இயற்கை விவசாய பொருட்களுக்கு தனி சந்தையை ஏற்படுத்த ‘நிடி ஆயோக்’ வலியுறுத்தல்இயற்கை விவசாய பொருட்களுக்கு தனி சந்தையை ஏற்படுத்த ‘நிடி ஆயோக்’ ... ... கரன்சி நிலவரம் கரன்சி நிலவரம் ...
ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2017
08:28

நான், ஜூலை மாதம், ‘ரிட்­டர்ன்’ 3பி படி­வம் தாக்­கல் செய்­யும் போது, வரித் தொகையை அதி­க­மாக செலுத்தி விட்­டேன். தற்­போது, அதி­க­மாக செலுத்­திய தொகையை, எவ்­வாறு திரும்ப பெறு­வது?– கரு­ணா­க­ரன், உளுந்­துா­ர்­பேட்டைநீங்­கள், அதி­கப்­ப­டி­யாக செலுத்­திய தொகை, தங்­க­ளு­டைய, ‘எலக்ட்­ரா­னிக் கேஷ் லெட்­ஜர்’ எனப்­படும், மின்­னணு கணக்­கில் வரவு வைக்­கப்­படும். அடுத்த மாதங்­களில், நீங்­கள் செலுத்த வேண்­டிய வரியை, இந்த கணக்­கி­லி­ருந்து கழித்து கொள்­ள­லாம்.

சார், நாங்­கள், ஆந்­தி­ரா­வில் சிறிய அள­வில் பட்டு உற்­பத்தி செய்­கி­றோம்​. அதை, தமி­ழ­கம் மற்­றும் ஆந்­தி­ரா­வில், ஜவுளி உற்­பத்­தி­யா­ளர்­க­ளுக்கு விற்­பனை செய்­கி­றோம். நாங்­கள், தற்­போது, உள்­மா­நில மற்­றும் வெளி மாநில ​வழங்­க­லில் ஈடு­பட்டு உள்­ளோம். எங்­க­ளு­டைய ஆண்டு வரு­மா­னம், ​15 லட்­சம் ரூபாய்க்கு குறை­வாக இருக்­கும். நாங்­கள், ஜி.எஸ்.டி., பதிவு செய்ய வேண்­டுமா​? இந்த வழங்­க­லுக்கு, எத்­தனை சத­வீ­தம் வரி வசூல் செய்ய வேண்­டும்?​– சத்­திய விஜய், குண்­டூர்நீங்­கள்​ செய்­யக் கூடிய பட்டு உற்­பத்தி வழங்­க­லுக்கு, ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில் வரி விதிக்­கப்­படும். நீங்­கள் விற்­கக் கூடிய பொரு­ளுக்கு​, பொருளை வாங்­கு­ப­வர் வரி செலுத்த வேண்­டும். எனவே, நீங்­கள் பதிவு செய்ய வேண்­டும் என்­கிற அவ­சி­ய­மில்லை.

சார், திரு­வல்­லிக்­கே­ணி­யில், நான் ஒரு வீடு வாங்க உள்­ளேன்.​ ஏற்­க­னவே பயன்­ப­டுத்­திய​ வீடு. வீட்­டின் உரி­மை­யா­ளர் எந்­த­வித ​வணி­கத்­தி­லும் ஈடு­ப­ட­வில்லை.​ இவ்­வாறு செய்­யக் கூடிய பரி­வர்த்­த­னை­யில்,​ ஜி.எஸ்.டி.,யின் தாக்­கம் எவ்­வாறு இருக்­கும்​?– கிஷோர், மயி­லாப்­பூர்நீங்­கள், உரி­மை­யா­ள­ரி­ட­மி­ருந்து ​வீடு​ வாங்­கும் போது, அதற்கு, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­பட மாட்­டாது.​ ‘ஸ்டாம்ப் டூட்டி’ செலுத்தி, பத்­தி­ரப்­ப­திவு செய்­யப்­படும் இந்த பரி­வர்த்­த­னைக்கு, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­ப­டாது.

ஐயா, நாங்­கள், சென்­னை­யில் மருத்­து­வ­மனை​ நடத்தி வரு­கி­றோம். எங்­க­ளு­டைய சேவைக்கு, வரி இல்லை என்­கிற கார­ணத்­தால், ஜி.எஸ்.டி., பதிவு செய்­ய­வில்லை. நாங்­கள்,எங்­கள் மருத்­து­வ­மனை அல்­லாது பிற மருத்­து­வ­ம­னை­க­ளுக்­கும் மற்­றும் பய­னா­ளி­க­ளுக்­கும், ‘ஆம்­பு­லன்ஸ்’ சேவை ​வழங்கி வரு­கி­றோம். அதற்கு, தனி­யாக கட்­ட­ணம் வசூ­லிக்­கி­றோம். அவ்­வாறு பணம் வசூல் செய்­தால், அதற்கு, ஜி.எஸ்.டி., வருமா? ஆம் எனில், எத்­தனை சத­வீ­தம்?– ராம் கணேஷ், வட­ப­ழனிதாங்­கள் வழங்­கும், ‘ஆம்­பு­லன்ஸ்’ சேவைக்கு, தனி­யாக கட்­ட­ணம் வசூ­லித்­தா­லும்​,​ அதற்கு, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­பட மாட்­டாது. இதற்கு, விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது.

நாங்­கள், கைக்­க­டி­கார விற்­ப­னை­யில் உள்­ளோம்​. அதற்கு, ​எத்­தனை சத­வீ­தம் வரி விதிக்க வேண்­டும்? கைக்­க­டி­கார உதிரி பாகங்­க­ளுக்கு, எத்­தனை சத­வீ­தம் வரி விதிக்­கப்­படும்​?– அம்­ஜத், சங்­க­கிரிபொது­வாக, கைக்­க­டி­கார வகை­கள், ​28 சத­வீ­தம் வரி விதிப்­புக்கு உட்­படும். அதன் உதிரி பாகங்­களும், ​28​ சத­வீ­தத்­தில் இருக்­கும். குறிப்­பிட்ட​ சில உதிரி பாகங்­க­ளுக்கு, 18 சத­வீ­தம் வரி விதிப்பு உள்­ளது.

நாங்­கள், கோ​பியில்,​ ஒரு மெட்­ரி­கு­லே­ஷன் பள்ளி நடத்தி வரு­கி­றோம். மாண­வர்­க­ளி­டம், ​அவர்­கள் பள்ளி வந்து செல்­வ­தற்கு, வாகன ​கட்­ட­ணம் தனி­யாக வசூ­லிக்­கி­றோம். அந்த தொகை­யில், ஜி.எஸ்.டி., உண்டா?​– ஷர்­மிளா, கோபிதாங்­கள் வசூ­லிக்­கும் இந்­தத் தொகைக்கு, வரி­யி­லி­ருந்து விலக்­க­ளித்து உள்­ள­னர்.

நாங்­கள்,​ தேங்­காய் நார் மூலம், கயிறு உற்­பத்தி செய்து, அதை ​மொத்­த­மாக விற்­பனை செய்­கி­றோம். எங்­க­ளுக்கு பணம் அளிப்­ப­வர்­கள், பண­மா­கவோ அல்­லது வங்கி காசோ­லை­யா­கவோ அளிக்­கின்­ற­னர். கயிற்­றுக்கு, ​ஜி.எஸ்.டி., உண்டா​?– மரு­த­மூர்த்தி, பொள்­ளாச்சிதேங்­காய் நார் மூலம், தாங்­கள் உற்­பத்தி செய்­யும் ​கயிற்­றுக்கு​, ஜி.எஸ்.டி.,யிலி­ருந்து விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது. நீங்­கள், ​பண­மா­கவோ அல்­லது வங்கி காசோ­லை­யா­கவோ​ விற்­ப­னைத் தொகையை பெறு­வ­தால், இதில் எந்த மாற்­ற­மும் இல்லை.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)