பதிவு செய்த நாள்
09 அக்2017
23:44

புதுடில்லி : இந்தியாவில், எண்ணெய் மற்றும் எரிவாயு வள ஆய்வு, உற்பத்தி ஆகியவற்றில், முதலீடுகளை ஈர்ப்பதற்காக, சர்வதேச எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களுடன், பிரதமர் மோடி பேச்சு நடத்தினார்.
இதில், பிரிட்டிஷ் பெட்ரோலியம், ரோஸ்நெப்ட், ராயல் டச், ஷெல் புராஜெக்ட் அண்டு டெக்னாலஜி, சவுதி அரம்கோ, எக்ஸான் மொபைல் உள்ளிட்ட, பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்றனர்.இவர்களுடன், ரிலையன்ஸ் குழும தலைவர், முகேஷ் அம்பானி, வேதாந்தா ரிசோர்சஸ் தலைவர், அனில் அகர்வால் மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த பேச்சின் போது, ‘நிடி ஆயோக்’ அமைப்பு, கச்சா எண்ணெய் உற்பத்தி, எதிர்கால தேவை, அரசின் கொள்கைகள் ஆகியவற்றை விளக்கும் குறும்படத்தை திரையிட்டது.இந்தியா, அதன் கச்சா எண்ணெய் தேவையில், 80 சதவீதத்தை, இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து கொள்கிறது; இதை, 2022ல், 67 சதவீதமாக குறைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.ஆண்டுதோறும் கச்சா எண்ணெய் தேவை, 5 – 6 சதவீதம் உயருகிறது; ஆனால், உற்பத்தியில், தேக்க நிலை நீடிக்கிறது. இதற்கு தீர்வு காண, உலகின் முன்னணி நிறுவன தலைவர்களுடன், மோடி பேச்சு நடத்தி உள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|