சிறந்த முத­லீ­டாகும் தங்க சேமிப்பு பத்­தி­ரங்கள்சிறந்த முத­லீ­டாகும் தங்க சேமிப்பு பத்­தி­ரங்கள் ... ‘கேஷ்பேக்’ சலு­கைகள் மூலம் பலன் பெறு­வது எப்­படி? ‘கேஷ்பேக்’ சலு­கைகள் மூலம் பலன் பெறு­வது எப்­படி? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
முத­லீட்டு மந்­திரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2017
00:07

பொருத்­த­மான நிதி சாத­னங்­களில் முத­லீடு செய்ய வேண்டும். அவை, நிதி இலக்­கிற்கு ஏற்ப அமைய வேண்டும் என்­ப­தையும், தொடர்ந்து சீராக முத­லீடு செய்ய வேண்டும் என்­ப­தையும் அறிந்­தி­ருப்­பீர்கள். எதிர்­கா­லத்­திற்கு தேவை­யான வளத்தை உரு­வாக்கிக் கொள்ள இது தான் அடிப்­படை. ஆனால், இது மட்டும் போதுமா? முத­லீட்டில் இன்­னொரு முக்­கி­ய­மான உத்­தியை கடை­பி­டிப்­பது அவ­சியம் தெரி­யுமா? அது, முத­லீட்டை போகப் போக அதி­க­மாக்­கு­வ­தாகும்.

கிரிக்கெட் உத்தி:
கிரிக்கெட் போட்­டி­களில் நல்ல துவக்கம் அமைந்த பின், ரன் குவிப்பு வேகத்தை அதி­க­மாக்கிக் கொண்டே செல்­வதை ஒரு உத்­தி­யாக பின்­பற்­று­கின்­றனர் அல்­லவா? அதே போல, முத­லீட்­டிலும் அவ்­வப்­போது முத­லீட்டு தொகையை உயர்த்திக் கொண்டே செல்­வது அவ­சியம். வைப்பு நிதி முத­லீடோ, எஸ்.ஐ.பி., மூல­மான, ‘மியூச்­சுவல் பண்ட்’ முத­லீடோ, அவை, முத­லீட்­டா­ளர்­களின் வரு­மான உயர்வு, பண­வீக்கம் மற்றும் முத­லீட்டு இலக்­கிற்கு ஏற்ப ஈடு கொடுக்க முத­லீட்டுத் தொகையை அதி­க­ரிப்­பது முக்­கியம்.

ஏன் அவ­சியம்?
முத­லீட்டை துவக்கும் போது அப்­போ­தைய வரு­மானம் மற்றும் பொரு­ளா­தார சூழ­லுக்கு ஏற்­பவே முத­லீட்டின் தொகை அமைந்­தி­ருக்கும். உதா­ர­ணத்­திற்கு, ஐந்து ஆண்­டு­க­ளுக்கு முன், ஒருவர் மாதம், 2,000 ரூபாயை முத­லீடு செய்­தி­ருக்­கலாம். அப்­போது, ஒரு நிதி இலக்கும் இருந்­தி­ருக்கும். ஆனால், அதன் பிறகு அவர் வரு­மா­னமும் அதி­க­ரித்­தி­ருக்கும்; தேவை­களும் அதி­க­ரித்­தி­ருக்கும். எனவே, அவற்­றுக்கு ஈடு கொடுக்கும் வகையில் முத­லீட்டை, 5,000 ரூபாய் என உயர்த்த வேண்டும்.

பண­வீக்கம்:
பொது­வாக நிதி முடி­வு­களை எடுக்கும் போது பலரும் திரும்ப கிடைக்கும் பலன், வரி சேமிப்பு உள்­ளிட்ட அம்­சங்­களை கருத்தில் கொள்­கின்­ற­னரே தவிர, பண­வீக்­கத்தை மறந்து விடு­கின்­றனர். பண­வீக்கம் வாங்கும் சக்­தியை பாதிக்­கி­றது. 20 ஆண்­டு­க­ளுக்கு முன், 100 ரூபாய் என்­பது இப்­போது, 29 ரூபாய் மதிப்பு கொண்­ட­தா­கவே இருக்கும். எனவே, பண­வீக்­கத்­திற்கு முத­லீட்டின் பலன் ஈடு கொடுக்க வேண்டும் எனில், குறிப்­பிட்ட இடை­வெ­ளியில் முத­லீட்டுத் தொகையை உயர்த்­து­வது அவ­சியம்.

என்ன பலன்?
முத­லீட்டை தொடர்­வது போலவே ஒவ்­வொ­ருவர் சூழ­லுக்கு ஏற்ப அதற்­கான தொகையை அதி­க­ரிப்­பதும் முக்­கி­ய­மா­னது. நீண்ட கால நோக்கில் வளத்தை உரு­வாக்கிக் கொள்ள இது உதவும். அதிலும், குறிப்­பாக ஓய்வு கால முத­லீடு போன்ற நீண்ட கால இலக்­கு­க­ளுக்கு இது அதிகம் பொருந்தும். மேலும், ஒரு­வரின் முத­லீட்டு இலக்­கு­க­ளுக்கும் ஈடு­கொ­டுக்க இது அவ­சியம்.

எப்­படி செய்­வது?
முத­லீட்டை அதி­க­ரிப்­பதை பல­வி­தங்­களில் செய்­யலாம். முதலில் இதற்­கான தெளி­வாக இலக்கு தேவை. உதா­ர­ணத்­திற்கு மாதந்­தோறும், 1,000 ரூபாய் முத­லீடு செய்தால், அதை இரண்டு ஆண்­டு­க­ளுக்கு பின் இரட்­டிப்­பாக்க வேண்டும் என தீர்­மா­னித்து அதற்­கேற்ப செயல்­ப­டலாம். மியூச்­சுவல் பண்ட்­க­ளுக்­கான எஸ்.ஐ.பி., வழி எனில், சில ஆண்­டு­களில் தொகையை அதி­க­ரிக்­கும்­படி, நிதியை நிர்­வ­கிக்கும் நிறு­வ­னத்­திற்கு தெரி­விக்­கலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)