கைகொடுத்த மூன்று துறைகள் மூன்று மாதங்களுக்கு பின் மீண்டும் ஏற்றுமதி இரட்டை இலக்க வளர்ச்சிகைகொடுத்த மூன்று துறைகள் மூன்று மாதங்களுக்கு பின் மீண்டும் ஏற்றுமதி ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.01 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.01 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
மிகப்­பெ­ரிய வங்­கிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2017
00:10

ரிசர்வ் வங்கி அண்­மையில் தனியார் துறை வங்­கி­யான எச்.டி.எப்.சி., வங்­கியை, உள்­ளூரில் அமைப்பு நோக்கில் முக்­கிய வங்­கி­யாக ( டிஎஸ்.ஐ.பி.,) வகைப்­ப­டுத்­து­வ­தாக அறி­வித்­துள்­ளது. ஏற்­க­னவே பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஆகி­யவை இவ்­வாறு வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில் மூன்­றா­வது வங்­கி­யாக, எச்.டி.எப்.சி., வங்கி இந்த பட்­டி­யலில் இடம்­பெற்­றுள்­ளது. இதன் முக்­கி­யத்­துவம் என்ன?

என்ன பொருள்?பல­வ­கை­யான வங்­கிகள் இருக்­கின்­றன. வங்­கிகள் நோக்கம், அளவு, செயல்­பாடு உள்­ளிட்ட அம்­சங்­களின் அடிப்­ப­டையில் அவை வகைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இவைத்­த­விர, வங்­கி­களின் பெரிய அளவு, பல துறை­களில் பர­விய செயல்­பாடு, சிக்­க­லான தன்மை மற்றும் இணைப்பு தொடர்­புகள் ஆகிய அம்­சங்­களின் அடிப்­ப­டையில் ரிசர்வ் வங்கி, குறிப்­பிட்ட சில வங்­கி­களை மிக முக்­கிய வங்­கி­யாக வகைப்­ப­டுத்­து­கி­றது.

2008 நிதிப்­பாடம்:கடந்த, 2008ம் ஆண்டு அமெ­ரிக்­காவில் முத­லீட்டு வங்­கிகள் திவா­லாகும் நிலைக்கு தள்­ளப்­பட்டு, அதன் விளை­வாக உலக பொரு­ளா­தாரம் தடு­மாறத் துவங்­கி­யதன் விளை­வாக, திவா­லாக முடி­யாத வங்­கி­களை அடை­யாளம் காணும் முறை அம­லுக்கு வந்­தது. அதன் படி ரிசர்வ் வங்­கியும், 2014ல் இதற்­கான நெறி­மு­றையை வெளி­யிட்டு, 2015 முதல் இந்த பட்­டி­யலில் இடம்­பெறும் வங்­கி­களை அறி­வித்து வரு­கி­றது.

என்ன பலன்?திவா­லாக முடி­யாத வங்­கிகள் என வகைப்­ப­டுத்­தப்­பட்ட வங்­கி­க­ளுக்கு நெருக்­கடி காலங்­களில் அரசின் ஆத­ரவு இருக்கும் என எதிர்ப்­பார்க்­கலாம். இதன் கார­ண­மாக இவற்­றுக்கு நிதி திரட்­டு­வதில் சாத­கங்கள் உள்­ளன. ஆனால், முக்­கிய வங்­கிகள் என்­பதால் இவற்­றுக்­கான கட்­டுப்­பா­டு­களும் தீவி­ர­மா­னவை. மற்ற வங்­கி­களை விட இவை, அதிக அளவில் நிதி முத­லீடு கொண்­டி­ருக்க வேண்டும். இவற்­றுக்­கான கொள்கை நெறி­மு­றை­களும் தீவி­ர­மா­னவை.

திவா­லாக முடி­யா­தவை!மிக முக்­கிய வங்­கி­யாக வகைப்­ப­டுத்­தப்­படும் வங்­கிகள் (டிஎஸ்.ஐ.பி.,) பொது­வாக, ‘டூ பிக் டு பைல்’ என குறிப்­பி­டப்­ப­டு­கின்­றன. அதா­வது இவை திவா­லாக அனு­ம­திக்க முடி­யா­தவை என பொருள். இந்த வகை வங்­கி­களை திவா­லாக அனு­ம­தித்தால், அவற்­றுக்கு மட்டும் அல்­லாமல் பொரு­ளா­தா­ரத்தை பாதிக்கும் என்­பதால், இப்­படி குறிப்­பி­டப்­ப­டு­கின்­றன. நெருக்­கடி ஏற்­படும் போது இவற்றை பாது­காக்க, அரசு முன்­வரும் என்­பது எதிர்­பார்ப்பு.

பல பிரி­வுகள்:ரிசர்வ் வங்கி ஒவ்­வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் இந்த வகை வங்­கி­களின் பட்­டி­யலை வெளி­யி­டு­கி­றது. இந்த வகை­யிலும், ஐந்து வகை பிரி­வுகள் இருக்­கின்­றன. எச்.டி.எப்.சி., வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முதல் பிரிவில் உள்­ளன. ஸ்டேட் வங்கி மூன்­றா­வது பிரிவில் உள்­ளது. எண்­ணிக்­கையின் அளவு முக்­கி­யத்­து­வத்தின் அளவை குறிக்கும். ஜி.டி.பி.,யில் 2 சத­வீத அள­வுக்கு மேல் இவை சொத்­துக்­களை கொண்­டி­ருக்கும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)