பதிவு செய்த நாள்
23 அக்2017
00:07
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் விலை, கடந்த வாரம் ஆரம்பத்தில் உயர்ந்து, வார இறுதியில் சரிவைக் கண்டது. அதற்கு முந்தைய வாரம் சிறிது விலை ஏற்றம் காணப்பட்டது. இருப்பினும் விலை உயர்வு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அமெரிக்காவின் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்து வருவதால், அதன் விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
மறுபக்கம், 'ஒபெக்' நாடுகள் ஒன்றிணைந்து கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதனால், பொதுச் சந்தையில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில், உற்பத்தியில், தினசரி, 1.78 மில்லியன் பேரல்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, 'ஒபெக்' நாடுகளின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி குறைந்துள்ளது.
இந்நிலையில், சர்வதேச கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் தேவை குறித்து, 'ஒபெக்' மற்றும் அதன் கூட்டமைப்பு நாடுகளின் எண்ணெய் துறை அமைச்சர்களின் கூட்டம், நவ., 30ல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அமெரிக்காவின் கச்சா எண்ணெய் அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள தாக்கம், சர்வதேச தேவைப்பாடு உள்ளிட்ட அம்சங்களை ஆராய்ந்து, உற்பத்தி குறைப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என, தெரிகிறது. வரும் நாட்களில், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 53 டாலராக இருக்கும். இதை கடக்கும் நிலையில், அதன் விலை, 55.50 டாலர் வரை உயரும். இதன் தாங்கு விலை, 49.50 டாலராக இருக்கும்.
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 3,325 3,290 3,360 3,428என்.ஒய்.எம்.இ.எக்ஸ்., (டாலர்) 50.80 49.50 52.50 55.00
தங்கம், வெள்ளி
தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கடந்த வாரம் சரிவில் முடிந்துள்ளன. தொடர்ந்து, 8 மாதங்களாக தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், செப்டம்பரில் அதன் விலை வீழ்ச்சியடைந்தது. மேலை நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகள், ரிசர்வ் வங்கிகளின் நிதிக் கொள்கைகள் ஆகியவை, பொதுவாகவே தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில், ஆபரணங்களுக்கான தேவைப்பாட்டை விட, முதலீடுகளுக்கான தேவையே முக்கிய பங்கு வகிக்கிறது.ஆனால், வெள்ளி விலையை பொறுத்தவரை, முதலீட்டு நோக்கத்தை விட, நுகர்விற்கான தேவையே அதன் விலையை நிர்ணயிக்கிறது. இருப்பினும் இவ்விரு கனிமங்களும் ஒருமித்த நிலையில் வர்த்தகமாகின்றன.
சில சந்தர்பங்களில் விலை மீதான மாற்றம் வித்தியாசமடைகின்றது. கடந்த வாரம், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மத்திய வங்கிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், தாராள நிதிக் கொள்கையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையால், அரசு கருவூலம் மற்றும் கடன் பத்திரங்கள் மீதான முதலீட்டு ஆதாயம் கூடும் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. இதன் தாக்கம், தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவில் எதிரொலித்தது. அதேசமயம், அமெரிக்க நாணயக் குறியீடு ஆன 'டாலர் இன்டெக்ஸ்' 1.8 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.
அமெரிக்க அதிபரின் புதிய கொள்கைகளால் எழுந்துள்ள சர்ச்சை ; பிற நாடுகளின் கரன்சி மதிப்பு அதிகரிப்பு ஆகியவை இதற்கு காரணமாகும். இச்சூழல், தங்கம் மற்றும் வெள்ளி விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் தங்கம் சப்போர்ட் விலை 1,260 டாலராகும்.
தங்கம்
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 29,510 29,350 29,800 30,100காம்எக்ஸ் (டாலர்) 1,269 1,260 1,285 1,292
வெள்ளி
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 39,600 39,210 40,050 40,580காம்எக்ஸ் (டாலர்) 16.65 16.20 17.20 17.55
செம்பு
செம்பு விலை கடந்த வாரம் உயர்ந்து மூன்று ஆண்டு உச்சத்தில் வர்த்தகமானது. உலகளவில், செம்புவின் தேவை உயர்ந்து வருகிறது.
சீனா, அதிக அளவில் செம்பை இறக்குமதி செய்து வருகிறது. அதேசமயம், சுரங்கங்களில் செம்பு உற்பத்தி குறைவாக உள்ளது. இதன் காரணமாக, செம்பு விலை அதிகரித்துள்ளது. எல்.எம்.இ., உலகளவில் அதிகமான அளவில் கனிமங்கள் வியாபாரம் நடைபெறும் எக்சேஞ்ச் ஆகும். இதில், 1 டன் செம்பு விலை, பல நாட்களுக்கு பிறகு, 7000 டாலர் என்ற நிலையை எட்டியது
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 441.50 446.00 457.80 462.22
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|