‘2ஜி’ மொபைல் போன் சேவையை நிறுத்த ரிலையன்ஸ் கம்யூ., திட்டம்‘2ஜி’ மொபைல் போன் சேவையை நிறுத்த ரிலையன்ஸ் கம்யூ., திட்டம் ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.73 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.73 ...
மத்திய அரசின் பங்கு மூலதன உதவியால் பொது துறை வங்கிகள் புத்துயிர் பெறும்; ரிசர்வ் வங்கி கவர்னர் புகழாரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2017
00:52

புதுடில்லி : ‘வாராக்­க­ட­னில் சிக்­கி­யுள்ள பொதுத் துறை வங்­கி­க­ளுக்கு, மத்­திய அரசு அறி­வித்­துள்ள, 2.11 லட்­சம் கோடி ரூபாய் பங்கு மூல­தன திட்­டம், நாட்­டின் வருங்­கால பொரு­ளா­தா­ரத்தை பாது­காக்க எடுக்­கப்­பட்ட மகோன்­னதமுயற்சி’ என, ரிசர்வ் வங்கி கவர்­னர், உர்­ஜித் படேல் தெரி­வித்துள்­ளார்.


ஜூன் நில­வ­ரப்­படி, பொது மற்­றும் தனி­யார் துறை­யைச் சேர்ந்த, 39 வங்­கி­களின் வாராக்­க­டன், 8,29,338 கோடி ரூபா­யாக உள்­ளது. இதில், பொதுத் துறை­யைச் சேர்ந்த, 21 வங்­கி­களின் பங்கு, ஐந்து லட்­சம் கோடி ரூபாய்க்­கும் அதி­க­மாக உள்­ளது. இவ்­வங்­கி­கள், வாராக்­க­ட­னுக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டி உள்­ள­தால், அவற்­றின் சொத்து மதிப்பு குறைந்து வரு­கிறது.அத­னால், வங்­கி­கள் புதிய கடன்­களை தாரா­ள­மாக வழங்க முடி­யாத நிலை­யில் உள்ளன. இது, நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சி­யில், தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி வரு­கிறது.


இந்­நி­லை­யில், ‘பொதுத் துறை வங்­கி­களை வலுப்­ப­டுத்த, அடுத்த இருஆண்­டு­களில், 2.11 லட்­சம் கோடி ரூபாய், பங்கு மூல­த­ன­மாக வழங்­கப்­படும்’ என, நேற்று முன்­தி­னம், மத்­திய அரசு அறி­வித்­தது.


சவால்:

இதை பாராட்டி, ரிசர்வ் வங்கி கவர்­னர், உர்­ஜித் படேல் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: மத்­திய அர­சின் ஊக்­கு­விப்பு திட்­டம், இந்­திய வங்கித் துறைக்கு புத்­து­யி­ரூட்­டும். நாட்­டின் எதிர்­கால பொரு­ளா­தா­ரத்தை பாது­காக்க, நினைவு கூறும் நட­வ­டிக்கை இது என­லாம். வங்­கித் துறை­யின் சவால்­களை சமா­ளிக்க, அவ்­வப்­போது, கொள்­கை­கள் அறி­விக்­கப்­ப­டு­வது வழக்­கம். ஆனால், 10 ஆண்­டு­களில், முதன்­மு­றை­யாக, அனைத்து சவால்­க­ளை­யும் சமா­ளிப்­ப­தற்­கான, ஒருங்­கி­ணைந்த மற்­றும் ஒத்­தி­சை­வான கொள்கை அறி­விப்பு, தற்­போது வெளி­யி­டப்­பட்டு உள்­ளது.


பயன்கள்:

வலு­வான பங்கு மூல­த­னம் உள்ள வங்­கி­களும், அவற்­றின் சீரிய செயல்­பா­டு­களும் தான், நிலை­யான பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு அடிப்­படை தேவை­யா­கும். இந்த வகை­யில், மத்திய அரசு சரி­யான தரு­ணத்­தில், ஊக்­கு­விப்பு திட்­டத்தை அறி­வித்­துள்­ளது. இத்­திட்­டத்­தில் பல்­வேறு பயன்­கள் கிடைக்­கும். மறு பங்கு மூல­தன கடன் பத்­தி­ரங்­கள் வெளி­யீடு மூலம், வங்­கி­களில் பணப்­பு­ழக்­கம் பெரு­கும். பொதுத் துறை வங்கி பங்­கு­களில், சில்­லரை முத­லீட்­டா­ளர்­களின் பங்கு அதி­க­ரிக்­கும்.


அடுத்து, சிறந்த நிதிச் செயல்­பா­டு­க­ளு­டன், விரைந்து கடன் வழங்க, புதிய பங்கு மூல­த­னத்தை பயன்­ப­டுத்­தும் வங்­கி­க­ளுக்கு, முன்­னு­ரிமை அந்தஸ்து கிடைக்­கும். வங்­கி­களின் வாராக்­க­டன் பிரச்­னையை சமா­ளிக்க, மத்­திய அரசு எடுத்­துள்ள நட­வ­டிக்­கை­களை, ரிசர்வ் வங்கி சார்­பாக வர­வேற்­கி­றேன்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.


மத்திய அரசின் வங்கி ஊக்குவிப்பு திட்டம்
* வங்­கி­க­ளுக்கு, 2.11 லட்­சம் கோடி ரூபாய் பங்கு மூல­த­னம் வழங்­கப்­படும்


எப்படி திரட்டப்படும்?
* பட்­ஜெட் ஒதுக்­கீட்­டில், 18 ஆயி­ரம் கோடி ரூபாய்
* மறு­பங்கு முத­லீட்டு கடன் பத்­தி­ரங்­கள் மூலம், 1.35 லட்­சம் கோடி ரூபாய்
* வங்­கி­களில், மத்­திய அர­சின் பங்கு விற்­பனை மூலம், 56 ஆயி­ரம் கோடி ரூபாய்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)