50 லட்சம் பேரிடம் எஸ்.பி.ஐ., ‘கிரெடிட்’ கார்டு 50 லட்சம் பேரிடம் எஸ்.பி.ஐ., ‘கிரெடிட்’ கார்டு ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.65.32 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.65.32 ...
வரி குறைப்பு – கணக்கு தாக்கல் ஜி.எஸ்.டி., விதிமுறைகள் தளர்வு சிறு, நடுத்தர நிறுவனங்கள் வரவேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2017
04:30

புதுடில்லி : ஜி.எஸ்.டி., விதி­களை தளர்த்தி, பல்­வேறு பொருட்­க­ளுக்கு வரியை குறைத்து, கணக்கு தாக்­கல்செய்­வதை சுல­ப­மாக்­கிய,ஜி.எஸ்.டி., கவுன்­சி­லுக்கு, சிறு, நடுத்­தரநிறு­வ­னங்­கள் பாராட்டு தெரி­வித்து உள்­ளன.நேற்று முன்­தி­னம்,ஜி.எஸ்.டி., கவுன்­சில்கூட்­டத்­தில், ‘பிராண்டு’அல்­லாதநொறுக்­குத் தீனி­கள், ஆயுர்­வேத மருந்­து­கள் உட்­பட, 60க்கும் மேற்­பட்ட பொருட்­க­ளுக்­கான வரியை, 12 சத­வீ­தத்­தில் இருந்து, 5 சத­வீ­த­மாக குறைக்க, முடிவு செய்­யப்­பட்­டது.மேலும், ‘காம்­போ­சி­ஷன்’ எனப்­படும், கலவை வரிதிட்­டத்­தில், விற்­று­மு­தல் வரம்பு, 1 கோடி ரூபா­யாக உயர்த்­தப்­பட்டு உள்­ளது.ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் செலுத்­திய வரியை, விரை­வாகதிரும்­பத் தர­வும், அவர்­கள், நடப்பு நிதி­யாண்டு வரை, விலக்­க­ளிக்­கப்­பட்ட பிரி­வின் கீழ், 0.1 சத­வீ­தம் மட்­டும், ஜி.எஸ்.டி., செலுத்­த­வும் சலுகை வழங்­கப்­பட்­டுள்­ளது.இது போல அறி­விக்­கப்பட்­டுள்ள பல சலு­கை­களை, தொழில் துறை­யி­னர்வர­வேற்று உள்­ள­னர்.சந்­தி­ர­ஜித் பானர்ஜி,டைரக்­டர் ஜென­ரல், இந்­திய தொழி­லக கூட்­ட­மைப்பு:கலவை வரி திட்­டத்­தில், விற்­று­மு­தல், 75 லட்­சம் ரூபா­யில் இருந்து, 1 கோடி ரூபா­யாக உயர்த்­தப்­பட்­ட­தன் மூலம், சிறிய, நடுத்­தரநிறு­வ­னங்­கள், மிகப்­பெ­ரிய அள­வில் பயன் பெறும்.ஆண்­டுக்கு, 1.50 கோடி ரூபாய் வரை, விற்­று­மு­தல்உள்ள நிறு­வ­னங்­கள்,காலாண்­டுக்கு ஒரு­முறை கணக்கு தாக்­கல் செய்­தால் போதும் என, அறி­விக்­கப்­பட்டுள்­ளது.இத­னால், சிறு, நடுத்­தரநிறு­வ­னங்­கள், மாதாந்­திர கணக்கு தாக்­கல் செய்­யும் தொல்­லை­யில் இருந்துவிடு­படும்.மேலும், ‘ரிவெர்ஸ் சார்ஜ் மெக்­கா­னி­சம்’ திட்­டம், 2018 மார்ச் வரை, தள்ளி வைக்­கப்­பட்டு உள்­ளது. இத­னால், பதிவு பெற்ற பெரிய நிறு­வ­னங்­கள், பதிவு செய்­யாத சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து, பொருட்­களை தடை­யின்றி கொள்­மு­தல் செய்­யும்.‘ஏசி’ உண­வ­கங்­க­ளுக்­கான வரியை, 18 சத­வீ­தத்­தில் இருந்து,12 சத­வீ­த­மாக குறைக்­கும் திட்­டம், பொரு­ளா­தாரவளர்ச்­சிக்கு உத­வும்.
ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சிஇந்­திய ஏற்­று­மதி நிறு­வ­னங்­கள் கூட்­ட­மைப்பின் தலை­வர், கணேஷ் குமார் குப்தா கூறியதாவது:ஏற்­று­ம­தி­யா­ளர்­கள், ஜூலை – ஆகஸ்­டில் செலுத்­திய, ஜி.எஸ்.டி., 10 மற்­றும் 18ம் தேதி, திரும்­பத் தரப்­படும் என்ற அறி­விப்பு, மகிழ்ச்சி அளிக்­கிறது. இத­னால், முன்­கூட்­டியே வரியை செலுத்தி, நடை­முறை மூல­தன தேவையை சமா­ளிக்க முடி­யா­மல் திணறி வரும் ஏற்­று­ம­தி­யா­ளர்­கள், நிம்­மதி பெரு­மூச்சு விடு­வர். அது போல, ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு என, அறி­மு­க­மாக உள்ள, ‘இ – வாலட்’ திட்­ட­மும், நிதி பிரச்­னைக்கு தீர்­வ­ளிக்­கும். ஏற்­று­மதி மண்­டல நிறு­வ­னங்­கள் உட்­பட, சிறப்பு பிரி­வைச் சேர்ந்த நிறு­வ­னங்­கள், இறக்­கு­மதி செய்­யும் மூலப்­பொ­ருட்­க­ளுக்­கும், உள்­நாட்டில் கொள்­மு­தல் செய்­யும் பொருட்­க­ளுக்­கும், ஐ.ஜி.எஸ்.டி., எனப்­படும், ஒருங்­கி­ணைந்த, ஜி.எஸ்.டி., மற்­றும் தீர்­வையை செலுத்­து­வ­தில் இருந்து, விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது வர­வேற்­கத்­தக்­கது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)