பதிவு செய்த நாள்
20 செப்2017
02:42

மும்பை : டாடா சன்ஸ் நிறுவனம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், 1.7 சதவீத பங்குகளை வாங்க உள்ளது.
தற்போது, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையின்படி, 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை, டாடா சன்ஸ் வாங்கும் என, தெரிகிறது. இந்நடவடிக்கைகளை மேற்கொள்ள, டாடா சன்ஸ், சிட்டி வங்கியை நியமித்துள்ளது. ஏற்கனவே, டாடா சன்ஸ் நிறுவனம், 2016 டிசம்பரில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், 1.02 சதவீத பங்குகளை, 2,430 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதையடுத்து, ஒரே ஆண்டில், இரண்டாவது முறையாக, தற்போது மீண்டும் பங்குகளை வாங்குகிறது. இதன் மூலம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்கு, 33.3 சதவீதமாக உயரும்.
விரைவில், திரும்ப வாங்கும் பங்குகள் மற்றும் விலை உள்ளிட்ட விபரங்களை, டாடா சன்ஸ் தெரிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில், டாடா இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டாடா இன்வெஸ்ட்மென்ட் நிறுவனங்களும், முறையே, 2.5 சதவீதம் மற்றும் 0.37 சதவீத பங்குகளை கொண்டுள்ளன. டாடா சன்ஸ் நிறுவனம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது தொடர்பான தகவல் வெளியானதை அடுத்து, மும்பை பங்குச் சந்தையில், நேற்று பங்கு விலை, 18.55 ரூபாய் அதிகரித்து, ௪௨௩.௯௦ ரூபாயாக உயர்ந்துள்ளது.
டாடா சன்ஸ், அதன் கீழ் உள்ள நிறுவனங்கள் அனைத்திலும், குறிப்பிடத்தக்க அளவிற்கு பங்கு மூலதனத்தை உயர்த்தி, தனியார் நிறுவனமாக மாற முயற்சித்து வருகிறது. இதற்கு, டாடா சன்ஸ் முன்னாள் தலைவர், சைரஸ் மிஸ்திரி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|