நியாயமற்ற சந்தைப்படுத்தும் முறைக்கு கடிவாளம் மருந்து விலையை குறைக்க நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு அமைக்க முடிவுநியாயமற்ற சந்தைப்படுத்தும் முறைக்கு கடிவாளம் மருந்து விலையை குறைக்க ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.05 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.05 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கோரப்­ப­டாத காப்­பீட்டு தொகையை பெற வழிமுறைகள் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2017
05:49

காப்­பீடு தொடர்­பான பல்­வேறு அம்­சங்­களை அறிந்­தி­ருப்­பது போலவே, பல்­வேறு கார­ணங்­க­ளால் கோரப்­ப­டாமல் விடப்­பட்ட பலன் தொகையை பெறு­வ­தற்­கான வழி­மு­றை­க­ளையும் அறிந்­தி­ருக்க வேண்டும்.

சேமிப்பு, முத­லீடு உள்­ளிட்ட நிதி விஷ­யங்­களில் ஒழுக்­கமும், சீரான தன்­மையும் தேவை. முத­லீட்­டிற்­கான தவ­ணையை மறக்­காமல் செலுத்த வேண்டும். காப்­பீடு பாலி­சி­க­ளுக்கும் இது பொருந்தும். முத­லீடு, காப்­பீடு தொகையை உரிய காலத்தில் செலுத்தி வந்தால் மட்டும் போதாது, அவற்றை முதிர்வு காலத்தில் திரும்ப பெறு­வ­திலும் கவனம் செலுத்த வேண்டும்.

கோரப்­ப­டாத பணம்:
முத­லீட்டின் பலனை பெறு­வதை யாரா­வது மறப்­பரா என கேட்கத் தோன்­றி­னாலும், பல கார­ணங்­க­ளினால் உரி­ய­வர்­களால் தொகை கோரப்­ப­டாமல் தேங்கி கிடப்­பது என்­பதும் நடை­முறை யதார்த்­த­மாக இருப்­பது உங்­க­ளுக்குத் தெரி­யுமா? வருங்­கால வைப்பு நிதி­யான, பி.எப்., வங்கி வைப்பு நிதி, சிறு­சே­மிப்பு நிதி, காப்­பீ­டுக்­கான முதிர்வு தொகை என, பல நிதி சாத­னங்­களில் உரி­ய­வர்­களால் தொகை கோரப்­ப­டாமல் இருப்­பது சக­ஜ­மாக இருக்­கி­றது. இந்த தொகையை பய­னாளி அல்­லது அவ­ரது வாரி­சு­தாரர் பெறு­வ­தற்­கான வழி­மு­றை­களை அறிந்­தி­ருக்க வேண்டும்.

காப்­பீட்டை பொறுத்­த­வரை கோரப்­ப­டாத பணத்தை திரும்ப பெறு­வ­தற்­கான புதிய விதி­முறைகள் அம­லுக்கு வந்­துள்­ளன. பத்­தாண்­டு­க­ளுக்கும் மேல் பாலி­சி­ தாரர் சார்பில் தொகை கோரப்­படாமல் இருந்தால், அந்த தொகை மூத்த குடி­ம­கன்கள் நல­வாழ்வு நிதிக்கு மாற்­றப்­பட்டு விடும். பொது­வாக பய­னாளி சார்பில், முதிர்வு காலத்­திற்கு பின் திரும்ப பெறப்­ப­டாத தொகை கோரப்­ப­டா­த­தாக கரு­தப்­ப­டு­கி­றது. காப்­பீடு என்று வரும் போது, முதிர்வு பலன், பாலி­சி­தாரர் மரணம் அடைந்தால் கிடைக்க வேண்­டிய பலன், சர்­வைவல் பலன், திரும்பி வர வேண்­டிய பிரீ­மியம் உள்­ளிட்­டவை அவற்­றுக்­கான வட்­டி­யுடன், செட்­டில்மென்ட் தேதியில் இருந்து ஆறு மாத காலத்­திற்குள் உரி­ய­வர்­களால் பெறப்­படா விட்டால் கோரப்­ப­டாத தொகை­யாக அமை­கி­றது.

‘அன்­கி­ளைம்டு மணி’ என, இது குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. மறதி, அலட்­சியம், உரிய தகவல் தெரி­யாமல் போவது என பல­வித கார­ணங்­க­ளினால் இது நிக­ழலாம். காப்­பீடு நிறு­வ­னங்கள் இந்த தொகையை வைப்பு நிதி அல்­லது மியூச்­சுவல் பண்ட் திட்­டங்­களில் முத­லீடு செய்து வைக்­கலாம். எதிர்­கா­லத்தில் உரி­ய­வர்கள் கோரிக்கை வைத்தால் இந்த தொகையை அதன் மூல­மான வரு­மா­னத்­துடன் அளிக்க வேண்டும். ஏதேனும் செல­வுகள் அல்­லது கட்­ட­ணங்கள் இருந்தால் கழித்­துக்­கொள்­ளப்­படும்.
எப்­படி அறி­வது?
காப்­பீடு தொடர்­பாக கோரப்­ப­டாத பணத்தை அறி­வ­தற்­கான வச­தியை காப்­பீடு நிறு­வ­னங்கள் அவற்றின் இணை­ய­த­ளத்தில் செய்து தர வேண்டும். பாலி­சி­தாரரால் கோரப்­ப­டாத பணம் எனும் பிரிவின் கீழ் இந்த தக­வல்கள் அளிக்­கப்­பட்­டி­ருக்கும். இந்த பகு­தியை கிளிக் செய்து பாலிசி எண், பாலி­சி­தாரர் பெயர், பான் எண், ஆதார் எண், பிறந்த தேதி உள்­ளிட்ட விப­ரங்­களை சமர்­ப்பித்து கோரப்­ப­டாத தொகை ஏதேனும் இருக்­கி­றதா என அறிந்து கொள்­ளலாம். பாலி­சி­தாரர் பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகிய தக­வல்கள் கட்­டாயம் தெரி­விக்­கப்­பட வேண்டும். காப்­பீடு நிறு­வ­னங்கள், 1,000 ரூபாய் அல்­லது அதற்கு மேலான தொகையை மட்டும் தான் இவ்­வாறு குறிப்­பிட வேண்டும். இந்த பகு­தியை பார்த்து, கோரப்­ப­டாத தொகை இருப்­பது தெரி­ய­வந்த பின், காப்­பீடு நிறு­வ­னத்தை தொடர்பு கொள்ள வேண்டும் அல்­லது இணை­ய­த­ளத்தில் குறிப்­பிட்­டுள்ள வழி­மு­றை­களை பின்­பற்ற வேண்டும்.

புதிய விதி­முறை
மத்­திய அரசு, மூத்த குடி­ம­கன்கள் நல­வாழ்வு நிதியை, 2015 – 16 நிதி சட்­டங்கள் மூலம் உரு­வாக்­கி­யது. இதில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள அமைப்­பு­களில் கோரப்­ப­டாமல் இருக்கும் தொகை இந்த நிதிக்கு மாற்ற வழி செய்­யப்­பட்­டுள்­ளது. பி.எப்., அஞ்­ச­லக சிறு­சே­மிப்பு திட்­டங்கள் இதில் அடங்கும். தற்­போது காப்­பீடும் சேர்க்­கப்­பட்­டுள்­ளது. பத்­தாண்­டு­க­ளுக்கு மேல் கோரப்­ப­டாமல் இருக்கும் காப்­பீடு தொகை இந்த நிதிக்கு மாற்­றப்­படும் என அண்­மையில் இந்­திய காப்­பீடு ஒழுங்­கு­முறை மற்றும் மேம்­பாட்டு ஆணையம் தெரி­வித்­துள்­ளது. எனினும், தொகை மாற்­றப்­பட்ட, 25 ஆண்­டு­க­ளுக்குள் பாலி­சி­தா­ரர்கள் அல்­லது அவர்கள் சார்பில் உரி­ய­வர்கள் இந்த தொகையை கோரி பெறலாம். ஆனால், 25 ஆண்­டு ­க­ளுக்கும் மேல் கோரப்­ப­டாத பட்­சத்தில் இந்த தொகை அர­சுக்கு நிரந்­த­ர­மாக சொந்­த­மாகி விடும்.

பாலிசி தக­வல்கள்:
* காப்­பீடு பாலிசி தொடர்­பான தக­வல்­களை தெளி­வாக எழுதி வைத்து உரி­ய­வர்­க­ளிடம் இதை தெரி­விக்க வேண்டும்* பாலி­சியில் நாமி­னியை குறிப்­பிட்டு, அவ­ருக்கும் தகவல் தெரி­விக்க வேண்டும்* மற்ற முத­லீ­டு­க­ளுக்கும் இதே போன்ற நடை­மு­றையை பின்­பற்­று­வது அவ­சியம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)