பதிவு செய்த நாள்
26 அக்2017
23:41

புதுடில்லி : உலகளவில், குடும்ப நிறுவனங்கள் அதிகமுள்ள நாடுகளில், இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில், பங்குச் சந்தை பட்டியலில், 108 குடும்ப நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. சீனா, 167 குடும்ப நிறுவனங்களுடன், முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தை பிடித்துள்ள அமெரிக்காவில், 121 குடும்ப நிறுவனங்கள் உள்ளன.குடும்ப நிறுவனங்கள் பட்டியலில், 4- – 10 இடங்களில், பிரான்ஸ், ஹாங்காங், கொரியா, மலேஷியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, மெக்சிகோ ஆகியவை உள்ளன.
ஜப்பான் நீங்கலான, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், சந்தை மூலதனத்தில், இந்தியா, 5வது இடத்தை பிடித்துள்ளது; சர்வதேச அளவில், 22 இடத்தில் உள்ளது.சந்தை மூலதனத்தில், ஸ்பெயின், 3,000 கோடி டாலருடன், முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்த இடங்களில், நெதர்லாந்து, ஜப்பான், சுவிட்சர்லாந்து ஆகியவை உள்ளன.
‘இந்தியாவில், மூன்றாம் தலைமுறையினர் நடத்தும் குடும்ப நிறுவனங்கள், 60 சதவீதம் உள்ளன; இது, சீனாவில், 30 சதவீத அளவிற்கே உள்ளது’ என, ‘கிரெடிட் சூசி ரிசர்ச் இன்ஸ்டிடியூட்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|