நடப்பு 2017- – 18ம் நிதியாண்டில்... வாகன உதிரி பாகங்கள் துறை 11 சதவீத வளர்ச்சி காணும்நடப்பு 2017- – 18ம் நிதியாண்டில்... வாகன உதிரி பாகங்கள் துறை 11 சதவீத வளர்ச்சி ... ... ரூபாயின் மதிப்பு சரிவு : ரூ.63.87 ரூபாயின் மதிப்பு சரிவு : ரூ.63.87 ...
நிதி ஆலோ­ச­னை­களை செயல்­ப­டுத்­து­வது எப்­படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2017
00:06

பெரும்­பா­லான முத­லீட்­டா­ளர்கள், ‘ரிஸ்க்’ எடுக்க விரும்­பாவிட்டாலும், குறு­கிய கால நலனால் ஈர்க்­கப்­படுகின்றனர். இதை தவிர்ப்­பது அவ­சியம்.

பொது­வாக எல்­லாரும் முத­லீடு விஷ­யத்தில் எச்­ச­ரிக்­கை­யாக இருக்­கவே விரும்­பு­கின்­றனர். முத­லீட்டின் மீதான அதிக பலனை விரும்­பி­னாலும், ரிஸ்க் அதிகம் உள்ள முத­லீட்டு வாய்ப்­பு­களை தவிர்க்க வேண்டும் என்­பதில், சரா­சரி முத­லீட்­டா­ளர்கள் உறு­தி­யாக இருக்­கின்­றனர். இது சரி­யான அணு­கு­முறை தான். ஆனால், ரிஸ்க் எடுக்க தயா­ராக இல்­லாத முத­லீட்­டா­ளர்கள் கூட, பல நேரங்­களில் தங்­க­ளுக்கு பொருத்தம் இல்­லாத மற்றும் ரிஸ்க் அதிகம் உள்ள நிதி சாத­னங்­களில் முத­லீடு செய்­வது வழக்­க­மாக இருப்­ப­தாக, நிதி வல்­லு­னர்கள் சுட்டிக் காட்­டு­கின்­றனர்.

ரிஸ்க் என்ன?
பாது­காப்­பான நோக்கம் கொண்ட முத­லீட்­டா­ளர்கள் கூட, குறு­கிய கால நலனை மனதில் கொண்டு, இஷ்டம் போல முத­லீடு செய்ய முற்­ப­டு­வது இயல்­பாக இருக்­கி­றது. டிஜிட்டல் நாணயம் எனப்­படும், ‘பிட்­காயின்’ மீது ஏற்­பட்­டுள்ள முத­லீட்டு ஆர்­வத்தை இதற்கு உதா­ர­ண­மாக சொல்­லலாம். வழக்­க­மான நாண­யங்­களில் இருந்து மாறு­பட்ட, பிட்­காயின் தொழில்­நுட்ப நோக்கில் பல்­வேறு சிறப்­பம்­சங்­களை கொண்­டுள்­ளது. அண்மைக் கால­மாக, பிட்­காயின் ஒரு முத­லீட்டு வாய்ப்­பா­கவும் கவரத் துவங்­கி­யுள்­ளது. சந்­தையில் பிட்­காயின் மதிப்பு உயர்ந்து வரு­வதால், சில ஆண்­டு­க­ளுக்கு முன் பிட்­காயின் வாங்­கி­ய­வர்கள், தற்­போது நல்ல பலன் அடையும் நிலை உள்­ள­தாக கூறப்­ப­டு­வது, பல­ரது கவ­னத்தை ஈர்த்­துள்­ளது.

இப்­போது பிட்­கா­யினில் முத­லீடு செய்தால், எதிர்­கா­லத்தில் நல்ல பலன் பெறலாம் என கூறப்­ப­டு­வதால், இந்த டிஜிட்டல் நாணயம், மேலும் பல­ரது கவ­னத்தை ஈர்க்­கி­றது. இதன் பல­னாக, பல வாடிக்­கை­யா­ளர்கள் தங்­க­ளிடம் பிட்­கா­யினில் முத­லீடு செய்­ய­லாமா... என, ஆர்­வத்­தோடு கேட்­ப­தாக நிதி ஆலோ­ச­கர்கள் தெரி­விக்­கின்­றனர். ஒரு முத­லீட்டு வாய்ப்­பாக பிட்­காயின் தரக்­கூ­டிய பலன்கள் பற்றி பெரி­தாக பேசப்­பட்­டாலும், அதில் உள்ள ரிஸ்க் அம்­சங்­களை புரிந்து கொள்­வது அவ­சி­ய­மா­கி­றது. ஆனால், ஆச்­ச­ரியம் என்­ன­வெனில், பல முத­லீட்­டா­ளர்கள் பிட்­காயின் முத­லீட்டில் உள்ள, ‘ரிஸ்க்’ அம்­சங்­களை புறக்­க­ணித்து விட்டு, அதில் முத­லீடு செய்யத் தயா­ராக இருப்­பது தான் என, நிதி ஆலோ­ச­கர்கள் சொல்­கின்­றனர்.

நல்ல ஆலோ­ச­னைகள்:
பிட்­காயின் முத­லீடு பற்றி தங்­க­ளுக்கு நன்­றாக தெரியும் என்ற நம்­பிக்­கையே இதற்கு கார­ண­மாக அமை­கி­றது. பிட்­காயின் என்­றில்லை, பொது­வா­கவே சரா­சரி முத­லீட்­டா­ளர்கள் பலர், பாது­காப்­பான முத­லீட்டை விரும்­பி­னாலும், குறு­கிய கால நலனால் கவ­ரப்­பட்டு தங்­க­ளுக்கு பொருத்தம் இல்­லாத நிதி வாய்ப்­பு­களை நாடும் வழக்கம் கொண்­டுள்­ள­னர்.முத­லீடு விஷ­யத்தில் மிகவும் கவ­ன­மாக நடந்து கொள்ள விரும்பும் பலரும் கூட, நண்­பர்கள் கூறு­வது அல்­லது செய்­தி­களில் விவா­திக்­கப்­ப­டு­வதை அடிப்­படை­யாக கொண்டு முத­லீட்டு வாய்ப்பை தேர்வு செய்­கின்­றனர். நல்ல நிதி ஆலோ­ச­னை­களை கவ­னத்தில் கொள்­ளாமல், அலட்­சியம் செய்யும் தன்மை இதற்கு கார­ண­மாக அமை­கி­றது.

எளி­மையே தீர்வு:
நல்ல ஆலோ­ச­னை­களை ஏற்­றுக்­கொள்­ளாமல் போவ­தற்கு உள­வியல் நோக்­கி­லான கார­ணங்கள் இருக்­கின்­றன. தங்­க­ளுக்கு அதிக தக­வல்கள் தெரியும் என்ற உணர்வு, தாங்கள் மேற்­கொண்ட முடிவு சரி­யா­னது எனும் எண்ணம் ஆகி­யவை, முத­லீட்­டா­ளர்­க­ளிடம் ஆதிக்கம் செலுத்­து­கி­றது. அதோடு தாங்கள் எடுத்த முடி­வு­க­ளுக்கு ஏற்ப ஆலோ­சனை அமைந்தால், அதை எளி­தாக ஏற்­றுக் ­கொள்­கின்­றனர். ஆனால், அதற்கு மாறாக ஆலோ­சனை அமையும் போது, ஏற்க மறுக்­கின்­றனர். பொது­வா­கவே முத­லீட்­டா­ளர்கள் ஆலோ­சனை எனும் போது சிக்­க­லான விஷ­யங்­களை எதிர்­பார்க்­கின்­றனர். அதற்கு மாறாக, நிதி ஆலோ­ச­னைகள் எளிய உண்­மை­யாக அமையும் போது, அவர்கள் அலட்­சியம் கொள்­கின்­றனர்.

உதா­ர­ணத்­திற்கு முத­லீடு செய்ய ஏற்ற நேரம் எது எனும் கேள்­விக்கு, மியூச்­சுவல் பண்ட் போன்ற திட்­டங்­களில், நீண்ட கால முத­லீடு செய்­வது நல்­லது எனும், எளிய பதில் ஈர்ப்­பு­டை­ய­தாக அமை­வ­தில்லை என, நிதி ஆலோ­ச­கர்கள் கரு­து­கின்­றனர். முத­லீட்­டா­ளர்கள் ஒரே வகை­யான நிதி சாத­னங்­களில் முத­லீடு செய்­வதை அலுப்­பாக கருதி, ஒவ்­வொரு கட்­டத்­திலும் புதிய சாத­னங்­களை எதிர்­பார்க்கும் தன்­மையும் கொண்­டுள்­ள­தாக கரு­தப்­ப­டு­கி­றது. எனவே முத­லீடு விஷ­யத்தில், இத்­த­கைய தவ­று­களை செய்­யாமல், ஒருவர் தன் இலக்­கிற்கு ஏற்ற வகையில் செயல்­ப­டு­வதே சிறந்­த­தாக இருக்கும்.

முத­லீட்­டா­ளர்கள் மனது:
* நிபு­ணத்­துவம் இல்­லா­விட்­டாலும், அதிக தக­வல்கள் தெரியும் என நினைப்­பது* தேர்வு செய்த முத­லீட்டு வாய்ப்பு பற்றி எதிர்­மறை கருத்­துக்­களை கேட்க விரும்­பா­தது* சிக்­க­லான தீர்­வு­களே சிறந்­தது எனும் எண்ணம்* தக­வல்­களால் குழப்­ப­ம­டை­வது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)