பதிவு செய்த நாள்
20 செப்2017
00:06

புதுடில்லி : தனியார் துறையில், மிகப் பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமாக செயல்பட்டு வரும், எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு இன்று துவங்கி, 22ம் தேதி முடிவடைகிறது.
ஒரு பங்கின் விலை, 685 – 700 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம், 21 பங்குகள் வீதம் முதலீடு செய்யலாம். இப்பங்கு வெளியீட்டின் மூலம், 8,400 கோடி ரூபாய் திரட்டப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.பி.ஐ., மற்றும் பி.என்.பி., பரிபாஸ் கார்டிப் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாக, எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ் உள்ளது. இந்நிறுவனத்தின் தகுதியுள்ள பணியாளர்களுக்கு, பங்கு விலையில், 68 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
எஸ்.பி.ஐ., லைப், 29 தனி காப்பீட்டு திட்டங்கள் மற்றும் 8 குழு காப்பீட்டு திட்டங்களை நிர்வகித்து வருகிறது. இத்திட்டங்கள், எஸ்.பி.ஐ., வங்கியின், 24 ஆயிரம் கிளைகள் மற்றும் இதர வங்கிகளின், 8,500 கிளைகள் மூலம், வினியோகிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்திய, சில புதிய பங்கு வெளியீடுகள் குறித்து, சாதகமற்ற கருத்துக்களை தெரிவித்த, சென்ட்ரம் புரோக்கிங் நிறுவனம், ‘எஸ்.பி.ஐ., லைப் பங்குகளை வாங்கலாம்’ என, பரிந்துரைத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|