பொருளாதார வளர்ச்சி குறையும்: ஆசிய வளர்ச்சி வங்கி மறுமதிப்பீடுபொருளாதார வளர்ச்சி குறையும்: ஆசிய வளர்ச்சி வங்கி மறுமதிப்பீடு ... ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சி : ரூ.65.55 ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சி : ரூ.65.55 ...
‛சேற்றை வாரி இறைக்கின்றனர்’ : ‘டிராய்’ தலைவர் வேதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2017
08:14

புதுடில்லி : ‘‘இணைப்பு கட்­டண குறைப்பு குறித்து, மொபைல் போன் சேவை நிறு­வ­னங்­கள், நியா­ய­மற்ற வகை­யில் சேற்றை வாரி இறைப்­பது, வேதனை அளிக்­கிறது,’’ என, தொலை தொடர்பு ஒழுங்­கு­முறை ஆணை­ய­மான, ‘டிராய்’ தலை­வர், ஆர்.எஸ்.சர்மா தெரி­வித்து உள்­ளார்.

ஒரு மொபைல் போன் அழைப்­பில், வேறு நிறு­வ­னத்­தின் சேவையை பெறு­வ­தற்கு, இணைப்பு கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­ப­டு­கிறது. நிறு­வ­னங்­கள் இடை­யி­லான இந்த கட்­ட­ணம், நிமி­டத்­திற்கு, 14 காசு­களில் இருந்து, 6 காசு­க­ளாக குறைக்­கப்­பட்டு உள்­ளது. இது, அக்., 1 முதல், அம­லுக்கு வரு­கிறது. இதை­ய­டுத்து, 2018 ஜன., 1 முதல், இக்­கட்­ட­ணம் முழு­வ­து­மாக ரத்து செய்­யப்­பட்டு உள்­ளது.

மொபைல் போன் நிறு­வ­னங்­கள், இத்­திட்­டத்­தின் பயனை, வாடிக்­கை­யா­ள­ருக்கு வழங்­கும்­பட்­சத்­தில், அழைப்பு கட்­ட­ணம் குறை­யும். ஆனால், ‘முகேஷ் அம்­பா­னி­யின், ‘ஆர்­ஜியோ’ நிறு­வ­னத்­திற்கு சாத­க­மாக, இந்த முடிவு எடுக்­கப்­பட்டு உள்­ளது’ என, பார்தி ஏர்­டெல், வோட­போன், ஐடியா செல்­லு­லார் ஆகிய நிறு­வ­னங்­கள் குற்­றஞ்­சாட்டி உள்ளன. ஏனெ­னில், இந்­நி­று­வ­னங்­கள் அவற்­றின் மொத்த வரு­வா­யில், 9 – 10 சத­வீ­தத்தை, இணைப்பு கட்­ட­ணம் மூலம் பெறு­கின்றன.

இக்­கட்­ட­ணம் குறைக்­கப்­பட்­டால், அவற்­றின் வரு­வாய் குறை­யும். குறிப்­பாக, ஆர்­ஜி­யோ­வி­டம் பெறும் தொகை குறை­யும். அதே சம­யம், துவக்­கம் முதல், இல­வச அழைப்­பு­களை வழங்கி வரும் ஆர்­ஜி­யோ­வுக்கு, இணைப்பு கட்­டண செலவு மிச்­ச­மா­கும். ஏற்­க­னவே, ஆர்­ஜி­யோ­வின் போட்­டி­யால், வாடிக்­கை­யா­ளர்­களை இழந்து வரும் நிலை­யில், கட்­டண செல­வும் மிச்­ச­மா­னால், போட்டி மேலும் அதி­க­ரிக்­கும் என, இதர நிறு­வ­னங்­கள் அஞ்­சு­கின்றன. இத­னால், இணைப்பு கட்­டண குறைப்­புக்கு கடும் எதிர்ப்பு தெரி­வித்து உள்ளன.

இந்­நி­லை­யில், ‘டிராய்’ தலை­வர், ஆர்.எஸ்.சர்மா கூறி­ய­தா­வது: வெளிப்­ப­டை­யான முறை­யில், அழைப்­பு­களை கையா­ளும் கட்­ட­ணம் கணக்­கி­டப்­பட்டு உள்­ளது. அந்த விப­ரங்­களை, யார் வேண்­டு­மா­னா­லும் ஆரா­ய­லாம். இந்­தியா போன்ற ஜன­நா­யக நாட்­டில், ஆக்­க­பூர்­வ­மான விமர்­ச­னங்­களை, நாங்­கள் வர­வேற்­கி­றோம். ஆனால், சில விமர்­ச­னங்­கள் எல்லை தாண்டி உள்ளன. அவை, அமைப்­பின் நேர்மை மற்­றும் ஒருங்­கி­ணைப்பு குறித்­தும், அமைப்­பில் அங்­கம் வகிப்­போ­ரின் செயல்­பா­டு­கள் குறித்­தும் கேள்வி எழுப்­பு­கின்றன; அது, சரி­யல்ல; சேற்றை வாரி இறைக்­கும் செயல்.

நீதி­மன்­றம், மத்­தி­யஸ்­தர் அல்­லது ஒழுங்­கு­முறை ஆணை­யம் போன்று முடி­வு­கள் எடுக்­கும்­பட்­சத்­தில், அது, வெவ்­வேறு தரப்­பி­ன­ரி­டம், மாறு­பட்ட தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும். இணைப்பு கட்­ட­ணம், லாபம் குவிப்­ப­தற்­கான வழி­யாக மாறக் கூடாது என்­ப­தில், ‘டிராய்’ உறு­தி­யாக உள்­ளது. அத­ன­டிப்­ப­டை­யில் தான், கணக்­கீ­டு­கள் செய்­யப்­பட்டு, விப­ரங்­களை வெளிப்­ப­டை­யாக வெளி­யிட்டு உள்­ளோம். யாரு­டைய மன­தி­லும், எவ்­வித சந்­தே­கத்­திற்­கும் இட­ம­ளிக்­கக் கூடாது என்ற நோக்­கத்­தில், ஒளி­வு­ம­றை­வின்றி தக­வல்­கள் வெளி­யி­டப்­பட்டு உள்ளன. அத­னால், தரம் தாழ்ந்த கருத்து பகிர்வு, மனதை புண்­ப­டுத்­து­வ­தாக உள்­ளது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)