பதிவு செய்த நாள்
07 அக்2017
00:06

புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, ‘ஏர் – இந்தியா’ நிறுவனத்தை, நடப்பு நிதியாண்டிற்குள் விற்பனை செய்ய, மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு உள்ளது.
இழப்பை சந்தித்து வரும், ஏர் – இந்தியா மற்றும் அதன், ஐந்து துணை நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளை விற்க, பொருளாதார விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவைக் குழு, ஜூன் மாதம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, ஏர் – இந்தியாவை விற்பதற்கான பணிகள் சூடுபிடித்து உள்ளன.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏர் – இந்தியாவை வாங்க, தகுதியான நிறுவனங்கள் முன்வந்தால், நடப்பு நிதியாண்டிற்குள் விற்பனையை, மத்திய அரசு முடித்து விடும். நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை பங்கு விற்பனை மூலம், 72 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
இதை அடைய, ஜி.ஐ.சி., நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் உள்ளிட்ட, பொதுத் துறை நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகள் துணை புரியும். கடந்த நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம், 56,500 கோடி ரூபாய் திரட்ட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்த இலக்கு எட்டப் படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|