ஜியோ பாணியில் இலவச வாய்ஸ் கால், பீச்சர் போன் அறிமுகம் செய்யும் ஏர்டெல்?ஜியோ பாணியில் இலவச வாய்ஸ் கால், பீச்சர் போன் அறிமுகம் செய்யும் ஏர்டெல்? ... ஹார்லி டேவிட்சன் விலை குறைப்பு ஹார்லி டேவிட்சன் விலை குறைப்பு ...
ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2017
03:18

ஐயா, நான், சேவை­யில் ஈடு­பட்டு உள்­ளேன். ஜி.எஸ்.டி., பதி­வை­யும் பெற்­று­விட்­டேன். நாங்­கள், எந்த விற்­ப­னை­யி­லும் ஈடு­ப­ட­வில்லை. எங்­க­ளு­டைய அலு­வ­லக உப­யோ­கத்­திற்­காக, காகி­தம், கோப்­பு­கள் போன்ற பொருட்­களின் கொள்­மு­த­லில் செலுத்­திய, ஜி.எஸ்.டி.,யை உள்­ளீட்டு வரி பய­னாக பெற முடி­யுமா? முன், இத்­த­கைய கொள்­மு­த­லில் செலுத்­திய, ‘வாட்’ வரியை, நாங்­கள், உள்­ளீட்டு வரி பய­னாக பெற­வில்லை.– சிவ­கு­மார், சிறு­சேரிபதிவு செய்­யப்­பட்ட நபர், வணி­கத்­திற்­காக கொள்­மு­த­லில் செலுத்­திய, ஜி.எஸ்.டி.,யை உள்­ளீட்டு வரி பய­னாக பெற­லாம். முன், நீங்­கள், சேவை வரி­யின் கீழ் பதிவு செய்­தி­ருப்­பீர்­கள். ஆகை­யால், ‘வாட்’ வரியை உள்­ளீட்டு வரி பய­னாக பெற இய­லாது. ஆனால், தற்­போது, சேவை வரி மற்­றும் ‘வாட்’ வரியை உள்­ள­டக்கி, ஜி.எஸ்.டி., வந்த கார­ணத்­தால், உள்­ளீட்டு வரி பயன் எந்த தடை­யு­மின்றி கிடைக்­கும். இத­னால், வணி­கர்­கள் மற்­றும் நுகர்­வோர் பயன்­பெ­று­வர்.
சார், நாங்­கள், வரி விலைப் பட்­டி­ய­லில், எச்.எஸ்.என்., குறி­யீட்டை தவ­றாக குறிப்­பிட்டு விட்­டோம். இதை, எவ்­வாறு மாற்­று­வது? இத­னால், வரி­யில் பாதிப்பு இருக்­குமா?– நதியா, சேலம்ஜி.எஸ்.டி., சட்ட விதி­க­ளின்­படி, சரி­யான குறி­யீட்டை, விலைப் பட்­டி­ய­லில் குறிப்­பிட வேண்­டும். ஜி.எஸ்.டி., சட்­டம், புதி­தாக அறி­மு­கப்­ப­டுத்­திய கார­ணத்­தால், எச்.எஸ்.என்., குறி­யீட்டை, சிலர் தவ­றாக குறிப்­பிட்டு உள்­ள­னர். அவ்­வாறு குறிப்­பிட்­டா­லும், நீங்­கள் வரி சத­வீ­தத்­தில், பிழை இல்­லா­மல் வசூ­லித்து செலுத்தி இருந்­தால், உங்­க­ளுக்கு வரி­யில் பாதிப்பு இருக்­காது. நீங்­கள், ‘ரிட்­டர்ன்’ படி­வம் தாக்­க­லின் போது, எச்.எஸ்.என்., குறி­யீட்டை சரி­யாக குறிப்­பி­ட­லாம்.
ஐயா, தங்க நகை­க­ளுக்கு, 3 சத­வீ­தம், ஜி.எஸ்.டி., என, முன் குறிப்­பிட்­டி­ருந்­தீர்­கள். வெள்ளி நகை­க­ளுக்கு, எத்­தனை சத­வீ­தம் வரி விதிக்­கப்­படும்? சென்­னை­யில், ஒரு நகைக் கடை­யில், வெள்ளி நகை­க­ளுக்கு, 12 சத­வீ­தம் வசூல் செய்­த­னர். இது சரியா?– இசக்கி, சென்னைதங்க நகை­களை போலவே, வெள்ளி நகை­க­ளுக்கு, 3 சத­வீத வரி விதிக்­கப்­படும். இவற்றை, 71 எனும், எச்.எஸ்.என்., குறி­யீட்­டில் வகைப்­ப­டுத்த வேண்­டும். நீங்­கள் கூறி­யது போல், ஒரு­வேளை, தவ­றாக வரி வசூல் செய்­தி­ருந்­தால், அவர்­க­ளி­டம் விளக்கி கூறி, தொகையை திரும்ப பெற­லாம்.
நாங்­கள், ஐந்து லட்­சம் ரூபாய் முத­லீட்­டில், சிறிய எலக்ட்­ரா­னிக்ஸ் கடை நடத்தி வரு­கி­றோம். ஆண்டு வரு­மா­னம், இருபது லட்­சம் ரூபாய்க்கு கீழ் தான், நாங்­கள், ஜி.எஸ்.டி.,யில் சேர வேண்­டுமா? நாங்­கள் விற்­பனை செய்­யும் பொருட்­க­ளுக்கு, வரி கட்ட வேண்­டுமா? எங்­களை போன்ற சிறு வியா­பா­ரி­க­ளுக்கு, ஜி.எஸ்.டி.,யால் பாதிப்பு ஏற்­ப­டுமா?– ஸ்ரீவ­ரா­கன், காங்­கே­யம்ஜி.எஸ்.டி., பதி­விற்­கான உச்ச வரம்பு தொகையை தாண்­டாத நிலை­யில், நீங்­கள் பதிவு பெற வேண்­டி­யது இல்லை. நீங்­கள் விற்­பனை செய்­யும் பொருட்­க­ளுக்கு, வரி செலுத்த வேண்­டாம். ஆனால், நீங்­கள் பதிவு பெற்ற விற்­ப­னை­யா­ள­ரி­ட­மி­ருந்து பொருட்­களை கொள்­மு­தல் செய்­யும் போது, ஜி.எஸ்.டி., செலுத்த வேண்­டும். அதை, உள்­ளீட்டு வரி பய­னாக பெற இய­லாது. இத­னால், சிறு வியா­பா­ரி­க­ளுக்கு எந்த பாதிப்­பும் இருக்­காது.
நாங்­கள், கிரா­னைட் சிலாப் ஏற்­று­மதி தொழில் செய்­கி­றோம். நாங்­கள் தற்­போது, தொழிற்­சா­லை­யில் இருந்து, ‘பாலிஷ்’ செய்­யாத சிலாப்­களை, 28 சத­வீ­தம், ஜி.எஸ்.டி., செலுத்தி கொள்­மு­தல் செய்­துள்­ளோம். அதை, நாங்­கள் வெளி­நாட்­டிற்கு ஏற்­று­மதி செய்ய உள்­ளோம். ஏற்­று­மதி செய்த பின், நாங்­கள் செலுத்­திய, 28 சத­வீத, ஜி.எஸ்.டி.,யை திரும்ப பெறு­வது எப்­படி மற்­றும் எல்.யு.டி., எனும், உத்­த­ர­வாத கடி­தம் பெற்று சமர்ப்­பிக்க வேண்­டுமா?– கார்த்­தி­கே­யன், மேலுார்ஏற்­று­ம­தி­யில் ஈடு­பட்­டி­ருக்­கும் நீங்­கள் செலுத்­திய, ஜி.எஸ்.டி.,யை முழு­மை­யாக திரும்ப பெற இய­லும். நீங்­கள் ஏற்­று­ம­தி­யின் போது, விதி­மு­றை­க­ளுக்­கேற்ப, 15 சத­வீத உத்­த­ர­வாத பத்­தி­ரமோ அல்­லது கடி­தமோ அளித்து, ஏற்­று­மதி செய்ய வேண்­டும். நீங்­கள் ஏற்­று­மதி செய்த பின், அதன் விப­ரத்தை, ஜி.எஸ்.டி., ரிட்­டர்ன் படி­வம், ஜி.எஸ்.டி.ஆர்., – - 2 மூலம் தாக்­கல் செய்து, வரியை திரும்ப பெற­லாம்.








நாங்­கள், பழைய கார்­களை வாங்கி விற்­கும் தொழி­லில் ஈடு­பட்டு உள்­ளோம். காரின் விற்­பனை தொகை­யில், ஜி.எஸ்.டி., செலுத்த வேண்­டுமா அல்­லது எங்­க­ளு­டைய லாப தொகை­யில், ஜி.எஸ்.டி., செலுத்த வேண்­டுமா? ஏனெ­னில், நாங்­கள் அதி­க­மாக, ஜி.எஸ்.டி., பதிவு பெறாத நுகர்­வோ­ரி­ட­மி­ருந்து தான், பழைய ஊர்­தி­களை வாங்­கு­கி­றோம்.– ஹரிணி, சென்னைஇத்­த­கைய பரி­வர்த்­த­னை­க­ளுக்கு, ஜி.எஸ்.டி., சட்­டத்­தில், தனி­யாக விதி உள்­ளது. இதற்கு, ‘மார்­ஜின் ஸ்கீம்’ என, பெயர். ஜி.எஸ்.டி., செலுத்­து­வ­தற்கு, உங்­களின் விற்­பனை தொகை­யி­லி­ருந்து கொள்­மு­தல் தொகையை கழித்து, மீத தொகைக்கு வரி விதிக்­கப்­படும்.
சார், ஜூன், 30ல், வேலை பணி­யா­ள­ரி­டம் இருந்த சரக்­கின் விப­ரத்தை, எந்த படி­வத்­தில் தாக்­கல் செய்ய வேண்­டும்? இதில், எந்த விப­ரங்­களை குறிப்­பிட வேண்­டும்?– சதிஷ், பாலக்­காடுநீங்­கள், ஜூன், 30ல், வேலை பணி­யா­ள­ரி­டம் இருந்த சரக்­கின் விப­ரத்தை, ஜி.எஸ்.டி., டிரான் – -1 எனும் படி­வத்­தில், வரிசை எண், 9ல் குறிப்­பிட வேண்­டும். சரக்கு அனுப்­பிய செலான் எண், சரக்­கின், எச்.எஸ்.என்., குறி­யீடு, அதன் அலகு, எண்­ணிக்கை, மதிப்பு ஆகிய விப­ரங்­களை குறிப்­பிட வேண்­டும்.
மாட்­டுத் தீவ­ன­மாக உப­யோ­கப்­ப­டுத்­தப்­படும், வைக்­கோல் மற்­றும் புண்­ணாக்கு வகை­க­ளுக்கு, ஜி.எஸ்.டி., எத்­தனை சத­வீ­தம் விதிக்­கப்­படும்?– புக­ழேந்தி, பெரம்­பூர்மாட்­டுத் தீவ­ன­மாக உப­யோ­கப்­ப­டுத்­தப்­படும், மேற்­கூ­றிய பொருட்­க­ளுக்கு, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­ப­டாது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)