வரி குறைப்பு – கணக்கு தாக்கல் ஜி.எஸ்.டி., விதிமுறைகள் தளர்வு சிறு, நடுத்தர நிறுவனங்கள் வரவேற்புவரி குறைப்பு – கணக்கு தாக்கல் ஜி.எஸ்.டி., விதிமுறைகள் தளர்வு சிறு, நடுத்தர ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.65.32 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.65.32 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
நாடு உயர, கடன் உய­ரட்­டும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2017
00:07

உல­கெங்­கும் பல நாடு­களின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு உறு­து­ணை­யாக இருக்­கும் துறை­களில் ஒன்று, மனை வணி­கம். இந்­தி­யா­வில் அத்­து­றையை மீண்­டும் பொலிவு பெறச் செய்து, அதன்­மூ­லம் வேலை­வாய்ப்­பு­க­ளை­யும் வளர்ச்­சி­யை­யும் பெருக்க, மத்­திய ரிசர்வ் வங்­கி­யும் அரசும் எடுத்­து­ வ­ரும் முயற்­சி­கள், நம் கவ­னத்­தைக் கவ­ரு­கின்றன.

அடுக்­க­கங்­க­ளையோ மனை­க­ளையோ வாங்­கு­வ­தற்கு முத­லில் மக்­க­ளி­டம் போதிய நிதி வசதி தேவை. இதற்கு, மத்­தி­ய­மர்­களும் மாதச் சம்­ப­ளக்­கா­ரர்­களும் நம்­பி­யி­ருப்­பது வங்­கிக் கடன்­க­ளையே. வங்­கிக் கடன்­களோ பல்­வேறு சிக்­கல்­களில். முக்­கி­ய­மாக அதன் வட்டி விகி­தம்.

குறைந்த வட்டி விகிதம்:
அமெ­ரிக்­கா­வில், 30 ஆண்­டு­க­ளுக்­கான நிலை­யான வட்டி விகி­தம், 3.83 சத­வீ­தம். 15 ஆண்­டு­க­ளுக்­கான வட்­டி­ விகி­தம் 3.13 சத­வீ­தம். நியூ­சி­லாந்­திலோ 3.87 சத­வீ­தம். இங்­கி­லாந்­தி­லும் வட்­டி­வி­கி­தம் குறைவே. ஆனால், இந்­தி­யா­விலோ, எம்.சி.எல்.ஆர்., அடிப்­ப­டை­யில் வழங்­கப்­படும் குறைந்­த­பட்ச வட்­டி ­வி­கி­தமே, 8.35 சத­வீ­தம். இத்­த­னைக்­கும் மத்­திய ரிசர்வ் வங்கி, தனி­யார் வங்­கி­க­ளுக்கு வழங்­கும் தொகைக்­கான வட்டி விகி­த­மான ‘ரெப்போ’ விகி­தத்­தைத் தொடர்ந்து குறைத்து வரு­கிறது. இதன் பலன் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு நேர­டி­யா­கப் போய்ச்­சேர வேண்­டும், அவர்­கள் பெறும் கடன்­க­ளுக்­கான வட்­டி­வி­கி­தம் குறைய வேண்­டும் என்­பதே ரிசர்வ் வங்­கி­யின் எண்­ணம். வங்­கி­களோ, இந்­தப் பலனை வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கு­வ­தில் தாம­தம் செய்­கின்றன அல்­லது குறைந்த அளவே வழங்­கு­கின்றன.

பர்­ச­னல் லோன்:
வங்­கி­கள் பல்­வேறு பிரி­வி­ன­ருக்கு கடன்­கள் வழங்­கு­கின்றன. அவற்­றில் ‘பர்­ச­னல் லோன்’ எனப்­படும் தனி­ந­பர் கடன் மட்­டும் 22 சத­வீ­தம். இதி­லும் பெரும்­பான்மை, வீட்­டுக் கடன் தான். இந்­தப் பிரி­வி­னர் மட்­டும் தான் நியாய, தர்­மத்­துக்­குக் கட்­டுப்­பட்டு வட்­டி­­யும் முத­லும் ஒழுங்­கா­கச் செலுத்­தக்­கூ­டி­ய­வர்­கள். இவர்­க­ளி­டையே ‘வாராக்­க­டன்’ பிரச்னை வாரா. இவர்­க­ளுக்கு வயிற்­றில் பாலை வார்க்­கும்­வி­த­மாக, ரிசர்வ் வங்­கி­யின் ஆய்­வுக் குழு­வொன்று நல்ல ஆலோ­ச­னை­க­ளைத் தெரி­வித்­துள்­ளது.

கூடு­தல் கட்­ட­ணம் கூடாது:
கடன்­க­ளுக்­கான வட்­டியை நிர்­ண­யம் செய்­யும்­போது, வங்­கி­கள், கரு­வூல பில்­களின் விகி­தம் அல்­லது குறு­கி­ய­ கால கடன்­க­ளுக்­கான விகி­தம் அல்­லது மத்­திய வங்­கி­யின் ரெப்போ விகி­தம் ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யாக கொண்­டி­ருக்­க­ வேண்­டும் என்­பது இக்­கு­ழு­வின் கருத்து. இந்த விகி­தங்­களும் காலாண்­டுக்கு ஒரு­முறை மாற்­றி­ய­மைக்­கப்­பட வேண்­டும். இப்­போது இது ஓராண்­டுக்கு ஒரு­முறை மாற்­றப்­ப­டு­கிறது. ஏற்கனவே வீட்­டுக்­க­டன் வாங்­கி­ய­வர்­கள், பழைய ‘பேஸ் ரேட்’ வட்டி விகி­தத்­தி­லி­ருந்து, எம்.சி.எல்.ஆர். வட்­டி­வி­கி­தத்­துக்கு மாறும்­போது, கூடு­தல் கட்­ட­ணம் எது­வும் வசூ­லிக்­கப்­ப­டக் கூடாது.

எம்.சி.எல்.ஆர்., என்ற புதிய முறை­யி­லான வீட்­டுக் கடன் வட்­டி­ வி­கி­தம் ஏப்­ரல் 2016 முதல் அம­லுக்கு வந்­துள்­ளது. இதைப் பின்­பற்­றும்­போது, வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­கான வட்­டி­ வி­கி­தம் குறை­யும். ‘பேஸ் ரேட்’டிலி­ருந்து எம்.சி.எல்.ஆர்.,க்கு மாறு­வ­தற்கு இறுதி தேதி எது­வும் குறிக்­கப்­ப­டா­த­தால், வங்­கி­கள் மிக­ மெது­வா­கவே, மாற்­றங்­க­ளைச் செய்­து ­வ­ரு­கின்றன. இத­னால், ரிசர்வ் வங்கி விரும்­பும் பலன், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குக் கிடைக்­க­வில்லை. மத்­திய ரிசர்வ் வங்கி ஆய்­வுக்­குழு ஆலோ­ச­னை­க­ளுக்­குப் பின், இந்த நிலை­யில் முன்­னேற்­றம் ஏற்­படும்.

நிதிச்­சுமை குறைவு:
மேலும், பிர­த­மர் வீட்டு வச­தித் திட்­டத்­தில் முதன் முறை­யாக வீடு வாங்­கி­னால் வீட்­டுக் கட­னுக்­கான வட்­டி­யில் குறிப்­பிட்ட சத­வீ­தம், மானி­ய­மாக வழங்­கப்­படும். டிசம்­பர் – 2018 உடன் முடி­வ­தாக இருந்த மானி­யத் திட்­டம், மார்ச் – 2019 வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது, மற்­றொரு முக்­கிய முன்­னேற்­றம்.வட்டி மானி­யத்­தின் மூலம், முதல்­முறை வீடு வாங்­கு­வோ­ரது நிதிச்­சுமை ஓர­ள­வுக்­குக் குறைய வாய்ப்­புள்­ளது. அர­சாங்­கம் செயல்­ப­டுத்­தும் மற்­றொரு திட்­டம், மலி­வு­விலை வீட்­டு­வ­சதி. இதற்­காக, அர­சு நிலத்­தைப் பயன்­ப­டுத்தி தனி­யார் நிறு­வ­னங்­கள் கட்­ட­டங்­கள் கட்­டு­வ­தற்­கான ஆறு திட்ட மாதி­ரி­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்ளன. வீட்­டு­வ­ச­தியை மேம்­ப­டுத்த, மேலும் ஒரு வழி­மு­றையை அர­சு மேற்­கொண்­டுள்­ளது. அதன்­படி, 10 லட்­சம் பேருக்கு மேல் வசிக்­கக்­கூ­டிய 53 இந்­திய நக­ரங்­களில் உள்ள ப்ளோர் ஸ்பேஸ் இன்டெக்சை (எப்.எஸ்.ஐ.) மாற்­றி­ய­மைக்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

ஒற்­றைச்­சா­ளர முறை:
மனை­யின் அள­வைப் பொறுத்து, அதன் மீது எத்­தனை சதுர அடி கட்­ட­டம் கட்­டப்­ப­ட­லாம் என, வரை­ய­றுக்­கும் விகி­தமே எப்.எஸ்.ஐ., பல நக­ரங்­களில் இந்த விகி­தம் வெகு குறை­வாக உள்­ளது. இதை மாற்­றி­ய­மைப்­ப­தன் மூலம், இருக்­கக்­கூ­டிய சிறிய இடத்­தில் அதிக எண்­ணிக்­கை­யி­லான அடுக்­க­கங்­கள் எழுப்­பப்­ப­ட­லாம். அர­சு மட்­டு­மல்­லா­மல், வங்­கி­களும் ரியல் எஸ்­டேட் துறை வளர்ச்­சியை மேம்­ப­டுத்த முயன்று வரு­கின்றன. ஒரு வங்கி, முதல் 12 மாதாந்­திர தவ­ணைத் தொகையை தள்­ளு­படி செய்ய, மற்­றொரு வங்கி, மொத்த கட­னில் ௧ சத­வீத­தொகையை கேஷ் பேக்­காக வழங்க முன் வந்­தி­ருக்­கிறது. இன்­னொரு நிறு­வ­னம் மறை­முக கட்­ட­ணங்­கள் அத்­த­னை­யை­யும் ஒழித்­து­விட, இன்­னொரு வங்கி, பிரா­ச­ஸிங் கட்­ட­ணத்­தைக் குறைத்­து­விட்­டது.

இவை போதுமா? போதாது. பதி­வுக் கட்­ட­ணங்­கள் பல மாநி­லங்­களில் மிக அதி­கம். அதைக் குறைக்க வேண்­டும் என்­ப­தோடு, கட்­ட­டங்­க­ளுக்கு அனு­மதி கொடுக்­கப்­படும் ஒற்­றைச்­சா­ளர முறை எல்லா மாநி­லங்­க­ளி­லும் அமல்­ப­டுத்த வேண்­டும் என்ற கோரிக்­கை­யும் முன்­வைக்­கப்­ப­டு­கிறது. ‘வரப்­பு­யர... கோன் உயர்­வான்’ என்­பது அவ்­வை­யின் பழம்­பா­டல். இப்­போது, ‘கடன் பெருக... நாடு உய­ரும்’ என்­பதே பொரு­ளா­தார புது­மொழி.
-ஆர்.வெங்­க­டேஷ்பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)