­லீ­டு­களை மாற்றி அமைக்க வேண்­டும். சிறு, குறு நிறு­வனபங்­கு­களை தவிர்த்து, பெரு நிறு­வன பங்­கு­களில், சிறந்­த­வற்றை நாம் வாங்க வேண்­டும். பொரு­ளா­தா­ரம் தற்­போ­தைய நிலை­யில் இருந்து காணப் போகும் முன்­ந­கர்வு, பெரு நிறு­வ­னங்­க­ளுக்கே அதிக பலன் தரும். ஆகவே, நம் முத­லீ­டு­களில், அத்­த­கைய நிறு­வ­னங்­களை இப்­போது சேர்த்­துக் கொள்­வது முக்­கி­யம். பண மதிப்பு நீக்­கத்­திற்கு பின் நடந்த உள்­நாட்டு பங்கு வர்த்­த­கம், குறு­கிய கால நோக்­கோடு செய்­யப்­பட்­டது. அவற்­றின் பலன்­கள், ஏற்­க­னவே நம்மை வந்­த­டைந்து உள்ளன. தொடர்ந்து, அந்த முத­லீ­டு­கள் எந்­த­ளவு பல­ன­ளிக்­கும் என்­பது கேள்­விக்­கு­றியே. இதை, நாம் தெளி­வாக புரிந்து கொள்ள வேண்­டும்.
சந்­தை­யின் வருங்­கால நகர்­வில், முக்­கிய பங்­க­ளிக்­கப் போகும் நிறு­வ­னங்­கள், இது­வரை அதி­கம் பங்­க­ளிக்­காத நிறு­வ­னங்­க­ளாக இருக்­க­லாம். அவற்றை அடை­யா­ளம் காண, நாம் முத­லில், குறு­கிய கால கண்­ணோட்­டத்தை கைவிட வேண்­டும்.சந்தை, வரும் வாரங்­களில் தொடர்ந்து பொரு­ளா­தார அடிப்­ப­டைத் தன்­மை­கள்சார்ந்தே நக­ரும் என, தோன்­று­கிறது. அப்­படி நக­ரும் போது, நாமும் அதற்கு ஏற்ற மாற்­றங்­களை, நம் சிந்­த­னை­யி­லும், பங்கு தேர்­வி­லும் ஏற்ப­டுத்­திக் கொள்ள வேண்­டும். உலக சந்­தை­யின் மீதும், நாம் கூர்ந்து கவ­னம் செலுத்த வேண்­டிய கால கட்­டம் இது.
எப்.ஐ.ஐ., முத­லீட்­டா­ளர்­கள், தொடர்ந்து நம் பங்­கு­களை விற்­றால், அத்­த­கைய விற்­ப­னையை, நிதா­ன­மாக எதிர்­கொள்ள, நம்மை தயார்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும்.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)