பதிவு செய்த நாள்
06 அக்2017
11:53

ஐதராபாத் : ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் மொபைல் போன்களையும், அத்துடன் பல சலுகைகளையும் வழங்க பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளது. இதற்காக பிரபல மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களான லாவா மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தத்தை பிஎஸ்என்எல் போட்டுள்ளது.
இது குறித்து பிஎஸ்என்எல்.,ன் ஐதராபாத் தொலைதொடர்பு மாவட்ட தலைமை பொது மேலாளர் ராம்சந்த் கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் சிம் கார்டுகளுடன் மிக குறைந்த விலையில் மொபைல் போன்களையும் வழங்க திட்டமிட்டுள்ளோம். இந்த சிம் கார்டுக்கு பல சலுகைகளும் வழங்கப்பட உள்ளது. தற்போது ஐதராபாத்தில் 6 பகுதிகளில் வைபை வசதி செய்து கொடுத்துள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 112 பகுதிகளில் இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என்றார்.
பிஎஸ்என்என் நிறுவனம் ரூ.429 க்கு புதிய திட்டம் ஒன்றை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த புதிய திட்டத்தின் கீழ் ரூ.429 க்கு அளவற்ற வாய்ஸ் கால்கள், தினமும் 1 ஜிபி டேட்டா 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மண்டலங்களில் 3.5 லட்சத்திற்குள் அதிகமான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் இணைப்புக்கு மாறி உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|