கரன்சி நிலவரம்கரன்சி நிலவரம் ... ‘டிஜிட்டல் வாலட்’ விதிமுறைகள்; ரிசர்வ் வங்கி விரைவில் வெளியீடு ‘டிஜிட்டல் வாலட்’ விதிமுறைகள்; ரிசர்வ் வங்கி விரைவில் வெளியீடு ...
ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2017
08:38

சார், நாங்­கள், கலை மற்­றும் ஓவிய துறை­யில், மாண­வர்­களை தயார் செய்து வரு­கி­றோம். இதற்­கென, பயிற்சி வகுப்­பு­கள் நடத்தி வரு­கி­றோம். மாண­வர்­க­ளி­ட­மி­ருந்து, மாதம், 750 ரூபாய் – 1,000 ரூபாய் வரை, பயிற்சி கட்­ட­ண­மாக பெறு­கி­றோம். நாங்­கள், ஜி.எஸ்.டி., பதிவு செய்ய வேண்­டுமா? இதற்கு, தனி சலுகை ஏதே­னும் உள்­ளதா?– ரவி­ராஜ், கோவைவரு­மான வரித்­து­றை­யி­ட­மி­ருந்து விலக்கு பெற்ற நபர்­கள் (உதா­ர­ண­மாக தொண்டு நிறு­வ­னம்) இந்த சேவை­யில் ஈடு­பட்­டால், ஜி.எஸ்.டி.,யிலி­ருந்து விலக்கு அளித்­துள்­ள­னர். வேறு நபர்­கள், இந்த சேவையை வழங்­கி­னால் அதற்கு, 18 சத­வீ­தம், ஜி.எஸ்.டி., வசூல் செய்ய வேண்­டும். பதிவு செய்­யப்­பட்ட நபர் மட்­டுமே, வரியை வசூ­லிக்க முடி­யும்.

நாங்­கள், விவ­சாய உற்­பத்தி பொருட்­களை, சரக்கு போக்­கு­வ­ரத்­துக்கு, லாரி­கள் மூலம், எங்­கள் தொழிற்­சா­லைக்கு கொண்டு வரு­கி­றோம். நாங்­கள் செலுத்­தும் லாரி வாட­கைக்கு, ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில் வரி செலுத்த வேண்­டுமா?– பிர்லா, விரு­து­ந­கர்பொது­வாக, பதிவு செய்த நபர், சரக்கு போக்­கு­வ­ரத்­திற்­காக செலுத்­தும் வாட­கை­யில், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில் வரி செலுத்த வேண்­டும். ஆனால், நீங்­கள் விவ­சாய உற்­பத்தி பொருட்­களை கொண்டு வரு­வ­தால், அதற்கு, ஜி.எஸ்.டி.,யிலி­ருந்து விலக்கு அளித்­துள்­ள­னர். எனவே நீங்­கள், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில் வரி செலுத்த வேண்­டாம்.

நாங்­கள், தங்­கும் விடுதி ஒன்றை வைத்­துள்­ளோம். ஒரு நாள் வாடகை, 750 ரூபாய் – 900 ரூபாய். நாங்­கள், ஜி.எஸ்.டி., பதிவு செய்ய வேண்­டுமா? இதற்கு ஏதா­வது சலுகை உள்­ளதா?– பழ­னி­சாமி, வால்­பாறைஉங்­க­ளு­டைய தங்­கும் விடு­தி­யின் வாடகை தொகை, ஒரு நாளைக்கு, 1,000 ரூபாய்க்கு குறை­வாக இருந்­தால், அதற்கு, ஜி.எஸ்.டி., விதிக்க தேவை­யில்லை. உங்­கள் வாடகை தொகை, 1,000 ரூபாய்க்கு குறை­வாக உள்ள கார­ணத்­தால், நீங்­கள், ஜி.எஸ்.டி., பதிவு செய்ய தேவை­யில்லை.

சார், நாங்­கள், உண­வ­கம் வைத்­துள்­ளோம். அதில், குளிர்­சா­தன வச­தி­யும் உள்­ளது; குளிர்­சா­தன வசதி இல்­லாத கூட­மும் உள்­ளது. நாங்­கள், பார்­சல் மூலம் உண­வு­களை வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு விற்­பனை செய்­கி­றோம். நாங்­கள், எவ்­வ­ளவு சத­வீ­தம் வரி வசூல் செய்ய வேண்­டும்?– சந்­தான கோபா­லன், புர­சை­வாக்­கம்இது, சற்று சர்ச்­சைக்­கு­ரிய கேள்வி. நாங்­களும், அர­சி­ட­மி­ருந்து ஒரு தெளி­வான சுற்­ற­றிக்­கையை எதிர்­பார்த்து கொண்­டி­ருக்­கி­றோம். தற்­போது உள்ள, ஜி.எஸ்.டி., சட்ட விதி­க­ளின்­படி, உங்­கள் உண­வ­கத்­தில், ஏதா­வது ஒரு பகு­தி­யில் குளிர்­சா­தன வசதி இருந்­தா­லும் கூட, நீங்­கள், 18 சத­வீ­தம், ஜி.எஸ்.டி., வசூல் செய்ய வேண்­டும். இது, நீங்­கள் விற்­பனை செய்­யக் கூடிய பார்­சல் விற்­ப­னைக்­கும் பொருந்­தும். குளிர்­சா­தன வசதி இல்­லாத உண­வ­கங்­களில், 12 சத­வீ­தம் வரி வசூல் செய்ய வேண்­டும்.

சார், நாங்­கள், குளிர்­சா­தன இயந்­தி­ரங்­களை பழுது பார்த்­தல், பொருத்­து­தல் ஆகிய சேவை­யில் ஈடு­பட்டு உள்­ளோம். எங்­க­ளுக்­கும் பதிவு செய்ய உச்ச வரம்­பான, 20 லட்­சம் ரூபாய் என்­பது பொருந்­துமா?– பார்­கவ், சென்னைவணி­கத்­தில் ஈடு­பட்­டுள்ள அனைத்து நபர்­க­ளுக்­கும், பதிவு செய்­வ­தற்­கான ஆண்டு உச்ச வரம்­பான, 20 லட்­சம் ரூபாய் என்­பது பொருந்­தும். உங்­கள் ஆண்டு வரு­மா­னம், 20 லட்­சம் ரூபாயை தாண்­டும் போது, ஜி.எஸ்.டி., பதி­வெண் பெற வேண்­டும்.

சார், நான், ரியல் எஸ்­டேட் துறை­யில் முக­வ­ராக உள்­ளேன். அதற்­கென தனி நிறு­வ­னம் நடத்தி வரு­கி­றேன். ரியல் எஸ்­டேட் துறை­யில் உள்ள வர்த்­த­கத்­திற்கு, எத்­தனை சத­வீ­தம் வரி விதிக்க வேண்­டும்?– அன்­பு­மணி, சென்னைநீங்­கள், ஜி.எஸ்.டி., பதிவு பெற்ற விப­ரத்தை குறிப்­பி­ட­வில்லை. நீங்­கள் பதிவு செய்­துள்ள நபர் என்­றால், ரியல் எஸ்­டேட் துறை­யில் வழங்­கும் சேவைக்கு, 18 சத­வீ­தம் வரி வசூல் செய்ய வேண்­டும்.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)