கைகொடுத்த மூன்று துறைகள் மூன்று மாதங்களுக்கு பின் மீண்டும் ஏற்றுமதி இரட்டை இலக்க வளர்ச்சிகைகொடுத்த மூன்று துறைகள் மூன்று மாதங்களுக்கு பின் மீண்டும் ஏற்றுமதி ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.01 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.01 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இந்­திய ஐ.டி., துறை எதிர்­நோக்கும் புதிய சவால்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2017
00:12

சர்­வ­தேச நிறு­வ­னங்­களின் அவுட்­சோர்சிங் மூலம் வளர்ச்சி அடைந்த இந்­திய தகவல் தொழில்­நுட்பத் துறைக்கு இன்­சோர்சிங் புதிய சவா­லாக உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

தேசிய பங்­குச்­சந்­தையில் ஐ.டி துறை பங்­குகள் குறி­யீ­டான நிப்டி, ஐ.டி., இந்த ஆண்டு சந்­தையின் ஒட்­டு­மொத்த குறி­யீட்டை விட, 22 சத­வீதம் குறை­வான பலனை அளித்­தி­ருப்­ப­தாக புள்ளி விப­ரங்கள் தெரி­விக்­கின்­றன. கடந்த ஆண்டு இது, 10 சத­வீதம் குறைந்த பலனை அளித்­தி­ருந்­தது. தகவல் தொழில்­நுட்ப நிறு­வ­னங்­களின் வளர்ச்சி தேக்­க­ம்­அடைந்­துள்ள நிலையில் இந்த தக­வலில் எந்த வியப்பும் இல்லை தான். விசா கட்­டுப்­பாடு சிக்கல், ‘டிஜிட்டல்’ மய­மாக்கல் சவால், தானி­யங்­கி­ம­ய­மாக்கல் என, பல்­வேறு சவால்­களை எதிர்­கொண்டு வரு­வதால், ஐ.டி., நிறு­வ­னங்­களின் வளர்ச்சி வேகம் தடை­பட்­டுள்­ளது.

புதிய சவால்:
இந்த சிக்­கல்கள், ஐ.டி., நிறு­வ­னங்­களின் வளர்ச்­சியை பாதித்­தி­ருப்­ப­தோடு, இத்­து­றையின் வேலை­வாய்ப்­பிலும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஏற்­க­னவே பணியில் உள்­ள­வர்கள் மீதும் நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது. இந்­திய ஐ.டி., துறை அவுட்­சோர்சிங் மூலம் தான் பெரிய அளவில் வளர்ச்சி கண்­டது. ஆனால் அமெ­ரிக்க புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப், தங்கள் நாட்டு வேலை­வாய்ப்பு வெளியே செல்­வதை தடுக்கும் வகையில் கொள்கை முடி­வு­களை எடுத்து வரு­வது அமெ­ரிக்க சந்­தையை சார்ந்­தி­ருக்கும் இந்­திய நிறு­வ­னங்­க­ளுக்கு, பெரும் சிக்கலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்த பின்­ன­ணியில் இந்­திய, ஐ.டி., துறை நிறு­வ­னங்­க­ளுக்கு இன்­சோர்சிங் மூலம், புதிய சவால் உரு­வாகி வரு­வ­தாக, ‘நொமுரா’ நிறு­வ­னத்தின் ஆய்­வ­றிக்கை எச்­ச­ரித்­துள்­ளது. அண்­மையில் வெளி­யி­டப்­பட்ட இந்த அறிக்கை இந்­திய நிறு­வ­னங்­களின் வாடிக்­கை­யா­ளர்­க­ளாக இருக்கும் மிகப்­பெ­ரிய நிறு­வ­னங்கள் பல, இன்­சோர்சிங் முறையை நாடு­வ­தாக தெரி­வித்­துள்­ளது. ‘இன்­சோர்சிங்; நெக்ஸ்ட் பிக் ஒரி பார் இந்­தியா’ எனும் பெயரில், இந்த அறிக்கை வெளி­யா­கி­யுள்­ளது.

நிறு­வ­னங்கள் தங்கள் பணி­களை, வெளி நிறு­வ­னங்­க­ளிடம் ஒப்­ப­டைத்து நிறை­வேற்றிக் கொள்­வது, ‘அவுட்­சோர்சிங்’ என குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. இதற்கு மாறாக சர்­வ­தேச நிறு­வ­னங்கள் தங்கள் பணி­களை உள்­ளுக்­குள்­ளேயே நிறை­வேற்றிக் கொள்­வது இன்­சோர்சிங் என குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.

வளர்ச்சி பாதிப்பு:
பொது­வாக சர்­வ­தேச நிறு­வ­னங்கள், ஜி.ஐ.சி., எனப்­படும் குளோபல் இன்­ஹவுஸ் சென்­டர்­களை அமைப்­பதன் மூலம், இதை செயல்­ப­டுத்­து­கின்­றன. அதா­வது பணி­களை பிற நிறு­வ­னங்­க­ளிடம் ஒப்­ப­டைப்­ப­தற்கு பதில், தாங்­களே மையங்கள் அமைத்து, அதில் ஊழி­யர்­களை அமர்த்தி தங்­க­ளுக்கு தேவை­யான சேவை­களை உரு­வாக்கி கொள்­கின்­றன. சர்­வ­தேச நிறு­வ­னங்கள் இத்­த­கைய சொந்த மையங்­களை அமைப்­பதில் கவனம் செலுத்தி வரு­வதால், இந்­திய நிறு­வ­னங்­க­ளுக்­கான அவுட்­சோர்சிங் வாய்ப்பு பாதிக்­கப்­படும் நிலை உரு­வா­கி­யுள்­ளது. இந்த மையங்கள், இந்­திய ஐ.டி., துறைக்­கான அடுத்த பெரிய சவால் என, நொமுரா அறிக்கை தெரி­விக்­கி­றது.

தற்­போது, இந்த மையங்கள் சர்­வ­தேச அவுட்­சோர்சிங் வரு­வாயில், 25 சத­வீ­தத்தை ஈர்க்­கின்­றன. ஆனால், இவை இந்­திய அவுட்­சோர்சிங் துறையை விட அதி­க­மாக வளர்ச்சி பெறத் துவங்­கி­யுள்­ளன. இதற்கு முன், இந்த மையங்­களை விட இந்­திய அவுட்­சோ­ர்சிங் நிறு­வ­னங்கள் அதிக வளர்ச்சி விகிதம் கண்டு வந்­தன.

வேலை வாய்ப்பு:
இப்­படி மையங்­களை அமைப்­பது, மிகப்­பெ­ரிய நிறு­வ­னங்கள் மத்­தியில் மட்டும் அல்­லாமல், ஆண்­டுக்கு 5 பில்­லி­ய­னுக்கும் குறைந்த வருவாய் கொண்ட நிறு­வ­னங்கள் மத்­தி­யிலும், பர­வ­லாகி வரு­வ­தாக அறிக்கை தெரி­விக்­கி­றது. வழக்­க­மான வங்கி, நிதி மற்றும் காப்­பீடு, தொழில்­நுட்பம் மற்றும் உற்­பத்தி ஆகிய துறை­க­ளுக்கு வெளி­யேவும் இந்த போக்கு பிர­ப­ல­மாகத் துவங்­கி­யுள்­ளது. ஜி.ஐ.சி., மையங்­களை அமைப்­பது செலவு மிக்­கது என்­றாலும், தங்கள் பணிகள் மீது அதிக கட்­டுப்­பாடு மற்றும் புது­மையை பெற விரும்பி, சர்­வ­தேச நிறு­வ­னங்கள் இந்த முறையை நாடு­வ­தாக கரு­தப்­ப­டு­கி­றது.

புது­மை­யான செயல்­பா­டு­களில் கவனம் செலுத்­து­வதன் மூலம் இந்­திய நிறு­வ­னங்கள் இந்த சவாலை எதிர்­கொள்­ளலாம் என்­றாலும், இதற்­கான முத­லீடு லாப விகி­தத்தை பாதிக்கும் என கரு­தப்­ப­டு­கி­றது.இன்­சோர்சிங் இந்­திய நிறு­வ­னங்­க­ளுக்கு சவா­லாக அமைந்­தி­ருந்­தாலும், இந்த மையங்­களும் புதி­ய­வர்கள் மற்றும் அனு­ப­வ­சா­லி­களை பணிக்கு அமர்த்தி வரு­வதால், இவை புதிய வேலை­வாய்ப்­பு­களை அளிக்கும் நிலை உள்­ளது.

இன்­சோர்சிங் சவால்:
* அவுட்­சோர்சிங் வரு­வாயில், 25 சத­வீ­தத்தை, ஜி.ஐ.சி., மையங்கள் பெறு­கின்­றன.* வரும் ஆண்­டு­களில் மேலும் பல முக்­கிய நிறு­வ­னங்கள் இன்­சோர்சிங் முறைக்கு மாறலாம்.* இன்­சோர்சிங் மையங்கள் புதி­ய­வர்­க­ளுக்கு வேலை வாய்ப்பு அளிக்­கின்­றன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)