பதிவு செய்த நாள்
26 அக்2017
16:02

புதுடில்லி : இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல்-செப்டம்பர்), பயணிகள் வாகன ஏற்றுமதியில் மாருதி சுசுகி நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.
இந்த காலக்கட்டத்தில், மாருதி சுசுகி நிறுவனம் 57,300 பயணிகள் வாகனங்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் மாருதி சுசுகி 54,008 வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்த நிலையில், மொத்த ஏற்றுமதி 6 சதவீதம் அதிகரித்துள்ளதால் இந்நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது. வாகன ஏற்றுமதியில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனத்தின் பயணிகள் வாகன ஏற்றுமதி 17 சதவீதம் வளர்ச்சி கண்டு 50,410-ஆக உயர்ந்துள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 45,222 பயணிகள் வாகனங்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 48 சதவீத வளர்ச்சியாகும். இந்நிறுவனம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
நான்காவது இடத்தில் உள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஏற்றுமதி 44,585-ஆக உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 29 சதவீதம் சரிவாகும். ஃபோர்டு மற்றும் நிசான் மோட்டார் இந்தியா ஆகிய நிறுவனங்கள் ஐந்து மற்றும் ஆறாவது இடங்களில் இருக்கின்றன. இந்த நிறுவனங்களின் ஏற்றுமதி முறையே 42,412 மற்றும் 30,872-ஆக உள்ளது. முன்னணி கார்களின் பட்டியலில் மாருதி சுசுகி நிறுவனத்தின் மாடல்கள் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றன. நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில், டாப் 10 பட்டியலில் இந்நிறுவனத்தின் 7 மாடல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் மாருதி ஆல்டோ முதலிடத்தைப் பிடித்துள்ளது. எனினும் செப்டம்பர் மாதத்தில் அதிகம் விற்பனையான 10 கார்களில் இந்நிறுவனத்தின் டிசையர் மாடல் முதலிடம் பிடித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|