பதிவு செய்த நாள்
25 அக்2017
06:29

பெங்களூரு, அக். 25–நடப்பு, 2017- – 18ம் நிதியாண்டின், ஜூலை – செப்., வரையிலான, இரண்டாவது காலாண்டில், ‘இன்போசிஸ்’நிறுவனத்தின் நிகர லாபம், 7 சதவீதம் உயர்ந்து, 3,726 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 3,606 கோடி ரூபாயாக இருந்தது.நடப்பு நிதியாண்டின், ஏப்., – ஜூன் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடும் போது, நிகர லாபம்,3.4 சதவீதம் அதிகரித்து உள்ளது.இது, இன்போசிஸ் நிறுவனத்தின் செயல் சாரா தலைவராக, நந்தன் நிலேகனி பொறுப்பேற்ற பின், முதன்முறையாக வெளியிட்ட, காலாண்டு நிதி அறிக்கை ஆகும்.முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது, இரண்டாவது காலாண்டில், நிறுவனத்தின் டாலர் மதிப்பிலான வருவாய், 2.9 சதவீதம்; ரூபாய் வருவாய், 5.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.நடப்பு நிதியாண்டில், ரூபாய் வருவாய் வளர்ச்சி, 5.5 – 6.5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. அதே சமயம், டாலர் மதிப்பிலான வருவாய் வளர்ச்சி, 6.5 – 7.5 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.மதிப்பீட்டு காலாண்டில், நிதிச் சேவைகள், காப்பீடு மற்றும் உயர் தொழில்நுட்ப பிரிவுகளின் வருவாய், தலா, 2 சதவீதம் உயர்ந்துள்ளது.சர்வதேச அளவில், நிறுவனத்தின் வருவாய், ஐரோப்பாவில், 6.6 சதவீதம்; வட அமெரிக்காவில், 2 சதவீதம்; இதர நாடுகளில், 2.9 சதவீதம் உயர்ந்துள்ளது.இன்போசிஸ் செயல்பாடு குறித்து, அதன், தற்காலிக தலைமை செயல் அதிகாரி, யு.பி.பிரவின் ராவ் கூறியதாவது:மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன.நிறுவனத்தில் இருந்து, தலைமை செயல் அதிகாரி, விஷால் சிக்கா, திடீரென வெளியேறியதை அடுத்து, உடனடியாக நிர்வாகத்திலும், இயக்குனர் குழுவிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.வர்த்தகத்தில் பாதிப்பை குறைக்கும் நோக்கில், பங்கு முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோருடன், ஆக்கபூர்வ தகவல்களை பகிர்ந்து கொண்டோம். இதனால், நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி நன்கு இருந்தது.இவ்வாறு அவர் கூறினார்.
நிறுவனத்தின் செயல்பாட்டு திறனை மேம்படுத்துவதையே, குறிக்கோளாக கொண்டுள்ளதால், இரண்டாம் காலாண்டில், லாப வரம்பு உயர்ந்துள்ளது. அதே சமயம், ஊழியர்களுக்கு அளிக்கும் இழப்பீட்டையும், ஊதியத்தையும் உயர்த்தி உள்ளோம். மேலும், மூலதன ஒதுக்கீட்டு கொள்கை தொடர்பாகவும், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன. சந்தையில் இருந்து, 13 ஆயிரம் கோடி பங்குகளை, திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், பங்கு முதலீட்டாளர்களுக்கு, ஒரு பங்கிற்கு, 13 ரூபாய் டிவிடெண்டு வழங்குவதாகவும், அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.ரங்கநாத்தலைமை நிதி அதிகாரி, ‘இன்போசிஸ்’
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|