கரன்சி நிலவரம்கரன்சி நிலவரம் ... ‘பெட்’ பாட்டில் மறுசுழற்சி சந்தை ரூ.3,500 கோடியாக உயர்வு ‘பெட்’ பாட்டில் மறுசுழற்சி சந்தை ரூ.3,500 கோடியாக உயர்வு ...
ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2017
00:05

நான், ஒரு கம்­பெ­னி­யில் பார்ட்­னர். கம்­பெ­னிக்கு, ஜி.எஸ்.டி., எண் உள்­ளது. எனக்கு சொந்­த­மான கட்­ட­டம் ஒன்றை, தனி­யார் கம்­பெ­னிக்கு வாட­கைக்கு விட்­டுள்­ளேன். அவர்­கள், மாத வாட­கை­யாக, 15 ஆயி­ரம் ரூபாய் கொடுக்­கின்­ற­னர். வாட­கையை கொடுக்­கும் போது, ஜி.எஸ்.டி., 18 சத­வீ­தம் பிடித்­தம் செய்து, மீதியை கொடுப்­போம் என, கூறு­கின்­ற­னர். ஆனால், எனக்கு, ஜி.எஸ்.டி., எண் கிடை­யாது. எனக்கு ஆண்டு வரு­மா­னம், 20 லட்­சம் ரூபாய் வராது. அவர்­கள், என் வாடகை பணத்­தில், ஜி.எஸ்.டி., பிடித்­தம் செய்­ய­லாமா அல்­லது அந்த தொகைக்கு அவர்­கள் தான், ஜி.எஸ்.டி., கட்ட வேண்­டுமா? தயவு செய்து விளக்­க­வும்.– பிர­பாஸ், பர­மக்­குடி
நீங்­கள், பதிவு செய்­யப்­ப­டாத நபர். உங்­க­ளி­ட­மி­ருந்து சேவையை பெறும் பதிவு செய்­யப்­பட்ட நபர், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில், ஜி.எஸ்.டி., செலுத்த வேண்­டும். அவர்­கள் செலுத்­திய வரியை, உள்­ளீட்டு வரி பய­னாக, அவர்­கள் பெறு­வர். இதில், எந்த சிக்­க­லும் இல்லை. உங்­க­ளி­டம் அளிக்­கும் வாடகை தொகைக்கு அவர்­கள், ஜி.எஸ்.டி., என்ற பெய­ரில், எந்த பிடித்­த­மும் செய்­யக் கூடாது.
*****
சார், எங்­க­ளு­டைய நிறு­வன அதி­கா­ரி­கள் வந்து தங்­கு­வ­தற்கு, சென்­னை­யில் விருந்­தி­னர் விடுதி வைத்­துள்­ளோம். எங்­க­ளு­டைய தொழிற்­சாலை, தஞ்சை அரு­கில் உள்­ளது. அதற்கு, ஜி.எஸ்.டி., பதிவு பெற்­று­விட்­டோம். சென்னை விருந்­தி­னர் விடு­தி­யில், பரா­ம­ரிப்பு மற்­றும் பாது­காப்பு சேவை­க­ளுக்கு, ஜி.எஸ்.டி., செலுத்­து­கி­றோம். அவ்­வாறு செலுத்­திய தொகையை, உள்­ளீட்டு வரி பய­னாக பெற இய­லுமா?– வெங்­கட்­ரா­மன், கும்­ப­கோ­ணம்
நீங்­கள், சென்­னை­யில் உள்ள விருந்­தி­னர் விடுதி பரா­ம­ரிப்பு மற்­றும் பாது­காப்பு சேவை­க­ளுக்கு செலுத்­திய, ஜி.எஸ்.டி., தொகையை, உள்­ளீட்டு வரி பய­னாக பெற­லாம்.

*****
நாங்­கள், சேவை வழங்­க­லில் ஈடு­பட்டு உள்­ளோம். பதிவு பெறாத நப­ரி­ட­மி­ருந்து, ஒரு­ சில சேவை­களை பெற்­ற­தால், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில், நாங்­கள் வரி செலுத்த வேண்டி உள்­ளது. அவ்­வாறு செலுத்­திய வரியை, அடுத்த மாதம் தான், உள்­ளீட்டு வரி பய­னாக, ‘அட்­ஜஸ்ட்’ செய்ய முடி­யுமா?– அவி­னாஷ், புதுச்­சேரி
நீங்­கள், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில் செலுத்­திய வரியை, அந்த மாதமே, சாதா­ரண வழங்­க­லில் செலுத்த வேண்­டிய வரித் தொகை­யில் கழித்து, மீதி தொகையை செலுத்­தி­னால் போதும். அடுத்த மாதம் தான், அந்த பலனை பெற முடி­யும் என்ற நிலை­யில்லை.

*****
நாங்­கள், ஒரு நிறு­வ­னத்­தின், ‘டீலர்’ ஆக இருக்­கி­றோம். ‘போர்க் லிப்ட் டிரக்’ விற்­பனை மற்­றும் பரா­ம­ரிப்பு சேவை­யில் உள்­ளோம். எங்­க­ளி­டம், நிறைய உதிரி பாகங்­கள் உள்ளன. மிகக் குறை­வான விலை உள்ள உதிரி பாகங்­க­ளுக்­கும் (உதா­ர­ண­மாக, 1 – 10 ரூபாய் வரை) அதிக விலை உள்ள உதிரி பாகங்­க­ளுக்­கும், ஒரே, எச்.எஸ்.என்., கோடு தான் வரு­கிறது. இத­னால், வரி வசூ­லிப்­பில் பாதிப்பு இருக்­குமா; உள்­ளீட்டு வரி பயன் பெறு­வ­தில் சிக்­கல் இருக்­குமா?– சர­வ­ண­கு­மார், மதுரை
ஒரே, எச்.எஸ்.என்., கோடில், விலை வேறு­பாடு உள்ள உதிரி பாகங்­கள் வரு­வ­தால், எந்த பாதிப்­பும் இல்லை. உங்­களின் விற்­பனை தொகை­யும், அதன் வரி சத­வீ­த­மும் சரி­யாக இருந்­தால் போது­மா­னது. இத­னால், நீங்­கள் உள்­ளீட்டு வரி பயன் பெறு­வ­தில், எந்த சிக்­க­லும் இல்லை.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)